search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் மூலம் புதுவையில் பா.ஜனதா காலூன்ற முயற்சி: சீமான் குற்றச்சாட்டு
    X

    கவர்னர் மூலம் புதுவையில் பா.ஜனதா காலூன்ற முயற்சி: சீமான் குற்றச்சாட்டு

    புதுவையில் கவர்னர் வில்லனாக செயல்படுகிறார். கவர்னர் மூலம் பா.ஜனதா காலூன்ற நினைக்கிறது என்று சீமான் குற்றம் சாட்டினார்.

    புதுச்சேரி:

    நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய இனமும், எதிர்கொள்ளும் சிக்கல்களும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் புதுவை சுதேசி மில் அருகே நடைபெற்றது.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக நிருபர்களுக்கு சீமான் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு இலவசமாக வழங்கும் பாடப் புத்தக அட்டைகள், ஆந்திர மாநில ஒட்டல்களில் பேப்பர் பிளேட்டுகளாக விற்கப்பட்டுள்ளது. இது குறித்து உண்மை தகவல்கள் வெளிவர வேண்டும். இதில் உரிய விசாரணை நடத்தப்பட்டு துறை அமைச்சர் இவ்விவகாரத்தில் பதிலளிக்க வேண்டும்.

    காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பா.ஜனதா இடையூறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. தமிழகத்தில் பா.ஜனதா தலையிட்டு ஆட்சி செய்கிறது. இதனை ஒப்புக் கொள்ளும் வகையில் அக்கட்சியின் சுப்பிரமணியசாமி பேசி வருகிறார்.

    புதுவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இருக்கும் போது கவர்னர் தலையிடுகிறார். சினிமாக்களில் கதாநாயகனும், வில்லனும் இருப்பார்கள்.


    அது போல புதுவையில் கவர்னர் வில்லனாக செயல்படுகிறார். கவர்னர் மூலம் பா.ஜனதா புதுவையில் காலூன்ற நினைக்கிறது. இதற்கு புதுவை மக்கள்தான் பதில் அளிக்க வேண்டும்.

    அரசியலுக்கு நடிகர் கமல் போல் இன்னும் பலர் வரவேண்டும். அப்படி வந்தால் நாட்டை ஒரு வழி பண்ணிவிடலாம். தமிழர்கள் நுகர்வோர் கலாச்சாரத்தில் இருந்து வெளியேற வேண்டும்.

    திரை புகழ் வெளிச்சத்தில் ஏற்கனவே 50 ஆண்டுகள் அழிந்து விட்டது.இனி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.திரையில் இருந்து தலைவர்களை தேட கூடாது. உழைப்பவர்களில் இருந்து தலைவரை தேட வேண்டும்.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    Next Story
    ×