search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரியால் ஏற்படும் பாதிப்பு குறித்து பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. குரல் எழுப்பும்: தம்பிதுரை
    X

    ஜி.எஸ்.டி. வரியால் ஏற்படும் பாதிப்பு குறித்து பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. குரல் எழுப்பும்: தம்பிதுரை

    ஜி.எஸ்.டி. வரியால் என்னென்ன பாதிப்பு ஏற்பட இருக்கின்றதோ அவற்றை எல்லாம் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்று தம்பிதுரை கூறினார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி.யை பொறுத்த வரையில் அப்போதைய முதல் -அமைச்சர் ஜெயலலிதா ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ஏற்றுக் கொள்ள வில்லை. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பல கட்டங்களாக தமிழகத்தின் நிதி நிலை ஆதாரமானது பாதிக்கக் கூடாது என்று குரல் எழுப்பினோம்.

    பிரதமர் மோடி தமிழகத்தின் நிதிநிலை பாதிக்காதவாறு மசோதாவில் திருத்தம் கொண்டுவரப்படும் என்று கூறினார்.

    இதையடுத்து பாராளுமன்றத்தில் சட்டம் வகுக்கப்பட்டதை இங்கும் ஆதரித்து தீர்மானம் செய்து இருக்கிறார்கள். ஆகவே இப்பொழுது நடைமுறைக்கு வந்திருந்தாலும் பல்வேறு நலன்கள் இருந்தாலும் ஒரு சில குறைபாடுகள் இருப்பதாக செய்திகள் வருகின்றது.


    குறிப்பாக பட்டாசு போன்ற துறைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற ஜி.எஸ்.டி.யால் என்னென்ன பாதிப்பு ஏற்பட இருக்கின்றதோ அவற்றை எல்லாம் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி மக்களுக்கு நல்லது செய்வதற்கு நாங்கள் பாடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×