என் மலர்

  செய்திகள்

  அம்மாவின் திட்டத்தை குறை கூறுவதா?: எம்.எல்.ஏ. வெற்றிவேல் மீது அமைச்சர் ஜெயக்குமார் பாய்ச்சல்
  X

  அம்மாவின் திட்டத்தை குறை கூறுவதா?: எம்.எல்.ஏ. வெற்றிவேல் மீது அமைச்சர் ஜெயக்குமார் பாய்ச்சல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அம்மா நிறைவேற்றிய காசிமேடு புதிய மீன்பிடி துறைமுகம் திட்டத்தை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்க கூடாது என்று வெற்றிவேல் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார்.
  சென்னை:

  சட்டசபையில் இன்று எம்.எல்.ஏ. வெற்றிவேல் பேசியதாவது:-

  ஆர்.கே.நகர் தொகுதியில் 47-வது வட்டத்தில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளது. தற்போது இந்த மீன்பிடி துறைமுகம் புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இது ஒரு தனிமையான இடம். படகுகள் வரும் வரை பெண்கள் காத்திருந்து மீன்களை வாங்கி விற்பார்கள்.

  தற்போதுள்ள இடம் சில்லரை வியாபாரிகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பானதாக இல்லை. இதற்காக நான் புதிய இடத்தை குறை சொல்லவில்லை. எனவே இங்கு தகுந்த பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். தனி காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

  புதிய மீன்பிடி துறைமுகத்தில் சில பிரச்சினைகள் இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

  எனவே மொத்த மீன் வியாபாரிகள், சில்லரை வியாபாரிகளை அழைத்து பேசி முதல்-அமைச்சர் தகுந்த தீர்வு காண வேண்டும்.

  அமைச்சர் ஜெயக்குமார்:- ஆசியாவிலேயே மிக சிறந்த மீன்பிடி துறைமுகமாக இதை அமைக்க மறைந்த முதல்-அமைச்சர் அம்மா ரூ.90 கோடி ஒதுக்கினார். இந்த துறைமுகத்தை அவர் திறந்து வைத்தார். தற்போது அமைக்கப்பட்டுள்ள இடம் ரூ.12 கோடி செலவில் அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்கிறது.

  முன்பு இருந்த இடம் சுகாதாரமற்றதாக இருந்தது. இது அதை விட 2½ மடங்கு பெரியது. 90 சதவீத மீனவர்கள் அங்கு சென்று விட்டார்கள்.

  அம்மாவே நிறைவேற்றிய இந்த திட்டத்தை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்க கூடாது. இது குறித்து ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதற்கு நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

  இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
  Next Story
  ×