search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவா?: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில்
    X

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவா?: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில்

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கட்சி அறிவித்துள்ள வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளித்துள்ளார்.
    மதுரை:

    அ.தி.மு.க. நிறுவனர், முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மதுரையில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த விழாவிற்கான பூமி பூஜை மதுரை ரிங்ரோடு மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்ட 12 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.



    பின்னர், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை தொடங்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக தன்னை அர்ப்பணித்த மகத்தான தலைவர்.

    அவர் தமிழகத்தில் கொண்டு வந்த சத்துணவு திட்டம், ஏழை, எளிய மாணவர்களின் வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்றியது. இப்படிப்பட்ட மகத்தான தலைவரின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சார்பில் கொண்டாடுகிறோம்.

    முதல் நிகழ்ச்சியாக மதுரையில் வருகிற 30-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவில் 75 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    இந்த விழாவில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளுகிறார்கள்.

    நிறைவு விழா சென்னையில் ஜனவரி மாதம் நடைபெறுகிறது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து அனைவரும் பங்கேற்கும் வகையில் பிரமாண்டமாக நடத்தப்படும்.



    வருகிற ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×