என் மலர்

  செய்திகள்

  தவறு செய்தவர்கள் யாராகினும் விசாரணையை சந்திக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்
  X

  தவறு செய்தவர்கள் யாராகினும் விசாரணையை சந்திக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா செய்ய முயன்ற வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் விசாரணையை சந்திக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
  திண்டுக்கல்:

  பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  விவசாயிகளுக்காக மத்திய அரசு 6 அம்ச திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. உற்பத்தியை மட்டும் பெருக்காமல் விவசாயிகள் வருமானத்தை 2 மடங்காக பெருக்குவதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பது பற்றி ஆலோசிக்கப்படும்.


  ஆர்.கே.நகரில் பணப்பட்டு வாடா செய்ய முயன்றதாக முதல்வர், அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் விசாரணையை சந்திக்க வேண்டும் என்பது நிரூபணமாகிறது.

  எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தமிழக அரசை கலைக்க வேண்டும் என ஆளுனரிடம் மனு கொடுத்துள்ளார். எதையும் உடனே செய்து விட முடியாது. தீர விசாரணை செய்த பிறகே முடிவு செய்யப்படும்.

  எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைப்பது என்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. மணல் குவாரிகளை தமிழக அரசு வரைமுறைபடுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம், புழல் சிறையில் பாகிஸ்தான் கொடி என தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×