என் மலர்

  செய்திகள்

  புதுவையில் ரூ.6945 கோடிக்கு பட்ஜெட்: நாராயணசாமி தாக்கல் செய்தார்
  X

  புதுவையில் ரூ.6945 கோடிக்கு பட்ஜெட்: நாராயணசாமி தாக்கல் செய்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. கூட்ட தொடரின் 4-வது நாளான இன்று நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுவை மாநிலத்துக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
  புதுச்சேரி:

  மொத்தம் ரூ. 6945 கோடிக்கான வரவு- செலவு அறிக்கையை சமர்ப்பித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

  வரவு- செலவு திட்டத்தில் திட்டம் சாராத தொகையாக ரூ.4445 கோடியும், திட்டம் சார்ந்த தொகையாக ரூ. 2,500 கோடியும் அடங்கும்.

  சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து வரும் பங்களிப்பு ரூ.4022 கோடியாகவும், மத்திய நிதி உதவி ரூ. 1411 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.  மத்திய சாலை நிதியையும் சேர்த்து மத்திய ஊக்கு விப்பு திட்டத்தில் ரூ. 361 கோடியும், எஞ்சி உள்ள தொகையான ரூ. 1151 கோடி, வெளிச்சந்தை மற்றும் பிற நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும்.

  மொத்த ஒதுக்கீடான ரூ. 6945 கோடியில் 60 சதவீதம் உறுதி செய்யப்பட்ட செலவினங்களான அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ரூ. 1650 கோடியும், ஓய்வூதியத்துக்கு ரூ.663 கோடியும், வட்டி மற்றும் கடன் தொகையை திருப்பி செலுத்த ரூ. 1112 கோடியும், மின்சாரம் கொள்முதல் செய்ய ரூ. 1012 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×