search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வின் இரு அணிகளும்  மக்களை ஏமாற்றுகிறார்கள்: சசிகலா புஷ்பா பேட்டி
    X

    அ.தி.மு.க.வின் இரு அணிகளும் மக்களை ஏமாற்றுகிறார்கள்: சசிகலா புஷ்பா பேட்டி

    அ.தி.மு.க.வின் இரு அணிகளும் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஓ.பன்னீர் செல்வம் அதிகாரத்தில் இருந்த போது மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று சசிகலா புஷ்பா கூறினார்.
    அவனியாபுரம்:

    மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக இன்று மதியம் சசிகலா புஷ்பா எம்.பி. மதுரை விமான நிலையத்துககு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் இரு அணிகளும் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஓ.பன்னீர் செல்வம் அதிகாரத்தில் இருந்த போது மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தற்போது அதிகாரத்தில் உள்ளவர்களும் எதுவும் செய்வதில்லை.

    ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா மரணம் குறித்தோ, தினகரன் குறித்தோ பேசவில்லை. அ.தி. மு.க.வின் இரு அணிகளும் மக்களை கோமாளி ஆக்குகிறார்கள். இது தமிகத்துக்கு துரதிருஷ்டவசமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×