search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  7 கோடி தமிழர்களுக்கு திராவிட கட்சிகள் துரோகம் செய்துவிட்டது: பொன்.ராதாகிருஷ்ணன்
  X

  7 கோடி தமிழர்களுக்கு திராவிட கட்சிகள் துரோகம் செய்துவிட்டது: பொன்.ராதாகிருஷ்ணன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் முறையாக திட்டங்களை செயல்படுத்தாமல் 7 கோடி தமிழர்களுக்கும் துரோகம் செய்து விட்டது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
  தாராபுரம்:

  திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழக பா.ஜ.க சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழக பா.ஜ.க விவசாய அணி தலைவர் பொன்.விஜயராகவன், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில செயற்குழு உறுப்பினர் கார்வேந்தன், விவசாய அணி மாநில துணைத் தலைவர் பார்த்தசாரதி, திருப்பூர் தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூ வரவேற்றார். மத்திய மந்திரிகள் பொன்.ராதா கிருஷ்ணன், பர்சோத்தம் ரூபாலா, மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினர். கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது,

  தமிழகத்தில் தஞ்சை, நாகப்பட்டினத்தை சேர்ந்த 6 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடைபெற்றது. அப்போது நான் விவசாய சங்க தலைவர் பாண்டியனை நேரில் சந்தித்து விவரம் கேட்டறிந்தேன். ஆனால் இங்குள்ள தமிழக அமைச்சர்கள் யாரும் அதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை, வரவுமில்லை. தற்போது ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க.வும், இதற்கு முன்பு ஆட்சி செய்த தி.மு.க.வும் மழை காலங்களில் காவிரி ஆற்றில் வரும் 300-டி.எம்.சி தண்ணீரை சேமிக்க தடுப்பணை கட்டவில்லை. இதனால் அந்த தண்ணீர் வீணாக சென்று கடலில் கலந்து கொண்டு இருக்கிறது.

  நீர் நிலைகளை பராமரிக்க மத்திய அரசு தமிழகத்திற்கு 110 கோடி ஒதுக்கீடு செய்தது. அதில் முதல் தவணையாக 51 கோடி வழங்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு அதனை செலவு செய்யாமல் மீதி 59 கோடியை வாங்காமல் விட்டு விட்டது. மேலும் தமிழகத்திற்கு 1546 கோடி வறட்சி நிவாரண நிதியும், 228 கோடி புயல் நிவாரண நிதியும் வழங்கப்பட்டது. இவ்வாறு மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. ஆனால் தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் முறையாக திட்டங்களை செயல்படுத்தாமல் 7 கோடி தமிழர்களுக்கும் துரோகம் செய்து விட்டது.

  கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயி அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்களை நான் நேரில் சந்தித்து பேசினேன். மேலும் அவர்கள் குடியரசு தலைவர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், விவசாய அமைச்சர் ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது அவர்களிடம் தமிழகத்திற்கு தேவையான வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டது. விவசாய கடன் தள்ளுபடி செய்வது மாநில அரசின் கையில்தான் உள்ளது என விளக்கி கூறப்பட்டது. ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் உண்ணாவிரதம், மண்சோறு சாப்பிடுகிறோம், நிர்வாண போராட்டம் என தினமும் ஒரு போராட்டத்தை அறிவித்து நடத்தி வந்தனர். அதில் மண்சோறு சாப்பிடுகிறோம் என்று பத்திரிக்கையாளர்கள் முன்பு மேல் பகுதியை மட்டும் சாப்பிட்டு விட்டு, தரையில் இருந்த மீதி உணவை அப்படியே எடுத்து சென்று குப்பையில் கொட்டினர்.


  இதை எந்த ஒரு விவசாயியும் அனுமதிக்க மாட்டான். அது போன்று பிரதமர் அலுவலகம் சென்று திரும்பிய அவர்கள் பெங்களூரை சேர்ந்த விவசாயி ஒருவர் நிர்வாண கோலத்துடன் ஓட அதைப்பார்த்த தமிழக விவசாயிகளும் நிர்வாணத்துடன் ஓட ஆரம்பித்தனர். எந்த ஒரு தமிழனும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டான். எதற்கும் கைவிடப்படாத அவர்களின் போராட்டம் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் அழைப்பை ஏற்றுக் கைவிடப்பட்டது. இதில் இருந்தே தெரிந்து கொள்ள வேண்டாமா? இந்த போராட்டத்தை பின்னிருந்து இயக்கியவர் யார் என்று.

  இவ்வாறு சுமார் 50 வருடங்களுக்கு மேல் திராவிட கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டது. எனவே அவர்களை அனுப்பி விட்டு பா.ஜ.க ஆட்சியில் அமர வைக்க வேண்டியது தமிழக மக்களின் கடமை.

  இவ்வாறு அவர் பேசினார்.

  தொடர்ந்து கழகங்கள் இல்லா தமிழகம், கவலை இல்லா தமிழகம் என்ற உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

  தொடர்ந்து மத்திய மந்திரி பர்சோத்தம் ரூபாலா பேசியதாவது:-

  விவசாயிகளின் புண்ணிய பூமியான தாராபுரத்தில் மண் எடுத்து நெற்றியில் திலகமிட்டுக் கொள்ளவே நான் இன்று இந்த மண்ணுக்கு வந்து உள்ளேன். விவசாயிகள் பிரச்சனையில் முதல் குரல் இங்கிருந்துதான் வந்தது என்பதை நான் அறிவேன். நமது பிரதமர் 13 வருட காலம் குஜராத் முதல்வராக இருந்தபோதும், நாட்டின் பிரதமராக இருக்கும் இந்த 3 ஆண்டு காலத்திலும் ஒருநாள் கூட விடுமுறை எடுத்தது கிடையாது. நாட்டிற்காக 18 மணி நேரம் உழைக்கும் தலைவர் அவர். தமிழகத்தில் 35 லட்சம் லிட்டர் வரை பால் உற்பத்தியாகிறது. ஆனால் குஜராத்தில் நாள் ஒன்றுக்கு 2 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதற்கு காரணம் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் தான். அதுபோன்று சங்கங்கள் இங்கும் உள்ளது. ஆனால் ஆட்சியாளர்கள் கையில் இருப்பதால் வளர்ச்சி பெற முடியவில்லை.

  இதுபோன்று நிலக்கடலை, பருத்தி உட்பட பல்வேறு விவசாய பொருட்கள் உற்பத்தியிலும் குஜராத் அளப்பறிய சாதனை படைத்து உள்ளது. அதை தமிழக விவசாயிகளான நீங்கள் நேரில் வந்து பார்வையிட்டால் சிறப்பாக இருக்கும் என எண்ணுகிறேன். கருப்புப்பண ஒழிப்பில் நமது பிரதமர் மிகப்பெரும் சாதனை புரிந்துள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எங்களிடம் குடும்ப ஆட்சி கிடையாது. ஊழல் குற்றச்சாட்டு என்ற கறை கிடையாது. எனவே அது போன்றதொரு நல்லாட்சி தமிழகத்தில்அமைந்திட நீங்கள் பா.ஜ.க.வை ஆதரிக்க வேண்டும் மோடி அரசு மலர வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் ருத்ரகுமார், மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ், நகர தலைவர் விவேகானந்தன், மாவட்ட இயற்கை விவசாய அணி தலைவர் சுகுமார், சின்னகுமரவேல், சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தெற்கு மாவட்ட விவசாய அணித்தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.
  Next Story
  ×