என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஸ்களின் எண்ணிக்கையை குறைப்பதை விடுத்து, நிர்வாகத்தை சீர்திருத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
Byமாலை மலர்4 April 2017 2:59 AM GMT (Updated: 4 April 2017 2:59 AM GMT)
அரசு போக்குவரத்து கழகங்கள் லாபத்தில் இயங்க பஸ்களின் எண்ணிக்கையை குறைப்பதை விடுத்து, நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை:
பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இழப்பைத் தடுக்கும் நோக்குடன் பஸ்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் 360 பஸ்கள் உட்பட தமிழகம் முழுவதும் 3,300 அரசு பஸ்களை நிறுத்த போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டுள்ளன.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயங்கவைக்க ஏராளமான வழிகள் உள்ளன. பஸ்கள் மூலம் சரக்குப் போக்குவரத்து சேவை தொடங்குவது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இடையே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களின் மூலம் வருவாய் ஈட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் வருவாய் ஈட்டுகின்றன.
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வசூலிக்கும் அதே கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பஸ்கள் நல்ல லாபத்தில் இயங்கும்போது, அரசுப் பஸ்கள் மட்டும் இழப்பில் இயங்கினால் அதற்கு காரணம் போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் ஊழலும், நிர்வாகக் குறைபாடுகளும் தான் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். அதற்கேற்ற வகையில் திட்டங்களை தயாரித்து செயல்படுத்துவதன் மூலம் தான் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க முடியும்.
மாறாக, அரசு பஸ்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு முடிவு செய்திருப்பதைப் பார்க்கும்போது, அரசு பஸ்கள் நிறுத்தப்பட்ட வழித்தடங்களை எல்லாம் தனியாருக்கு தாரைவார்க்க தீர்மானித்து அதற்காகத் தான் இத்தகைய நாடகங்கள் நடத்தப்படுகின்றனவோ என்ற ஐயம் எழுகிறது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இருந்தால், பஸ்களின் எண்ணிக்கையை குறைப்பதை விடுத்து, போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் ஊழலுக்கு முடிவு கட்டி, நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story
×