என் மலர்

  செய்திகள்

  ரேசன் கடைகள் முன்பு மு.க.ஸ்டாலின் நடத்தும் போராட்டம் மக்களை சிரமப்படுத்தும்: செல்லூர்ராஜூ பேட்டி
  X

  ரேசன் கடைகள் முன்பு மு.க.ஸ்டாலின் நடத்தும் போராட்டம் மக்களை சிரமப்படுத்தும்: செல்லூர்ராஜூ பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரேசன் கடைகள் முன்பு தி.மு.க. வினர் போராட்டம் நடத்த உள்ளனர். இது தேவை இல்லாதது. மக்களை சீரமப்படுத்தும் செயலாகும் என்று அமைச்சர் செல்லூர்ராஜூ கூறினார்.

  திருப்பரங்குன்றம்:

  திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிட்டங்கியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் கிட்டங்கியிலிருந்து நியாய விலை கடைகளுக்கு விநியோகிக்க கூடிய அரிசி, பச்சரிசி ஆகியவை இருப்பு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

  பிறகு அமைச்சர் செல்லூர்ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

  மதுரை மாவட்டத்தில் உள்ள 1337 கூட்டுறவு அங்காடிகளுக்கும் தோப்பூர்கடச்சனேந்தல் வெங்கடாச்சலபுரத்தில் உள்ள கிட்டங்கிகளில் இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இங்கு போதுமான பொருட்கள் இருப்பில் உள்ளது.

  இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் தமிழகத்தில் மட்டும்தான் அ.தி.மு.க. ஆட்சியில் ஓரு கோடியே 90லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப கோதுமை, பச்சரிசி, சர்க்கரை, மண்எண்ணை வழங்கப்பட்டு வருகிறது.

  மேலும் சிறப்பு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் துவரம்பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் போன்றவை தி.மு.க. ஆட்சியை காட்டிலும் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசம் மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம், குஜராத் மாநிலங்களில் அரிசி விலை ரூ.6முதல் 10க்கு விநியோகிக்கப்படுகிறது.

  தி.மு.க.ஆட்சியில் வழங்கப்பட்டதை காட்டிலும் அ.தி.மு.க.ஆட்சியில் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், உளுந்தம் பருப்பு, கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.


  தரமான பொருட்கள் வழங்கவேண்டும் என்பதற்காகவும் கடும் வறட்சி காரணமாகவும் டெண்டர் விடுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இன்னும் ஓருவாரத்தில் இது சரியாகிவிடும். நான் எதிர்கட்சிதலைவர்தான். எதிரி கட்சி தலைவர் அல்ல. மக்கள் சேவையில் ஆளுங்கட்சிக்கு துணையாக செயல்படுவேன் என்று கூறிய தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது நாடகம் ஆடுகிறார். அவரது நாடகம் மக்களிடம் எடுபடாது. தி.மு.க. வின் போராட்டம் தேவை இல்லாதது. மக்களை சீரமப்படுத்தும் செயலாகும்.

  இவ்வாறு அவர் கூறினர்.

  பேட்டியின் போது ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.

  Next Story
  ×