என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டது பற்றி நீதிவிசாரணை நடத்த வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
கோவில்பட்டி:
கோவில்பட்டிக்கு இன்று வந்த மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் மக்கள் அதை விரும்பவில்லை. தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாடகை நாற்காலியில் அமர்ந்துள்ளார். இது நிரந்தரமானது அல்ல.
சட்டமன்ற நுழைவு வாயிலில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தது தவறு. சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதத்தை ஏற்க முடியாது. அதே போன்று சபாநாயகரும் தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளதையும் ஏற்க முடியாது. இதற்காகவா பொதுமக்கள் அவர்களை தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பினர்.
சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு நடந்திருந்தால் அதுக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும்.
கடந்த வருடமே நீட் தேர்வு தமிழகத்தில் நடத்தப்படும் என்று தெரியும். ஆனால் அது குறித்து ஒரு விவாதமாவது சட்டமன்றத்தில் இதுவரை நடத்தினார்களா? இப்போது தேர்வு நடைபெற உள்ள நிலையில் அதை வேண்டாம் வேண்டாம் என்று கூறுகிறார்கள்.
தேர்வை எதிர்கொள்ளும் திறனை தமிழக மாணவர்களுக்கு இந்த அரசு அளிக்கவில்லை. கடந்த 50 வருடங்களாக திராவிட கட்சிகள் தமிழக மாணவர்களை இதே நிலையில் வைத்துள்ளனர். மாணவர்களின் முன்னேற்றத்திற்காகத்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 2000 அரசு பள்ளிகளை மூடியுள்ளனர். இதனால் சுமார் 2 லட்சம் மாணவர்கள் இலவச கல்வியை இழந்துள்ளனர். அதே நேரத்தில் 500 தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அரசு பள்ளிகளை மூட தமிழக அரசுக்கு உரிமை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.