என் மலர்

  செய்திகள்

  மனித நேயமக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டியளித்த போது எடுத்த படம்.
  X
  மனித நேயமக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டியளித்த போது எடுத்த படம்.

  சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்: ஜவாஹிருல்லா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சட்டமன்றத்தை கூட்டி யாருக்கு பெரும்பான்மை என்பதை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என தூத்துக்குடியில் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
  தூத்துக்குடி:

  தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இன்று வந்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஆனால் இங்கு நிரந்தர ஆளுநர் இல்லாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 22-ந் தேதி முதல் அசாதாரண சூழல் நிலவுகிறது.

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் வெளிப்படை தன்மை இல்லை. ஜெயலலிதா மரணம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்க ஜனாதிபதி உத்தரவிட வேண்டும்.

  பலம் வாய்ந்த கட்சியான அ.தி.மு.க.வை பிளவுபடுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. சட்டமன்றத்தை கூட்டி யாருக்கு பெரும்பான்மை என்பதை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×