என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பொங்கலுக்கு முன்பு மதுக்கடைகளை மூட வேண்டும்: பா.ம.க. பொதுக்குழு தீர்மானம்
Byமாலை மலர்30 Dec 2016 1:52 PM IST (Updated: 30 Dec 2016 1:52 PM IST)
பொங்கல் திருநாளுமான தை முதல் நாளுக்குள் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூட வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திண்டிவனம்:
பா.ம.க. புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடந்தது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 15 நாட்களாகி விட்ட நிலையில், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கு வழிகாட்டும் பலகைகள் இன்னும் அகற்றப்படாதது கண்டிக்கத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து வழிகாட்டும் பலகைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். அதேபோல், உச்சநீதிமன்றம் அளித்துள்ள கால அவகாசமான மார்ச் மாதம் வரை காத்திருக்காமல் தமிழ் புத்தாண்டும், பொங்கல் திருநாளுமான தை முதல் நாளுக்குள் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூட வேண்டும்.
தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்தில் முடிவடைவதால், அதற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால், தேவையற்ற அரசியல் சட்ட சிக்கல்கள் ஏற்படலாம். எனவே, 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்து, மார்ச் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கோருகிறது.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்க கடுமையான விதிகள் வகுக்கப்பட்டால் மட்டுமே ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று தேர்தல் திருத்தங்களை செய்வதற்கு தேவையான சட்டத்திருத்த மசோதாவை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றும்படி மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
உழவர்களைக் காப்பாற்றுவதற்காக தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளிலும், கூட்டுறவு வங்கிகளிலும் உழவர்கள் வாங்கிய அனைத்து வகைக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்; வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும், பணப்பயிர்களுக்கு சந்தை மதிப்புக்கு ஏற்றவகையிலும் இழப்பீடு வழங்க வேண்டும், உழவுத் தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25,000 வழங்க வேண்டும். உயிரிழந்த உழவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதித்து காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கி அவசர சட்டம் பிறப்பிப்பது தான் ஒரே தீர்வு ஆகும். எனவே, இதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்து, அதை உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்து, வரும் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்பட்டு வந்த நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டு, அச்சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாறாக புதிய நுழைவுத்தேர்வை திணிப்பது சட்டத்திற்கு முரணானது ஆகும். இதை உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு மட்டும் விலக்கு பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கிகளில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
வார்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் கடந்த இரு நாட்களாக ஆய்வு செய்த நிலையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசு ரூ.5000 கோடி நிதி உதவி வழங்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story
×