search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 தொகுதிகளில் அ.திமு.க. தீவிர பிரசாரம்
    X

    3 தொகுதிகளில் அ.திமு.க. தீவிர பிரசாரம்

    அ.தி.மு.க. அரசின் சாதனைகள் அடங்கிய ஜெயலலிதா பேசும் குறும்படத்தை காட்டி 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    சென்னை:

    தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அ.தி.மு.க.வினர் கடந்த 3 நாட்களாக முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    3 தொகுதிகளிலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் அ.தி.மு.க.வினர் வீடு வீடாக ஓட்டு கேட்டு வருகின்றனர்.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதால் 3 தொகுதி பிரசாரத்திற்கும் செல்ல இயலாது. இதனால் அ.தி.மு.க.வில் நிர்வாகிகள் பல குழுக்களாக நியமிக்கப்பட்டு தொகுதிகளில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இதில் அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகள், திட்டங்கள் ஆகியவற்றை குறும்படமாக தயாரித்து அதை பொது மக்களுக்கு ‘டேப்லெட்’ மூலம் காண்பித்து வீடு வீடாக ஓட்டு கேட்டு வருகின்றனர்.

    தஞ்சை தொகுதியில் காண்பிக்கப்படும் குறும் படத்தில் “காவிரி பிரச்சனைக்காக சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி காணும் காவிரித் தாய், நமது முதல்-அமைச்சர் அம்மா என்று காண்பிக்கப்படுகிறது. இறுதியில் வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு” என்று முடிக்கப்படுகிறது.

    சுமார் ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த குறும்படத்தை பார்க்கும் பொதுமக்கள் பலர் வாட்ஸ்-அப்பில் எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்கின்றனர்.

    இதேபோல் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள், ஜெயலலிதா தொடங்கி வைத்த திட்டங்கள், சாதனைகளை குறும்படமாக தயாரித்து ‘டேப்லெட்’ மூலம் மக்களுக்கு காண்பித்து ஓட்டு கேட்டு வருகின்றனர்.

    இதுபற்றி அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன் கூறுகையில், “முதல்-அமைச்சரின் சாதனைகளை நாங்கள் குறும்படமாக தயாரித்து அதை மக்களுக்கு ‘டேப்’ மூலம் காண்பிப்பதுடன், டுவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றிலும் வெளியிட்டு வருகிறோம்.

    அ.தி.மு.க. ஆட்சியின் 100 நாள் சாதனைகளை குறும் படமாக 2 நிமிடம் ஓடக்கூடிய அளவில் தயாரித்து அதையும் செல்போன் மூலம் பார்க்கும் வகையில் வெளியிட்டு வருகிறோம்” என்றார்.
    Next Story
    ×