என் மலர்

  செய்திகள்

  தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் நவம்பர் 19-ம் தேதி பொது விடுமுறை
  X

  தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் நவம்பர் 19-ம் தேதி பொது விடுமுறை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள 3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ள 19-ம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  சென்னை:

  தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. வேட்பு மனுதாக்கல் முடிவடைந்து வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.

  இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் நவம்பர் 19-ம் தேதி மூன்று தொகுதிகளிலும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கூறியிருப்பதாவது:-

  தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் 19-ம் தேதி பொது விடுமுறை விடப்படுகிறது.

  இந்த தொகுதிகளை உள்ளடக்கிய கரூர், தஞ்சாவூர், மதுரை மாவட்டங்கள் மற்றும் இந்த தொகுதிகளில் வாக்குரிமை உள்ள அண்டை மாவட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 19-ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடவேண்டும். மூன்று தொகுதிகளிலும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை விடப்படுகிறது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×