search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
    X

    காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

    காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    திமுக பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

    தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்திற்கு பிறகு ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். மேலும் சட்டமன்றத்தை கூட்டி அவசர மற்றும் சிறப்பு தீர்மானத்தை கொண்டு வர வேண்டும்.

    விவசாய சங்க பிரதிநிதிகளை கூட்டிக் கொண்டு புதுடெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை, முடிந்தால் ஜனாதிபதியை  நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தி.மு.க., காங்கிரஸ் இடையில் அதிருப்தி நிலவி வருவதாக வெளியாகி வரும் செய்திகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்க ஸ்டாலின் மறுத்துவிட்டார்.

    Next Story
    ×