என் மலர்

  செய்திகள்

  உள்ளாட்சி தேர்தல்: 4 லட்சத்து 97ஆயிரத்து 840 வேட்புமனுக்கள் பரிசீலனை
  X

  உள்ளாட்சி தேர்தல்: 4 லட்சத்து 97ஆயிரத்து 840 வேட்புமனுக்கள் பரிசீலனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 97 ஆயிரத்து 840 பேர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை தொடங்கியது.
  சென்னை:

  தமிழ்நாட்டில் உள்ள 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 31 மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள், 1 லட்சத்து 31 ஆயிரத்து 794 பதவி இடங்களுக்கு 2 கட்டமாக 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

  தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கியது.

  அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களும், சுயேட்சைகளாக போட்டியிட விரும்புபவர்களும் மனுதாக்கல் செய்தனர்.

  நேற்று கடைசி நாள் என்பதால் வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக கூட்டம் அலை மோதியது.

  கடைசி நேரத்தில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் அவசர அவசரமாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.

  கடைசி நேரத்தில் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் வரிசையில் நின்று தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இதில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு இதுவரை மொத்தம் 3,155 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

  உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 97 ஆயிரத்து 840 பேர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை தொடங்கியது.

  இதில் ஒவ்வொரு வேட்பாளரின் பெயரும், அந்த வார்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று உள்ளதா? அதற்கான ஆவணம் இணைக்கப்பட்டுள்ளதா? சொத்து விவரம் குறிப்பிடப்பட்டுள்ளதா? போன்ற விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

  இன்று மதியம் வரை மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை திரும்ப பெறுவதற்கு 6-ந்தேதி கடைசி நாளாகும். அதன்பிறகு சின்னத்துடன் கூடிய வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
  Next Story
  ×