என் மலர்

  செய்திகள்

  சென்னை மாநகராட்சி தேர்தல்: 3,155 மனுக்கள் தாக்கல்
  X

  சென்னை மாநகராட்சி தேர்தல்: 3,155 மனுக்கள் தாக்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இதுவரை சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்காக 3,155 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன
  சென்னை:

  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கியது. இதில் சென்னையில் உள்ள 200 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட ஏராளமானோர் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்தனர்.

  கடந்த 1-ந் தேதி வரை சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்காக 2 ஆயிரத்து 108 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. கடைசி நாளான நேற்று மனுத்தாக்கல் செய்ய கூட்டம் அலைமோதியது. அதன்படி நேற்று மட்டும் 1,047 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

  வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இதுவரை சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்காக 3,155 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
  Next Story
  ×