என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நடு நிலையாக இல்லை: முத்தரசன் பேட்டி
Byமாலை மலர்3 Oct 2016 10:59 AM GMT (Updated: 3 Oct 2016 10:59 AM GMT)
தமிழக உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நடுநிலையாக இல்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டியளித்துள்ளார்.
சேலம்:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று சேலத்திற்கு வந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
காவிரியில் முறையாக கர்நாடாக தண்ணீர் திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் பல முறை உத்தரவிட்டும் மீண்டும் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது. மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசும் தயக்கம் காட்டி வரும் நிலையில் கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம், சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி விவாதிக்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் தேவகவுடா உண்ணாவிரதம் இருக்கிறார். இது பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையில் தாக்குவதை விட மிக மோசமாகும்.
சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிப்பதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு அனைத்து கட்சிகளுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி போராடும்.
தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படாமல் உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு ஒதுக்கீட்டை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பே அந்த பட்டியல் அ.தி.மு.க.வுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தான் தேர்தல் தேதி அறிவித்த மறு நாளே அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள். அதன் மறுநாள் அ.தி.மு.க வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்கிறார்கள்.
இந்தியகம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் சேர்ந்து இந்த உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்த உண்மை நிலையை தமிழக தலைமை செயலாளர் மக்களுக்கு தெரிவிக்க உரிமை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
×