என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கச்சத்தீவு விவகாரம் பற்றி ஜெயலலிதா பேச்சு: சட்டசபையில் தி.மு.க-காங்கிரஸ் வெளிநடப்பு
Byமாலை மலர்23 Jun 2016 1:22 PM IST (Updated: 23 Jun 2016 1:22 PM IST)
சட்டசபையில் கச்சத்தீவு விவகாரம் பற்றி காரசார விவாதம் நடைபெற்றது. இதில் பேச வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறி மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சென்னை:
சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
அப்போது அரசு செய்துள்ள சாதனைகள் குறித்தும், அடுத்து செயல்படுத்த இருக்கும் திட்டங்கள் பற்றியும் எடுத்து கூறினார்.
பின்னர் தொடர்ந்து பேசிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது குறித்து பேசினார். அவர் பேசியதாவது:-
1974-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது குறித்து நான் கடந்த 20-ந்தேதி சட்டமன்றத்தில் பேசினேன். இதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி 21-ந்தேதி பதில் அளித்துள்ளார்.
அதில் “கச்சத்தீவை தாரை வார்க்க ஒரு போதும் துணை போகவில்லை என்று அவர் கூறியுள்ளார். திடீரென்று ஒரு நாள் பத்திரிகையில் அறிவிப்பு வந்ததாகவும் தாம் கடுமையாக எதிர்த்ததாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
கச்சத்தீவை விட்டுக்கொடுக்க ஒருநாளும் சம்மதிக்கவில்லை என்று கூறும் கருணாநிதி டெசோ மாநாட்டில் கச்சத்தீவை உரிமை கொண்டாட பல சலுகைகளை பெற்றதாக அந்த தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால் கச்சத்தீவை விட்டுக் கொடுக்க இவரும் உடந்தையாக இருந்ததாக தானே அர்த்தம்” என்றார்.
அப்போது துரைமுருகன் (தி.மு.க.) எழுந்து விளக்கம் அளிக்க முயற்சி செய்தார். தி.மு.க. உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவாக எழுந்து நின்று குரல் கொடுத்தனர். சபாநாயகர் அவர்களை உட்காரும்படி கூறினார். என்றாலும் அனுமதி வேண்டும் என்று துரை முருகன் வற்புறுத்தினார்.
முன்னதாக கச்சத்தீவு பற்றி முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேச தொடங்கியதும் தி.மு.க. உறுப்பினர்கள் அவ்வப்போது எழுந்து நின்று குரல் கொடுத்தனர்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்னும் கச்சத்தீவு தொடர்பான கேள்விகள் இருக்கின்றன. நான் பேசி முடித்ததும் உங்கள் கருத்துக்களை சொல்லலாம் என்றார்.
என்றாலும் தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து எழுந்து நின்று குரல் கொடுத்தனர். அ.தி.மு.க. உறுப்பினர்களும் தொடர்ந்து பதில் குரல் எழுப்பினார்கள். இதனால் கூச்சல்-குழப்பமாக இருந்தது.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரும் தங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
சபாநாயகர்:- தி.மு.க. உறுப்பினர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு முதல்-அமைச்சர் பேசும் போது குரல் எழுப்ப வேண்டும், வெளிநடப்பு செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே திட்டமிட்டு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா:-
கச்சத்தீவு பற்றி பேச தொடங்கிய உடனேயே அவர்களுக்கு பதில் சொல்ல முடியாது என்ற பயம். இதனால் தேவையில்லாமல் கூச்சலிட்டு இடையூறு செய்தார்கள். உங்களிடம் நான் எந்த பதிலும் எதிர்பார்க்கவில்லை. உங்கள் கட்சி தலைவரிடம் தான் பதிலை எதிர்பார்க்கிறேன். நான் பேசி முடித்த பிறகு பதில் சொல்லுங்கள் என்று கூறினேன். என்றாலும் அவர்களால் பதில் சொல்ல முடியாது என்பதால் வெளிநடப்பு செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
வெளிநடப்பு செய்த தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் சிறிது நேரம் கழித்து சபைக்கு திரும்பினார்கள்.

Next Story
×