search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மக்களுக்காக நான் என்று சொல்லும் ஜெயலலிதா சொத்தை விற்று மக்கள் பிரச்சினையை தீர்ப்பாரா? குஷ்பு ஆவேசம
    X

    மக்களுக்காக நான் என்று சொல்லும் ஜெயலலிதா சொத்தை விற்று மக்கள் பிரச்சினையை தீர்ப்பாரா? குஷ்பு ஆவேசம

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு மதுரவாயல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர். ராஜேஷை ஆதரித்து திறந்த வேனில் பிரசாரம் செய்தார்.

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு மதுரவாயல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர். ராஜேஷை ஆதரித்து திறந்த வேனில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:–

    மதுரவாயல் பகுதி வெள்ளத்தால் பாதித்தபோது ஜெயலலிதா வந்தாரா? இல்லை துணை மேயர் பெஞ்சமின்தான் வந்தாரா?

    தேர்தல் முடிந்ததும் ஜெயலலிதா கோடநாடு சென்று விடுவார். இந்த தடவை அவர் நிரந்தரமாக அங்கு தான் இருக்கப்போகிறார்.

    மக்களால் நான், மக்களுக்காக நான் என்று ஜெயலலிதா கூறுகிறார். அப்படி என்றால் கோடிக்கணக்கான சொத்தை விற்று மக்களின் பிரச்சினையை தீர்க்கலாமே? அதை செய்ய மாட்டார்.

    இந்த அரசு பாலில் தண்ணீர் கலந்து ஊழல் செய்துள்ளது. மின்சாரத்தில் 525 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு லிட்டர் பாலில் ஏழு ரூபாய் குறைக்கப்படும்.

    அ.தி.மு.க. அரசின் சாதனை என்பது தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்தது தான். மக்களுக்கு இப்போது தேவை கல்வி, வேலை வாய்ப்பு தான். இலவசங்கள் அல்ல. மக்கள் மாற்றத்துக்கு தயாராக இருக்கிறார்கள். தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×