
பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
* மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நிலையை ஒழிப்பதற்காக தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன
* அரசுத்துறை உட்பட அனைத்து துறைகளிலும் டிஜிட்டலில் பணம் செலுத்தும் வசதிகள் உள்ளன.
* மின்சக்தி வீணடிக்கப்படுவதை தவிர்க்க 35 கோடி எல்இடி பல்புகள் வழங்கப்பட்டுள்ளன.
* இலவச எல்இடி பல்புகளால் ரூ.18,341 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
* தொழிலாளர் முன்னேற்றத்துக்கான சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும்
* தேசத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் மகளிர் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்
* பொது வாழ்க்கையில் பெண்களின் பங்களிப்பு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது
* பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதை தேர்தல் முடிவுகளும் காட்டுகின்றன.
* சுய உதவிக்குழு பெண்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன் பெற அனுமதி வழங்கப்படும்.

* என்ஆர்ஐ-கள் இந்தியா வந்த உடனேயே ஆதார் அட்டை வழங்கப்படும்- 180 நாள் காத்திருப்பு தேவையில்லை
* உலகத்தரத்தில் 74 புதிய சுற்றுலா மையங்கள் ஏற்படுத்தப்படும்.
* வங்கிகளில் வாராக்கடன் கடந்தாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது
* பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி முதலீட்டு மூலதனம் தரப்படும்
* பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக சீரமைப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும்
* வங்கிசாரா நிதி நிறுவனங்களை ஊக்குவிக்க நடவடிக்கை.
* அடுத்த 5 ஆண்டில் நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி அரசு முதலீடு செய்யும்
* வீட்டுக்கடன் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்
* பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கு குறைந்தபட்சம் 51 சதவீதமாக நீடிக்கும்
* பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ.1.05 லட்சம் கோடி நிதி திரட்ட திட்டம்
* இந்தியாவின் சர்வதேச கடன் அளவு நாட்டின் ஜிடிபியில் 5 சதவிகிதத்துக்குள் உள்ளது
* ஏர் இந்தியா பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும்.
* பார்வையற்றோரும் தெரிந்துகொள்ளும் வகையில் 1,2,5,10,20 ரூபாய் புதிய நாணயங்கள் வெளியிடப்படும்
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.