என் மலர்
  Thunivu
  Thunivu

  துணிவு

  சான்றிதழ்: UA
  ரேட்டிங்: 3.75/5
  வகை: அதிரடி, திரில்லர்
  ரிலீஸ் தேதி: 2023-01-11
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கதைக்களம்

  வங்கியை கொள்ளை அடிக்க திட்டமிடும் குழு அதனை சரியாக செய்து முடித்தார்களா என்பதே கதை.

  விமர்சனம்

  துணிவு

  சென்னையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டு ஒரு குழு உள்ளே நுழைகிறது. இதனிடையே முன்கூட்டியே வங்கியை கொள்ளையடிக்க திட்டமிட்டு அஜித்தின் குழு உள்ளே நுழைந்திருக்கிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த குழு, அஜித்தை எதிர்க்கிறது. ஒருக்கட்டத்தில் திட்டம் என்னுடையது என்று அஜித் கூறினாலும் கொள்ளையடிக்கும் பணத்தை பிரித்துக் கொள்வதில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இரு குழுவும் கொள்ளை முயற்சியில் ஈடுபடுகிறது.

   


  அஜித்தின் திட்டத்தை நிறைவேற்ற மஞ்சு வாரியர் அவருக்கு வெளியில் இருந்து உதவுகிறார். மறுபுறம் இந்த கொள்ளையை தடுத்து கொள்ளையர்களை பிடிக்க சமுத்திரக்கனி தலைமையில் காவல்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. அஜித்தின் திட்டப்படி கொள்ளை வெற்றிகரமாக முடிந்ததா? கொள்ளையடிக்க மேற்கொள்ளும் திட்டங்கள் என்ன? கொள்ளையர்களை காவலர்கள் பிடித்தார்களா? எதர்க்காக இந்த கொள்ளை முயற்சி நடைபெற்றது? என்பதே படத்தின் மீதிக்கதை.

   


  நீண்ட இடைவேளைக்கு பிறகு நெகடிவ் கதாப்பாத்திரத்தில் நடித்து அஜித் அசத்தியுள்ளார். பஞ்ச் வசனங்கள், நடனம் என அனைத்திலும் பார்வையாளர்களை ரசிக்கும்படி செய்து முந்தைய படங்களில் எதிர்மறை விமர்சனங்கள் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். படத்தின் தொடக்கத்தில் தோன்றும் அஜித்தின் எனர்ஜி படத்தின் இறுதிவரை இடம்பெறுவது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடுவதற்காகவே இப்படி ஒரு படத்தை அவர் தேர்வு செய்துள்ளார்.

   


  கொள்ளையடிக்கும் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மஞ்சு வாரியர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுகிறார். போலீஸ் கமிஷ்னராக வரும் சமுத்திரக்கனி இயல்பான நடிப்பை கொடுத்து கவனம் ஈர்க்கிறார். மேலும் படத்தில் இடம்பெறும் ஜான் கொகேன், ஜிஎம்.சுந்தர், மகாநதி சங்கர், மோகனசுந்தரம், பகவதி பெருமாள், தர்ஷன் என பலரும் தங்களின் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

   


  வங்கி, அதற்கு பின் வாடிக்கையாளர்களிடம் நடக்கும் கொள்ளையையும், கொள்ளையர்கள் வங்கியை கொள்ளையடிக்க திட்டமிடும் விஷயங்களையும் மையக்கருவை வைத்து படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் எச்.வினோத். ஆக்‌ஷன் கதையில், மக்களை ஏமாற்றும் விஷயங்களை சமூக பொறுப்புடன் எடுத்திருக்கிறார். கதைக்கு தேவையற்ற மாஸ் காட்சிகள், ஓபனிங் காட்சிகள் போன்று இடம்பெற செய்யாமல் கதைக்கு தேவையான விஷயங்களை மாஸாக காட்டி பாராட்டுக்களை பெறுகிறார். அஜித்தின் நடனம், பஞ்ச் வசனங்கள் இடம்பெற செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இரண்டாம் பாதி விறுவிறுப்பு குறைவு. வங்கிக்காக அமைத்திருக்கும் செட்டிற்கு சற்று கூடுதலாக உழைத்திருக்கலாம்.

   


  இயக்குனர் நினைத்ததை அழகாக காட்சிப்படுத்தி விருந்தளித்துள்ளார் ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா. ஜிப்ரான் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறது. பாடல்கள் கேட்கும் ரகம். சில்லா சில்லா பாடல் திரையரங்கை அதிரவைத்துள்ளது.


   

  மொத்தத்தில் துணிவு - வெற்றி.

  ×