என் மலர்
    Pathan
    Pathan

    பதான்

    Director: NA
    Editor: NA
    Camera: NA
    Music: NA
    Release: 2023-01-26
    OTT: NA
    Points:
    Week
    Rank
    Point
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கதைக்களம்

    நாட்டை அழிக்க நினைப்பவர்களிடம் இருந்து எப்படி மீட்கிறார் என்பதே பதான்.

    விமர்சனம்

    பதான்

    இந்திய உளவாளியாக இருந்த ஜான் ஆபிரகாம், ஒரு பிரச்சனையில் இருக்கும் போது, இந்தியா உதவாததால், நாட்டை அளிக்க முடிவு செய்கிறார். இதற்காக, ரத்த வித்து' என்ற ஆபரஷனை செய்கிறார். இதன் மூலம் கொடிய நோயை மீண்டும் இந்தியாவில் பரப்ப அவர் திட்டமிடுகிறார்.




    இந்த ஆபரேஷனை தடுக்கவும், ஜான் ஆபிரகாமை பிடிக்கவும், இந்திய உளவாளியான ஷாருக்கான் களமிறங்குகிறார். இறுதியில் ஜான் ஆபிரகாமை, ஷாருக்கான் பிடித்தாரா? ரத்த வித்து ஆபரேஷன் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.




    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஷாருக்கான், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். காதல், செண்டிமெண்ட் என நடிப்பில் பளிச்சிடுகிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார். இவரது உடல் அமைப்பு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஆங்காங்கே காமெடியில் சிரிக்கவும் வைத்திருக்கிறார்.

     


    நாயகியாக வரும் தீபிகா படுகோனே, அழகால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். இவரது நடனமும், சண்டைக் காட்சியும், ரசிகர்களை சீட்டிலேயே உட்கார வைத்திருக்கிறது. வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் ஜான் ஆபிரகாம். ஷாருக்கானுக்கு இணையாக இவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சல்மான் கானின் நடிப்பு ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் ஷாருக்கான், சல்மான் கான் பேசும் உரையாடல் சிறப்பு.



    ஹாலிவுட் பட பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சித்தார்த் ஆனந்த். சில காட்சிகள் பிரம்மாண்டமாக இருந்தாலும், பல காட்சிகள் லாஜிக் மீறல்களாகவே அமைந்துள்ளது. இதை கொஞ்சம் கவனித்து இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். ஹெலிகாப்டரை ஜான் ஆபிரகாம் கையில் இழுப்பது, ஜெட் விமானத்தில் இருந்து அடுக்குமாடிக்கு குதிப்பது, ரெயில் சண்டை, பனி சரக்கு சண்டை என அனைத்தும் லாஜிக் மீறல் கலந்த சுவாரஸ்யம்.



    விஷால் ஷேகர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. குறிப்பாக ஜான் ஆபிரகாமின் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. சச்சித் பவுலோஸின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.



    மொத்தத்தில் ‘பதான்’ பதட்டம்.

    ×