என் மலர்
  காட்டுப்பய சார் இந்த காளி
  காட்டுப்பய சார் இந்த காளி

  காட்டுப்பய சார் இந்த காளி

  சான்றிதழ்: NA
  ரேட்டிங்: 3.0/5
  வகை: NA
  ரிலீஸ் தேதி: 2018-03-08 00:00:00
  படக்குழுவினர்
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கதைக்களம்

  யுரேகா இயக்கத்தில் ஜெய்வந்த் - ஐரா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘காட்டுபய சார் இந்த காளி’ படத்தின் விமர்சனம். #KaatuPayaSirInthaKaaliReview #Jeivanth

  விமர்சனம்

  காட்டுப்பய சார் இந்த காளி

  சைக்கோ கொலையாளியையும், அவனின் பின்னணியையும் கண்டுபிடிக்கும் காட்டுப்பய போலீஸ் தான் இந்த காளி. பைனான்ஸ் நிறுவனம் ஒன்றின் மூலம் வாங்கப்பட்ட வாகனங்கள் அடையாளம் தெரியாத சைக்கோவால் இரவு நேரத்தில் எரிக்கப்படுகின்றன. 

  அந்த சைக்கோவை கண்டுபிடிக்க முரட்டு போலீசான ஜெய்வந்த் மீண்டும் நியமிக்கப்படுகிறார். இந்த நிலையில் ஜெய்வந்த்தின் நண்பர் ஒருவர் அந்த பைனான்ஸ் நிறுவனத்தில் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தவிக்கிறார். பணத்தை திருப்பி செலுத்தாததால் அவரது மனைவியை பைனான்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துவிடுகின்றனர். அதிலிருந்து மீள முடியாமல் ஜெய்வந்த்தின் நண்பனின் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

  இந்த நிலையில், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வரும் நாயகி ஐரா தங்கி இடமின்றி தவிக்கிறார். நாயகியை ஒரு விடுதியில் தங்க வைக்கிறார் ஜெய்வந்த். பின்னர் விடுதியில் பிரச்சனை ஏற்படுவதால், ஐரா, ஜெய்வந்த்துடன் தங்குகிறார்.  கடைசியில் அந்த சைக்கோ யார்? எதற்காக வாகனங்களை எரிக்கிறார்? ஜெய்வந்த் அந்த சைக்கோவை பிடித்தாரா? பைனான்ஸ் நிறுவனத்தினருக்கு தண்டனை கிடைத்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை. 

  இன்ஸ்பெக்டர் காளியாக ஜெய்வந்த் தனது மீசையை முறுக்கிக்கொண்டே இருக்கிறார். அவரின் கட்டுமஸ்தான உடலும் வசன உச்சரிப்பும் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறது. அழகு பதுமையாக வரும் ஐரா திரையில் மின்னுகிறார். அதிகம் வேலையில்லை என்றாலும், வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது.

  உயர் போலீஸ் அதிகாரியாக வரும் ‘ஆடுகளம்’ நரேனின் கம்பீரமான தோற்றமும், நடிப்பும் கச்சிதம். மார்வாடியாக வரும் சி.வி.குமார், அவரது தம்பியாக வந்து வில்லத்தனங்கள் செய்யும் அபிஷேக், போலீஸ்காரராக வரும் மூணாறு ரமேஷ், மானேஜராக வரும் மாரிமுத்து என படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரும் ஓரளவுக்கு நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டவராக வந்து கம்பீரமாக வசனம் பேசும் ’கயல்’ தேவராஜ் நடிப்பு சிறப்பு.  பிழைப்புக்காக மற்ற மாநிலத்திலிருந்து இங்கு வரும் சிலரால், பாதிக்கப்படும் நம் மாநில மக்கள் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் யுரேகா. படம் முழுக்க பிரசாரமாக இருக்கிறது. நல்ல ஒருவரி கதையையும் சரியான நடிகர்களையும் ஒன்றிணைத்த யுரேகா திரைக்கதையை வலுவாக்கி விறுவிறுப்பான காட்சிகளை அமைத்து ரசிக்கும்படி படமாக்கியிருந்தால் இந்த ‘காளி’க்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும்.

  விஜய் சங்கரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். மணி பெருமாளிள் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.

  மொத்தத்தில் ‘காட்டுபய சார் இந்த காளி’ வலுக்கூட்டியிருக்கலாம். #KaatuPayaSirInthaKaaliReview #Jeivanth

  ×