என் மலர்
  ஹோட்டல் டிரான்ஸில்வானியா 3 சம்மர் வெகேசன்
  ஹோட்டல் டிரான்ஸில்வானியா 3 சம்மர் வெகேசன்

  ஹோட்டல் டிரான்ஸில்வானியா 3 சம்மர் வெகேசன்

  சான்றிதழ்: NA
  ரேட்டிங்: NA
  வகை: NA
  ரிலீஸ் தேதி: 2018-07-20 00:00:00
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கதைக்களம்

  இரண்டு பாகங்களாக வந்து ரசிகர்களை கவர்ந்த ஹோட்டல் டிரான்ஸில்வானியா தற்போது மூன்றாவது பாகமாக சம்மர் வெகேசன் என்னும் பெயரில் வெளியாகி இருக்கிறது. இதன் விமர்சனம்...

  விமர்சனம்

  ஹோட்டல் டிரான்ஸில்வானியா - 3 சம்மர் வெகேசன்

  மனிதர்களுக்கு பயந்து பயந்து வாழ்கின்றன பூதங்கள். மனிதர்கள் எந்த நேரத்திலும் தங்களைக் கொன்றுவிடுவார்கள் என்கிற அச்சத்தில் இருக்கும் பூதங்களுக்கு, ஒரே அடைக்கலம ஹோட்டல் டிரான்ஸில்வேனியாதான். மனிதர்களின் கால் தடம் கூட பதியாத ஒரு காட்டுக்குள் ஹோட்டல் ஒன்றை மான்ஸ்டர்களுக்காக மட்டுமே நடத்தி வருகிறது 540 வயதான கௌன்ட் டிராகுலா. 

  இவரின் மனைவி மார்த்தாவை மனிதர்கள் கொலை செய்துவிட, மனிதர்களை வெறுக்கிறார் கௌன்ட் டிராகுலா. டிராகுலாவின் மகள் மேவிஸுக்கு 118 வது (ஆம் 118) பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாட நினைக்கிறார் டிராகுலா. மகளுக்கோ ஹோட்டலைவிட்டு வெளியே சென்று, மனிதர்களை ஒருமுறையேனும் பார்க்க வேண்டும் என்று ஆசை. மகள் முன் பூதங்களையே மனிதர்களாகச் சித்திரித்து ஏமாற்றிவிடுகிறார் டிராகுலா. டிராகுலாக்களும், பூதங்களும் அங்கு வந்து ஜாலியாக டைம்பாஸ் செய்கிறார்கள். மனிதர்கள் என்றாலே மோசமானவர்கள் என்ற நிலைப்பாட்டை எடுக்கிறாள் மேவிஸ். 

  முதல் பாகத்தை (2012) விட இரண்டாம் பாகத்தில் (2015) காமெடிக் காட்சிகள் குறைவு என அலுத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்குப் மூன்றாம் பாகமான ஹோட்டல் டிராஸில்வேனியா 3 : சம்மர் வெக்கேஷன் வெளியாகி இருக்கிறது.

  ஒரு குட்டி ப்ளாஷ்பேக்குடன் கதை ஆரம்பிக்கிறது. கௌன்ட் டிராகுலா நண்பர்களுடன் ரயிலில் புடாபெஸ்ட் செல்ல, அங்கு வரும் வேன் ஹெல்சிங், இவர்களைக் கொல்ல முடிவு செய்கிறார். வழக்கம் போல, டிராகுலா வென்றுவிட, எப்படியேனும் பழிவாங்குவேன் என சபதம் எடுக்கிறார்.  நிகழ்காலத்தில், ஹோட்டலில் வேலை செய்து போரடித்ததால், ஜாலியாகக் கப்பலில் சுற்றுலா செல்ல திட்டமிடுகிறாள் மேவிஸ். ஒட்டுமொத்த பூதக்கூட்டமும் அங்கு செல்ல, களைகட்டுகிறது. கப்பலின் கேப்டனாக வேன் ஹெல்ஸிங்கின் கொள்ளுப்பேத்தி எரிக்கா. 

  டிராகுலாவுக்கு எரிக்கா மேல் காதல் வருகிறது. இறுதியில் வேன் ஹெல்ஸிங் டிராகுலாவை பழி தீர்த்ததா? வேன் ஹெல்ஸிங்க்கின் பேத்தி எரிக்காவுக்கும் டிராகுலாவுக்கும் இடையேயான காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

  ஹோட்டலுக்குப் பதிலாக புதிய இடம், கப்பல், ரயில், விமானம் என கலர் புல்லாக இருக்கிறது இந்த பாகம். வண்ணவண்ண மீன்கள், புதிய கோணத்தில் பெர்முடா முக்கோணம் என ஒவ்வொரு காட்சியிலும் அனிமேஷன் அருமை. குழந்தைகளை இது அதிகம் மகிழ்விக்கும். 

  மொத்தத்தில் கலர்புல்லான காட்சிகளால் ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறது ஹோட்டல் டிரான்ஸில்வானியா இந்த சம்மர் வெக்கேஷன்.
  ×