என் மலர்
  இன்க்ரெடிபில்ஸ் 2
  இன்க்ரெடிபில்ஸ் 2

  இன்க்ரெடிபில்ஸ் 2

  சான்றிதழ்: NA
  ரேட்டிங்: 4.5/5
  வகை: NA
  ரிலீஸ் தேதி: 2018-06-22 00:00:00
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கதைக்களம்

  பிராட் பர்டு இயக்கத்தில் கிரெய்க் டி.நெல்சன் - ஹாலி ஹன்டர், சாமுவேல் எல் ஜாக்சன், சோபியா புஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `இன்க்ரெடிபில்ஸ் 2' படத்தின் விமர்சனம். #Incredibles2

  விமர்சனம்

  இன்க்ரெடிபில்ஸ் 2

   இன்க்ரெடிபில்ஸ் படத்தின் முதல் பாகத்தில் சூப்பர் ஹீரோக்களான கிரெய்க் டி.நெல்சன், அவரது மனைவி ஹாலி ஹன்டர் மற்றும் இவர்களது குழந்தைகள் சாரா வவ்வல், ஸ்பென்சர் ஃபாக்ஸ் மற்றும் முன்னாள் ஹீரோவான ஜேசன் லீ இணைந்து உலகத்தை காப்பாற்றி இருப்பார்கள். இரண்டாவது பாகத்தில் கிரெய்க் - ஹாலிக்கு மூன்றாவதாக ஒரு குழந்தை பிறக்கிறது.

  இந்த பாகத்தில் சூப்பர் ஹீரோக்கள் சட்டப்படி இயங்கவில்லை என்று அவர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அவர்கள் இந்த உலகத்திற்கு எதுவும் செய்ய வேண்டாம். சாதாரண மனிதர்களாக வாழ்ந்தால் போதும் என்று அரசு சார்பில் உத்தரவிடப்படுகிறது. இது சூப்பர் ஹீரோவான இன்க்ரெடிபில்ஸ்சுக்கு வருத்தத்தை கொடுத்ததால், நாம் நல்லது செய்தாலும் அவர்களுக்கு அது தப்பாகவே தெரிகிறது, நாம் நல்லவர்கள் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.   இந்த நிலையில், ஒரு பெரிய நிறுவனம் ஒன்று சூப்பர் ஹீரோக்கள் மீது தவறு இல்லை என்பதை நாம் நிரூபிப்பதாகவும் என்றும், சூப்பர் ஹீரோக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று கூறுகின்றனர். ஆனால் அதற்காக ஒரு வேலை செய்ய வேண்டும் என்றும், அதற்கு ஹீரோவின் மனைவியான ஹாலி ஹன்டர் தான் அதற்கு பொருத்தமானவர் என்று அவளை தேர்வு செய்கின்றனர். இதனால் கவலைக்குள்ளாகும் கிரெய்க், தனது மனைவியை அந்த வேலைக்கு அனுப்பி விட்டு அவர்களது குழந்தைகளை கவனிக்க ஆரம்பிக்கிறார். 

  இந்த நிலையில், வில்லனான ஸ்கிரீன் ஸ்லேவர் பற்றிய தகவல்களை ஹாலி ஹன்டர் கவனித்து வருகிறார். மேலும் ஒரு குற்றம் செய்ததாக ஸ்கீன் ஸ்லேவரையும் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். மேலும் சூப்பர் ஹீரோக்கள் நல்லது செய்பவர்கள் தான் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவு செய்து அனைத்து நாட்டு அதிபர்கள் மற்றும் சூப்பர் ஹீரோக்கள் ஒரு கப்பலில் கூடுகின்றர். அதில் சூப்பர் ஹீரோக்களை நல்லவர்களாக அறிவிக்க ஒப்பந்தம் போடவும் திட்டமிடுகின்றனர்.   இந்த நிலையில், சூப்பர் ஹீரோக்களை கெட்டவர்களாக காட்ட அந்த கப்பலில் இருந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் ஸ்கிரீன் ஸ்லேவர் வசியம் செய்து அவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். 

  அந்த கப்பலி இதில் க்ரெய்க்கின் குழந்தைகள் கப்பலில் இல்லாததால், அவர்கள் ஸ்கிரீன் ஸ்லேவரின் வசியத்தில் இருந்து தப்பிக்கின்றனர். கடைசியில், சூப்பர் ஹீரோக்கள் ஸ்கிரீன் ஸ்லேவரின் வசியத்தில் இருந்து விடுபட்டார்களா? நாட்டை காப்பாற்றினார்களா? சூப்பர் ஹீரோக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்களா? அவர்களை காப்பாற்றியது யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.  படத்தில் கிரெய்க் கிரெய்க் டி.நெல்சன், அவரது மனைவி ஹாலி ஹன்டர், சாரா வவ்வல், ஸ்பென்சர் ஃபாக்ஸ் மற்றும் முன்னாள் ஹீரோவான ஜேசன் லீ என அனைவருமே காட்சிகளில் ரசிக்க வைத்துள்ளனர். குறிப்பாக கிரெய்க்கின் கடைசி குழந்தை செய்யும் குறும்பும், அட்டகாசமும் முக்கியமான காட்சியிலும், சிரிப்பை ஏற்படுத்தும்படியாக உள்ளது. 

  இன்க்ரெடிபில்ஸ் சூப்பர் ஹீரோக்கள் தங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க போராடும்படியாக கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் பிராட் பர்டு. படத்தில் விறுவிறுப்பும், குழந்தைதனமும், ஆக்‌ஷன், மாயாஜாலங்கள் என அனைத்தும் கலந்து படம் ரசிக்கும்படியாக இருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் கண்ணைக் கவர்கிறது.   மைக்கேல் கியாசினோவின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. மயார் அபுசயிதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

  மொத்தத்தில் இன்க்ரெடிபில்ஸ் 2 கவர்ச்சி. #Incredibles2 

  ×