என் மலர்
  ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்
  ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்

  ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்

  சான்றிதழ்: NA
  ரேட்டிங்: NA
  வகை: NA
  ரிலீஸ் தேதி: 2018-06-01 00:00:00
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கதைக்களம்

  கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிச்சர்டு த லயன் ஹார்ட் ரெபல்லியன் திரைப்படம் தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.

  விமர்சனம்

  ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்

  கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிச்சர்டு த லயன் ஹார்ட் ரெபல்லியன் திரைப்படம் தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.

  1173ம் ஆண்டு இங்கிலாந்தாகவும், பிரான்சாகவும் பிரிக்கப்பட்டது. இதில் பிரான்ஸ்க்கு பிரிக்கப்பட்ட பகுதியில் இங்கிலாந்துக்கு சொந்தமாக நகரங்கள் இருந்தது. இந்த இடத்தை வைத்து அப்பாக்கு எதிராக மகன்களை தூண்டி விட்டு பிரான்ஸ் பகுதி முழுவதையும் ஆக்கிரமிக்க முடிவு செய்தார்கள். இறுதியில் பிரான்ஸை இங்கிலாந்து கைப்பற்றிதா என்பதே படத்தின் கதை.  தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டது போன்று, ஐரோப்பாவில் நடந்த சகோதர சண்டை பற்றிய சரித்திரக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். மூன்று சகோதரர்களின் யுத்தமும், அதனால் ஏற்படும் விளைவையும் திரைக்கதையாக அமைத்திருக்கிறார்கள்.

  இதில் சாண்டலர் மானஸ், மைக்கேல் லூப்ஸ் கர்டோசோ, நெய்ல் கூல் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சண்டைக்காட்சியில் அதிக மெனக்கெட்டு நடித்திருக்கிறார்கள். ஸ்டெபினோ மில்லா இப்படத்தை இயக்கி இருக்கிறார். சரித்திர பின்னணியில் போர் காட்சிகள் அனைத்தையும் சிறப்பாக கையாண்டிருக்கிறார். பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்களை நாம் பார்த்துவிட்டதால் இப்படம் பார்க்கும் போது பிரம்மாண்டம் அதிகமாக தெரியவில்லை.  டாம் கேப்யுனோவின் பின்னணி இசையில் சிறப்பாக அமைந்துள்ளது. ஃபேப்ரிஸியோ மெய்னார்டியின் ஒளிப்பதிவு பிரியடு பிலிம்கான உணர்வை கொடுத்திருக்கிறார்.

  மொத்தத்தில் ‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ சுவாரஸ்யம் குறைவு.
  ×