என் மலர்
    தீரன் அதிகாரம் ஒன்று
    தீரன் அதிகாரம் ஒன்று

    தீரன் அதிகாரம் ஒன்று

    Director: H.Vinoth
    Editor: NA
    Camera: NA
    Music: NA
    Release: 2017-11-17 00:00:00
    OTT: NA
    Points:
    Week
    Rank
    Point
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கதைக்களம்

    கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வினோத் இயக்கத்தில் ரசிகர்களிடையே மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் விமர்சனம்

    விமர்சனம்

    தீரன் அதிகாரம் ஒன்று

    போலீஸ் அதிகாரி பயிற்சியை முடித்து, வீடு திரும்புகிறார் கார்த்தி. இவரது வீட்டின் அருகே இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வரும் நிலையில், பெற்றோர்களுக்கு தெரிந்து திருமணம் செய்து வைக்கிறார்கள்.

    போலீஸ் அதிகாரியாக பணிக்கு செல்லும் கார்த்தியிடம், பல கேசுகள் வருகிறது. இவரும் பல ரவுடிகளை பிடிக்கிறார். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் வீடுகளில் புகுந்து, கொலை மற்றும் கொள்ளை அடித்து ஒரு கும்பல் செல்கிறது. இதை கார்த்தி விசாரிக்க தொடங்குகிறார்.

    இந்த விசாரணையில், மர்ம கும்பல் இது போல் தமிழ்நாடு மட்டுமில்லாமல், பிற மாநிலங்களிலும் இது போன்று சம்பவங்களில் ஈடுபடுவதையும், அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் கார்த்தி அறிகிறார். இந்த விஷயத்தை உயர் அதிகாரிகளிடம் கார்த்தி கூற, அவர்கள் மெத்தன தனமாக விட்டுவிடுகிறார்கள்.

    இந்த சமயத்தில் எம்.எல்.ஏ. ஒருவர் வீட்டில் கும்பல் புகுந்து கொள்ளையடித்து, அவர்களை கொடூரமாக கொலை செய்துவிட்டு செல்கிறார்கள். இவர்களை பிடிக்க கார்த்திக்கு உத்தரவு வருகிறது. அப்போது, இந்த கும்பல் கார்த்தியுடன் வேலை பார்க்கும் இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட் வீட்டில் புகுந்து கொள்ளையடிக்கிறது. இதில் போஸ் வெங்கட் மனைவி இறக்க, குழந்தை ரகுல் வீட்டிற்கு சென்று விடுகிறது. இதனால், ரகுலையும் அந்த கும்பல் தாக்கி விட்டு சென்றுவிடுகிறார்கள்.

    இந்த தாக்குதலில் ரகுல் கோமா நிலைக்கு செல்கிறார். அந்த கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் கார்த்திக்கு பல இன்னல்கள் வருகிறது. இறுதியில் அந்த கும்பலை கார்த்தி பிடித்தாரா? கோமா நிலையில் இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் உயிர் பிழைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் கார்த்தி. ‘சிறுத்தை’ படத்தை விட 10 மடங்கு கம்பீரத்துடன் நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார். இந்தப் படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார் என்பது, படம் பார்க்கும்போது தெரிகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அசர வைத்திருக்கிறார்.

    நாயகியாக நடித்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் இப்படம் பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. கார்த்தியுடனான ரொமன்ஸ் காட்சிகளில் அப்லாஸ் பெற்றிருக்கிறார். நிஜத்தில் கணவன் – மனைவியான போஸ் வெங்கட் – சோனியா இருவரும், படத்திலும் கணவன் – மனைவியாகவே நடித்துள்ளனர். இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து படம் இயக்கியுள்ளார் வினோத். இந்த உண்மைச் சம்பவத்தை விரிவாகவும், ஆழமாகவும் அலசி ஆராய்ந்து அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சினிமாவாக உருவாக்கி இருக்கிறார். இதற்கு பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம்.

    போலீஸ் அதிகாரிகளின் உழைப்பு, பணிநேரம், சந்திக்கும் தடைகள், பிரச்சினைகள், சக அதிகாரிகளே மட்டம் தட்டுவது என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறார். கார்த்தியிடம் சிறப்பான நடிப்பை வாங்கி இருக்கிறார். முதல் பாதியில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் இடையேயான ரொமன்ஸ் காட்சிகளை குறைத்திருக்கலாம்.

    ஜிப்ரான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை திரைக்கதையின் விறுவிறுப்புக்குப் பலம் சேர்க்கிறது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், வடஇந்தியாவின் புழுதிக்காட்டையும் அப்படியே பதிவு செய்திருக்கிறது.

    மொத்தத்தில், தீரன் அதிகாரம் ஒன்றுக்கு ‘ஸல்யூட்’.
    ×