என் மலர்

    கரூர் - Page 2

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏராளமான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது
    • போலீசாரின் ரோந்து பணியின் போது சிக்கினர்

    கரூர், 

    கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை, லாலாப்பேட்டை, வெங்கமேடு, கரூர் டவுன், தோகைமலை ஆகிய பகுதிகளில், சட்டம் ஒழுங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலை, பொருட்களை விற்றதாக கந்தசாமி (வயது 72), குட்கா சாமிநாதன் (51), ஆனந்த் கிருஷ்ணா (54), செல்வம் (54), ராஜலிங்கம் (45), சங்கர் (48), அருண்குமார் (35), தமிழ்செல்வன் (30), கண்ணன் (62) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இரண்டு மகன்கள் உள்ள நிலையில் வீட்டை விட்டு சென்று விட்டார்
    • புகாரின் பேரில் வழக்கு பதிந்து தேடி வரும் போலீசார்

    கரூர்,

    தரகம்பட்டியை அடுத்த, சுண்டுக்குழிபட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). விவசாயி, இவரது மகள் சங்கீதா (28). இவருக்கு, அதே ஊரை சேர்ந்த கருணாகரன் என் பவருடன் திருமணமாகி, இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற சங்கீதா, அதன் பிறகு மீண்டும் வீட்டுக்கு திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தக வலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தனது மகளை கண்டுபிடித்து தருமாறு, முருகேசன் கொடுத்த புகாரின்படி, சிந்தாமணிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கரூர் போலீசார் சார்பில் நடைபெற்றது
    • 101 மனுக்கள் பெறப்பட்டு 51 மனுக்களுக்கு தீர்வு

    கரூர், 

    கரூர் மாவட்ட காவல் துறை சார்பில், சிறப்பு மனு விசாரணை முகாம், தான்தோன்றிமலையில், தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. முகாமை கரூர் எஸ். பி. சுந்தரவதனம் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, புகார்தாரர் மற்றும் எதிர் மனுதாரர்களிடம், ஸ்டேஷன் வாரியாக போலீசார் விசாரணை மற்றும் குறைகளை கேட்டறிந்தனர். இறுதியாக, 101 மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, 51 மனுக்கள் மீதான விசாரணை முடித்து வைக்கப்பட்டது.முகாமில், ஏ.டி.எஸ்.பி., கண்ணன், டி.எஸ்.பி.,க்கள் சரவணன், முத்தமிழ் செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சட்டப்பேரவையில் குளித்தலை எம்.எல்.ஏ. ரா மாணிக்கம் கேள்வி
    • சட்டசபை மானிய கோரிக்கை கூட்டத்தில் கேள்வி

    குளித்தலை ,

    தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. இதில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் பேசும் போது.இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துறையிலே நான் துணை கேள்வி கேட்பதற்கு அரிய வாய்ப்பினை வழங்கிய பேரவை தலைவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடந்த 4-ந் தேதி , அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாட்டில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 266 கோடி நலத்திட்டங்கள் மற்றும் 1494 சுய உதவிக்குழுக்களுக்கு 40 கோடி ரூபாய் வங்கி கடன்கள் வழங்கினார்கள்.அன்றை தினம் வருகை தந்த போது, கரூர் தாந்தோனி பகுதியில் உள்ள பூமாலை வணிக வளாகம் மரமாத்து பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அதனை விரைவில் முடிக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார், அந்த பணி முடிவு தருவாயில் உள்ளது எப்போது அந்த வணிக வளாகம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று பேசினார்.இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்கையில் முதல்வர் அவர்களுடைய திருக்கரங்களால் வருகின்ற மே மாதம் இறுதிக்குள் திறந்து வைக்கப்பட்டு, சுயஉதவிக்குழுக்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பணம் கேட்ட பார் உரிமையாளருக்கு பீர் பாட்டில் காட்டி மிரட்டல்
    • போலீசார் வழக்கு பதிந்து 3 பேரை கைது செய்துள்ளனர்

    கரூர், 

    குளித்தலை, சுங்ககேட் பகுதியில் திருச்சி நெடுஞ்சாலையில் கரூர் டாஸ்மாக் கடையுடன் பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரை, சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்த, ஆனையடி கிராமத்தை சேர்ந்த பிரவீன்ராஜ் (வயது 26) என்பவர் நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக இவரது உறவினர்கள் அன்புகுமார், மணி ஆகியோர் பாரில் வேலை செய்து வந்தனர். சம்பவத்தன்று மணத்தட்டையை சேர்ந்த யுவனேஸ்வரன் (வயது 27), அதே பகு தியை சேர்ந்த குமரவேல் (25), பாலாஜி, (28), ஆகிய மூவரும், பாரில் திண்பண் டங்களை சாப்பிட்டுவிட்டு, பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர். அப்போது, அவர்களிடம் பணம் கேட்டதற்கு, பீர் பாட்டிலை காட்டி மிரட்டியுளனர். இது கு றித்து பிரவீன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவனேஸ்வரன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 47 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
    • ஏராளமான குட்கா போதை பொருள் சிக்கியது

    கரூர்,

    கரூர் மாவட்ட, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா மற்றும் போலீசார், பாலவிடுதி, சின்னதாராபுரம், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சட்ட விரோதமாக மது விற்றதாக அய்யாக்கண்ணு (வயது 60), வசந்தா, (71), சண்முகம் (56) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து, 47 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோல், கரூர் டவுன், வாங்கல், தோகைமலை ஆகிய பகுதியில், சட்டம் -ஒழுங்கு போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட, புகையிலை, குட்கா பொருட்களை விற்றதாக கரூர் ஆசைதம்பி (46), வாங்கல் தங்கராசு (60), செம்மடை ராஜேஷ் (27), தோகைமலை சண்முகம் (53), ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு குடிநீர் தொட்டி பழுதடைந்துள்ளதால் சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது
    • சீரமைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது

    கரூர்,

    வெள்ளியணை, வாழியாம்புதுாரில் குடிநீர் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த அப்புசாமி என்பவர், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில், கூறியிருப்பதாவது: வாழியாம்புதுாரில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. தற்போது குடிநீர் தொட்டி பழுதடைந்துள்ளதால், அதன் உள்ளே இறங்கி துாய்மை பணி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கரூர் தபால் நிலையம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது

    கரூர்,

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சடையாண்டி துவக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் தாமோதரன் கோரிக்கை குறித்து பேசினார். மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணன், மாநில செயலாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.சாலை பராமரிப்பு ஊழி யர்கள் சங்க மாநில நிர்வாகி குப்புசாமி, வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க நிர்வாகி தனலட்சுமி உட்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். மகேந்திரன் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெள்ளியணை அருகே 20 அடி ஆழ விவசாயத்திற்கான கிணற்றில் துார் வாரும் போது விழுந்த 2 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்
    • தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    கரூர், 

    கரூர் நகரை சேர்ந்தவர்கள் சந்தோஷ் குமார் (வயது 24), சரவணன் (33) சாமிநாதன் (32), ஆனந்த் (30). இவர்கள் அனைவரும் கூலி தொழிலாளர்கள். இவர்கள், நான்கு பேரும், கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே ஆட்டையாம்பரப்பு பகுதியில், 20 அடி ஆழ விவசாய கிணற்றை, துார் வாரும் வேலைக்கு சென்றனர்.முதலில் சாமிநாதனும், ஆனந்தும் ராட்டையில் கயிறு கட்டி, அதன் மூலம் பாதுகாப்பாக கிணற்றில் இறங்கினர். பிறகு, சந்தோஷ்குமாரும், சரவணனும், கயிறு மூலம் கிணற்றில் இறங்கிய போது, ராட்டை அறுந்து விழுந்ததால், இருவரும் கிணற்றில் விழுந்தனர். தகவல் அறிந்த, கரூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று 'ஸ்ட்ரெச்சர்' மூலம், இருவரையும் உயிருடன் மீட்டு, சிகிச்சைக்காக, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிருஷ்ணராயபுரம் பகுதியில் நெல் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • குறுகிய நாட்கள் மகசூல் கொடுக்கும் நெல் பயிரிடப்பட்டுள்ளது

    கரூர்,

    கிருஷ்ணராயபுரம் அருகே, மகிளிப்பட்டி கிராமத்தில் நெல் நடவு பணியில் விவசாய தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மகிளிப்பட்டி கிராமத்தில் தற்போது, கிணறுகளில் தண்ணீர் இருப்பதால் விவசாயிகள், நெல் சாகுபடி செய்ய, நாற்றங்காலில் நெல் விதைகள் விதைத்தனர். இதையடுத்து, டிராக்டர் இயந்திரம் மூலம் உழவு செய்யப்பட்டு, நிலம் சமன்படுத்தப்பட்டது. நெல் வயல்களில் தற்போது, குறுகிய நாட்களில் வரக்கூடிய நெல் பயிர் நடவுப் பணியில், விவசாய தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடைபெற உள்ளது
    • கால்நடை ஆராய்ச்சி மையம் அழைப்பு

    கரூர்,

    கரூர் பண்டுதகாரன்புதூர்கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வரும் 31ம் தேதி நடக்கிறது. இதில் நாட்டுக்கோழி இனங்கள், வளர்ப்பு முறைகள், தீவனம் மற்றும் குடிநீர் பராமரிப்பு, நாட்டுக் கோழி களை தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள், மூலிகை மருத்துவ முறைகள், விற்பனை உத்திகள் மற்றும் பண்ணை பொருளாதாரம் ஆகிய தலைப்புகள் குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் நிபுணர்களால் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 31ம் தேதி காலை 10.30 மணிக்குள் நேரடியாக வந்து பங்கு கொள்ளுமாறும், மேலும் தகவலுக்கு இவ்வலுவலக தொலைபேசி எண்கள் 04324 294335 மற்றும் 73390 57073 மூலம் தொடர்பு கொள்ளுமாறும் மைய பேரா சிரியர் மற்றும் தலைவர் அருணாசலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print