என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • மகாதேவபுரா தொகுதியில் 1,00,250 வாக்குகள் ஐந்து வெவ்வேறு முறைகள் மூலம் திருடப்பட்டதாக அவர் கூறினார்.
    • ராகுல் காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    நடந்து முடிந்த கர்நாடகா, மாகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அரியானா சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல்களில் தேர்தல் ஆணையம் பஜகவுடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

    அவர் கூறியதாவது, "கர்நாடகாவில் 16 இடங்கள் கிடைக்கும் என்று எங்கள் உள் கணக்கெடுப்பு கணித்திருந்தது. ஆனால் எங்களுக்கு ஒன்பது இடங்கள் மட்டுமே கிடைத்தன. நாங்கள் 7 இடங்களில் ஏன் தோற்றோம் என்பதை ஆராய்ந்தோம்.

    குறிப்பாக மகாதேவபுரா தொகுதியில் 1,00,250 வாக்குகள் ஐந்து வெவ்வேறு முறைகள் மூலம் திருடப்பட்டதாக அவர் கூறினார். இதில் போலி வாக்காளர்கள், போலி முகவரிகள் மற்றும் ஒரே முகவரியில் பல வாக்காளர்கள், புகைப்படம் இல்லாத வாக்காளர்கள், படிவம் 6 முறைகேடு செய்தல் ஆகியவை அடங்கும்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, "மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டு தொடர்பான புகார்களை சட்டத்துறை விசாரிக்கும்.

    அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணையை முடித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிடப்படும்" என்று கூறினார்.

    இதற்கிடையே "ராகுல் காந்தி ஆதாரம் காட்ட வேண்டும் அல்லது தனது பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.  

    • ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.
    • ஆர்.வி.ரோடு முதல் பொம்மசந்திரா வரை 19.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மஞ்சள் நிற மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டது.

    கர்நாடகாவில் புதிதாக 3 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இன்று காலை 10.30 மணியளவில் தனி விமானத்தில் பெங்களூரு வந்திறங்கிய பிரதமர் பெங்களூரு சிட்டி ரெயில் நிலயத்தில் ரெயில்களை தொடங்கி வைத்தார்.

    இந்த வந்தே பாரத் ரெயில்கள் பெங்களூரூ - பெலகாவி, அம்ரிஸ்தர் - ஸ்ரீ மாதா வைஷ்ணோ கத்ரா, நாக்பூர் (அஜ்னி) - புனே வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

    இதேபோல் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்து மாணவர்களுடன் அதில் பயணம் செய்தார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் உடன் இருந்தார். 

    பெங்களூருவில் 76 கிலோ மீட்டர் தூரத்துக்கு, சல்லகட்டா முதல் ஒயிட்பீல்டு வரை ஊதா நிறப்பாதை, சில்க் நிறுவனத்தில் இருந்து மாதவரா வரை பசுமை நிறப்பாதை ஆகியவற்றில் மெட்ரோ இயங்கி வருகிறது.

    இந்நிலையில் ஆர்.வி.ரோடு முதல் பொம்மசந்திரா வரை 19.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மஞ்சள் நிற மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டது.

    இந்த பாதையில் பிரதமர் மோடி பச்சை கொடி அசைக்க இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது.

    இதை தொடர்ந்து ஜே.பி.நகர் 4-வது பிளாக் முதல் கடபுகெரே வரையிலான 3ஆம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் மோடி, மதியம் 3 மணியளவில் மீண்டும் டெல்லிக்கு தனது தனி விமானத்தில் திரும்புவார். 

    • 80,000 இருக்கைகளுடன் புதிய கிரிக்கெட் மைதானம் அமைகிறது.
    • இது இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

    இதனிடையே, பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை நகரின் மையப்பகுதியில் இருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற பரிசீலனை செய்து வருவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.

    இந்நிலையில், பெங்களூருவின் பொம்மசந்திரா பகுதியில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டத்திற்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    சூர்யா சிட்டியில் ரூ.1,650 கோடி செலவில் உருவாக்கப்பட உள்ள பிரமாண்ட விளையாட்டு வளாகத்தின் ஒரு பகுதியாக 80,000 இருக்கைகளுடன் கிரிக்கெட் மைதானம் அமைகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • ரஷிய தயாரிப்பான எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பினால் இந்த வெற்றி சாத்தியமானது.
    • இந்தியாவின் 3 ரஃபேல் உட்பட 6 இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்ட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

    26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மே 7 அன்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இதை தொடர்ந்து ஏற்பட்ட மோதல் மே 9 ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் பெங்களூருவில் இன்று நடைபெற்ற விமானப்படை அதிகாரிகளுக்கான கருத்தரங்கில் பேசிய இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங், ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் மற்றும் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்தார். 

    சுட்டு வீழ்த்தப்பட்ட மற்றொரு விமானம், AWACS (Airborne Warning and Control System) என அழைக்கப்படும் வான்வழி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு விமானம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இந்திய ராணுவம் வசம் உள்ள ரஷிய தயாரிப்பான எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பினால் இந்த வெற்றி சாத்தியமானது என்று அவர் தெரிவித்தார்.

    மே 7 தாக்குதலின் போது பயங்கரவாத இலக்குகள் சேதமடைவதன் முன்னாள் இருந்த நிலை மற்றும் அதன் பின்னால் சேதமடைந்த நிலை ஆகியவற்றின் செயற்கைக்கோள் படங்களையும் அவர் திரையிட்டு விளக்கினார்.

    ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று மத்திய அரசு கூறுகிறது.

    இதன்போது இந்தியாவின் 3 ரஃபேல் உட்பட 6 இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்ட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.   

    • அம்மா, அப்பா, நீங்கள் என்னை 14 வருடங்கள் நன்றாக வளர்த்தீர்கள். நான் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.
    • அறுந்த guitar string ஆல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 14 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காந்தர் என்ற ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இரவு தனது வீட்டில் அறுந்த guitar string இல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

    காந்தரின் தந்தை ஒரு இசைக் கலைஞர் ஆவார். அவரது தாயார் சவிதா ஒரு நாட்டுப்புறப் பாடகி. சம்பவம் நடந்தபோது சவிதா நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியாவில் இருந்தார்.

    தற்கொலைக் குறிப்பில், காந்தர், "அம்மா, அப்பா, நீங்கள் என்னை 14 வருடங்கள் நன்றாக வளர்த்தீர்கள், நான் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.

    ஆனால் இன்று நான் வெளியேற வேண்டிய நேரம் இது. நீங்கள் என் கடிதத்தைப் படிக்கும் நேரத்தில், நான் சொர்க்கத்தில் இருப்பேன்" என்று தற்கொலைக் குறிப்பில் எழுதிவைத்தான்.

    சிறுவனின் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அந்தச் சிறுவன் பிரபலமான ஜப்பானிய Anime தொடரான 'Death Note' தொடரை மிகவும் விரும்பி, இந்த நிகழ்ச்சியின் ஒரு கதாபாத்திரத்தின் படத்தை தனது அறையில் வரைந்திருப்பது தெரியவந்துள்ளது.

    எனவே இந்த தொடரின் தாக்கம் தற்கொலைக்கு காரணமாக இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    டெத் நோட் கதையில், ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவனுக்கு நரகத்திலிருந்து தவறுதலாக பூமியில் விழுந்த குறிப்பேடு கிடைக்கிறது. ஒருவரின் பெயரை மனதில் நினைத்துக்கொண்டு அதில் எழுதினால் அவர்கள் மரணிப்பார்கள்.    

    • டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
    • மக்களவைத் தேர்தலில் ஒருபோதும் வாக்களிக்காத 1 கோடி புதிய வாக்காளர்கள் மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

    2024 மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தேர்தல் ஆணையம் பாஜவுடன் சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக நேற்று, தேர்தல் ஆணைய தரவுகளை காண்பித்து செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

    கர்நாடகாவில் மகாதேவபுரா தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் திருடப்பட்டன, மகாராஷ்டிராவில் குறுகிய காலத்தில் 1 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் பல வாக்காளர்கள், புகைப்படம் இல்லாத வாக்காளர்கள், படிவம் 6 முறைகேடு உள்ளிட்ட 5 வழிகளில் மோசடி நடந்துள்ளதாக தெரிவித்தார்.

    மேலும், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்?, வீடியோ ஆதாரங்களை அழிப்பது ஏன்?, வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடியை தேர்தல் ஆணையம் செய்வது ஏன்?, எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், எதிர்க்கட்சிகளை மிரட்டுவது ஏன்?, பாஜகவின் ஏஜண்டைப் போல தேர்தல் ஆணையம் செயல்படுவது ஏன்? உள்ளிட்ட 5 கேள்விகளை ராகுல் எழுப்பினார்.

    அவரிடம் தரவுகளையும், எழுத்துபூர்பமான பிரகடனத்தையும் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

    இதற்கிடையே இன்று பெங்களூருவில் நடைப்பெற்ற தேர்தல் முறைகேடுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார்.

    அப்போது பேசிய அவர், இந்திய தேர்தல் ஆணையம் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட்டால் வாக்குகளை திருடித்தான் மோடி பிரதமராகி உள்ளார் என என்னால் நிரூபிக்க முடியும்.

    மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலில், எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் 4 மாதங்களுக்குப் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுகிறது. இது ஒரு ஆச்சரியமான முடிவு. நாங்கள் தரவுகளை ஆய்வுசெய்தபோது, 1 கோடி புதிய வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ததை அறிந்தோம்.

    மக்களவைத் தேர்தலில் ஒருபோதும் வாக்களிக்காத 1 கோடி புதிய வாக்காளர்கள் மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். இந்தப் புதிய வாக்காளர்கள் எங்கெல்லாம் வாக்களித்தார்களோ அங்கெல்லாம் பாஜக வெற்றி பெற்றது" என்று தெரிவித்தார்.

    • ஒரு கட்டிடத்தில் 50-60 பேர் வசிப்பதாக பதிவாகி இருந்தது
    • தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி ராகுல் விளக்கம் அளித்தார்.

    தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல்களில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

    இன்று மதியம் டெல்லியில் இதுதொடர்பான சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார்.

    அதில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா சட்டமன்றத் தேர்தல், மக்களவை தேர்தல்களில் நடந்த முறைகேடுகள் குறித்த தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி ராகுல் விளக்கம் அளித்தார்.

    அப்போது, மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தல், சட்டமன்றத் தேர்தல் இடையே 5 மாத இடைவெளியில் 1 கோடி வாக்காளர்கள் புதிதாக வந்ததாக அவர் குற்றம்சாட்டினார்.

    மேலும் கர்நாடகாவில் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    ஐந்து வெவ்வேறு வழிகளில் வாக்குகள் திருடப்பட்டது. இதன்படி 11,965 போலியான வாக்காளர்கள், போலியான மற்றும் தவறான முகவரியுடன் 40,009 வாக்காளர்கள், ஒரே முகவரியில் 10,452 வாக்காளர்கள், தவறான புகைப்படங்களுடன் கூடிய 4,132 வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ தவறாக பயன்படுத்திய 33,692 வாக்காளர்கள் உள்ளனர்.

    ஒரு கட்டிடத்தில் 50-60 பேர் வசிப்பதாக பதிவாகி இருந்தது. ஆனால் நாங்கள் அங்கு சென்றபோது, அந்த வீட்டில் ஒரு குடும்பம் மட்டுமே வசித்தது என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்து கர்நாடக மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.

    அதில், கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் தவறுதலாக சேர்க்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை பற்றிய விவரங்களை பகிரும்படியும், அதில் கையெழுத்திட்டு, எழுத்துப்பூர்வ அறிக்கையை  தரும்படியும் கேட்டுக்கொள்ளபட்டது.

    இதன்பின்னரே, இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பணியை தேர்தல் அதிகாரிகள் தொடங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அதை யார் பார்க்கப்போகிறார்கள் என்ற நம்பிக்கையில் வைத்திருந்தார்.
    • போலீசார் பண்ணை வீட்டை சோதனை செய்து, மாடியில் இருந்து சேலையைக் கைப்பற்றினர்.

    முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணா, வீட்டுப் பணிப்பெண் உள்ளிட்ட பல்வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து எடுத்த 2,900 வீடியோக்கள் கடந்த ஆண்டு கசிந்தன.

    47 வயது பணிப்பெண் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்ட அவருக்கு கடந்த வாரம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் பண்ணை வீட்டின் மாடியில் இருந்த பழைய சேலை, குற்றத்தை நிரூபிக்க முக்கிய ஆதரமாக இருந்ததாக தெரியவந்துள்ளது.

    பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு, பிரஜ்வல் ரேவண்ணா பாதிக்கப்பட்ட பெண்ணின் சேலையை வலுக்கட்டாயமாக பறித்து வைத்திருக்கிறார். சேலையை அழிப்பதற்கு பதிலாக, அதை யார் பார்க்கப்போகிறார்கள் என்ற நம்பிக்கையில் பிரஜ்வல் அதை தனது பண்ணை வீட்டின் மாடியில் அதை மறைத்து வைத்திருந்தார்.

    விசாரணையின் போது, பாதிக்கப்பட்டவரிடம் சம்பவத்தன்று என்ன அணிந்திருந்தீர்கள் என்று போலீசார் கேட்டபோது, சேலையை அவர் திருப்பித் தரவில்லை என்றும், அது பண்ணை வீட்டில் இருக்கலாம் என்றும் அப்பெண் கூறினார்.

    இந்தத் தகவலின் பேரில், போலீசார் பண்ணை வீட்டை சோதனை செய்து, மாடியில் இருந்து சேலையைக் கைப்பற்றினர். அது தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

    அதில் விந்துவின் தடயங்கள் இருப்பதை உறுதி செய்தது. டிஎன்ஏ சோதனையில், அது பிரஜ்வாலின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போனது.

    இந்தச் சேலையுடன், பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலமும் வழக்கின் விசாரணையில் முக்கியமானதாக மாறியது.

    சேலையில் காணப்பட்ட டிஎன்ஏ சான்றுகள் பிரஜ்வாலுக்கு எதிரான அரசுத் தரப்பு வழக்கை வலுப்படுத்தின. இது இறுதியில் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளிக்க உதவியது.   

    • கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
    • விசாரணையில் அரசாங்கம் தலையிடாது என்று தெரிவித்தார்.

    கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றிய சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பலாத்காரம் செய்து கொன்று உடல்களை கோவில் நிலத்திலேயே புதைத்துவிட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.

    இதை விசாரிக்க சிறப்பு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மேற்கொண்டு வரும் அகழ்வாராய்ச்சியில் ஆண் ஒருவரின் எலும்புக்கூடு மற்றும் பல எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

    இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, வழக்கு தொடர்பான விவரங்களை வெளியிட்டார்.

    "ஆறாவது இடத்தில் ஒரு ஆணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. இதனுடன், மற்றொரு புதிய இடத்திலும் சில எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

    கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து எச்சங்களும் தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு (FSL) அனுப்பப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவித்தார். 13வது இடத்தில் இன்னும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

    விசாரணையில் அரசாங்கம் தலையிடாது என்றும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி உண்மையைக் கண்டறிய சிறப்பு விசாரணைக் குழுவுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    • ஆட்டோவை அரசு பேருந்து பின்னால் இருந்து மோதியது.
    • இரண்டு பேருந்துகளுக்கும் இடையில் நசுக்கப்பட்டிருந்தது.

    கர்நாடகாவின் சித்ரதுர்காவில் நடந்த அதிர்ச்சியூட்டும் விபத்தின் சிசிடிவி வீடியோ வைரலாகி வருகிறது.

    பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவை அரசு பேருந்து பின்னால் இருந்து மோதியது, இதனால் முன்னால் சென்ற மற்றொரு பேருந்து ஆட்டோ மோதியது.

    பின்னால் வந்த பேருந்தின் ஓட்டுநர் பிரேக் போடத் தொடங்கிய நேரத்தில், ஆட்டோ  ஏற்கனவே இரண்டு பேருந்துகளுக்கும் இடையில் நசுக்கப்பட்டிருந்தது.

    இருப்பினும் ஆட்டோ ஓட்டுநரும் பயணிகளும் அதிசயமாக மரணத்திலிருந்து தப்பினர். ஆனால் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு பேருந்துகளையும் பறிமுதல் செய்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.   

    • ஆட்டோ மீது வேகமாக வந்து தனியார் பேருந்து மோதியுள்ளது.
    • விபத்துக்குள்ளான ஆட்டோ முன்னே சென்ற பேருந்து மீது மோதியுள்ளது.

    கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் 2 பேருந்துகளுக்கு இடையே சிக்கி ஆட்டோ நசுங்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    வீடியோவில், ஆட்டோ மீது வேகமாக வந்து தனியார் பேருந்து மோதியுள்ளது. இதனால் ஆட்டோ முன்னே சென்ற பேருந்து மீது மோதியுள்ளது. அப்போது இரு பேருந்துகளுக்கும் இடையே சிக்கி ஆட்டோ நசுங்கியது.

    இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். 

    • தன்னிடம் உள்ள ஆடம்பர சொகுசு காரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஒட்டி சென்றார்.
    • நடுரோட்டில் சொகுசு கார் தீப்பிடித்து எரியும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பெங்களூரை சேர்ந்தவர் சஞ்சீவ். ஆடம்பர கார்கள், சொகுசு கார்கள், பழமையான கார்கள் ஆகியவற்றை குவித்து வைத்துள்ளார். அது தொடர்பான படங்களை வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவேற்றி வருகிறார். கார் பிரியர்களால் ரசிக்கப்படும் இவரின் பதிவுகளால் சமூக வலைத்தளத்தில் 2 லட்சம் பின்தொடர்பாளர்களுடன் பிரபலமாக உள்ளார்.

    இந்தநிலையில் தன்னிடம் உள்ள ஆடம்பர சொகுசு காரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஒட்டி சென்றார். ரூ.10 கோடி மதிப்புள்ள அந்த காரை சாலையில் வந்தபோது அங்கிருந்த பொதுமக்கள் கண்கொட்டாமல் அந்த காரை பார்த்து ரசித்தனர். அப்போது அந்த கார் எதிர்பாராமல் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    என்ஜினில் இருந்து பற்றி எரிந்த தீ மளமளவென கார் முழுவதும் எரிந்தது. இதனால் சாலைவாசிகள் செய்வது அறியாமல் திகைத்தனர். சுதாரித்து கொண்ட சஞ்சீவ் காரில் இருந்து உடனடியாக வெளியேறி தீயை அணைக்க முயன்றார். நடுரோட்டில் சொகுசு கார் தீப்பிடித்து எரியும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



    ×