search icon
என் மலர்tooltip icon
    • 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடக்கிறது
    • கிர்கிஸ்தானில் நடந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்று அரையிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை லாராவை வீழ்த்தி வினேஷ் போகத் வெற்றி பெற்றார்

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடக்கிறது. இதன் மல்யுத்த போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கேக்கில் நடைபெற்று வருகிறது.

    ஆண்களில் பிரீ ஸ்டைல், கிரேக்கோ- ரோமன் பெண்களில் பிரீ ஸ்டைல் ஆகியவற்றில் மொத்தம் 18 எடை பிரிவுகளில் போட்டி நடக்கிறது. ஒவ்வொரு எடைப்பிரிவிலும் இறுதிப்போட்டியை எட்டும் வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

    மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷனுக்கு எதிராக போராட்டம் நடத்தி சர்ச்சையில் சிக்கிய ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு பெண்கள் சாம்பியனான வினேஷ் போகத் (50 கிலோ) ஒலிம்பிக் போட்டியக்கு தகுதி பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

    இந்நிலையில், கிர்கிஸ்தானில் நடந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்று அரையிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை லாராவை வீழ்த்தி வினேஷ் போகத் வெற்றி பெற்றார். மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் நடந்த 3 போட்டிகளிலும் பங்கேற்று வென்றார் வினேஷ் போகத்.

    இதன் மூலம், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள 33வது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்.

    பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்துக்கு இந்தியாவில் இருந்து அன்திம் பன்ஹால்-க்கு அடுத்தபடியாக வினேஷ் போகத் தகுதி பெற்றுள்ளார்.

    • 2017-ல் ஆர்சிபிக்கு எதிராக கேகேஆர் 105 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
    • பஞ்சாப் அணிக்கெதிராக 2014-ல் சிஎஸ்கே 100 ரன்களும், 2015-ல் மும்பைக்கு எதிராக சிஎஸ்கு 90 ரன்களும் எடுத்துள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லியில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை கலீல் அகமது வீசினா். முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காத டிராவிஸ் ஹெட் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். அதனைத் தொடர்ந்து இருவரும் வாணவேடிக்கை நடத்தினர். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ், மூன்று பவுண்டரிகளுடன் 19 ரன்கள் அடித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.

    2-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளரான லலித் யாதவ் வீசினார். இந்த ஓவரில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளுடன் 21 ரன்கள் விளாசியது.

    3-வது ஓவரை நோர்ஜே வீசினார். இந்த ஓவரில் முதல் நான்கு பந்துகளில் மூன்று பந்துகளை டிராவிஸ் ஹெட் பவுண்டரிக்கு விரட்ட ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் 50 ரன்னைக் கடந்தது. 5-வது பந்தை பவுண்டரிக்கும், 6-வது பந்தை சிக்சருக்கும் தூக்கி 16 பந்தில் அரைசதம் அடித்தார் டிராவிஸ் ஹெட். 3-வது ஓவரில் 22 ரன்கள் கிடைக்க அந்த அணியின் ஸ்கோர் 62 ஆனது.

    4-வது ஓவரை லலித் யாதவ் வீசினார். இந்த ஓவரில் 3 சிக்ஸ் விளாச 21 ரன்கள் கிடைத்தது. 5-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் 3 சிக்ஸ் விளாச அணியின் ஸ்கோர் 100 ரன்னைக் கடந்தது. இந்த ஓவரில் 20 ரன்கள் கிடைத்தன.

    முகேஷ் குமார் வீசிய இந்த ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உடன் 22 ரன்கள் கிடைக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகவேகமாக (ஐந்து ஓவர்களில்) சதம் அடித்த அணி என்ற சாதனையையும், ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேயில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது.

    இதற்கு முன்னதாக 2017-ல் ஆர்சிபிக்கு எதிராக கேகேஆர் 105 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. பஞ்சாப் அணிக்கெதிராக 2014-ல் சிஎஸ்கே 100 ரன்களும், 2015-ல் மும்பைக்கு எதிராக சிஎஸ்கு 90 ரன்களும் எடுத்துள்ளது.

    • மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா.
    • வீடியோவை மும்பை இந்தியன்ஸ் பகிர்ந்துள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் பரபரப்பாகவும் சுவாரஸ்ய  அனுபவத்தையும் வழங்கி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்தில் தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.

    அந்த வகையில் போட்டிக்கு பிறகு இளம் கிரக்கெட் வீரர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் திலக் வர்மா பரிசளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

    • தருமபுரியில் அதிகபட்சமாக 81.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
    • கள்ளக்குறிச்சியில் 79.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தோராயமான வாக்குப்பதிவு தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

    இந்த நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    அதன் முழு விவரம் வருமாறு:-

    1. தருமபுரி- 81.48

    2. நாமக்கல்- 78.16

    3. கள்ளக்குறிச்சி- 79.25

    4. ஆரணி- 75.65

    5. கரூர் - 78.61

    6. பெரம்பலூர்- 77.37

    7. சேலம்- 78.13

    8. சிதம்பரம்- 75.32

    9. விழுப்புரம்- 76.47

    10. ஈரோடு- 70.54

    11. அரக்கோணம்- 74.08

    12. திருவண்ணாமலை- 73.88

    13. விருதுநகர்- 70.17

    14. திண்டுக்கல்- 70.99

    15. கிருஷ்ணகிரி- 71.31

    16. வேலூர்- 73.42

    17. பொள்ளாச்சி- 70.70

    18. நாகப்பட்டினம்- 71.55

    19. தேனி- 69.87

    20. நீலகிரி- 70.93

    21. கடலூர்- 72.28

    22. தஞ்சாவூர்- 68.18

    23. மயிலாடுதுறை- 70.06

    24. சிவகங்கை- 63.94

    25. தென்காசி- 67.55

    26. ராமநாதபுரம்- 68.18

    27. கன்னியாகுமரி- 65.46

    28. திருப்பூர்- 70.58

    29. திருச்சி- 67.45

    30. தூத்துக்குடி- 59.96

    31. கோவை- 64.81

    32. காஞ்சிபுரம்- 71.55

    33. திருவள்ளூர்- 68.31

    34. திருநெல்வேலி- 64.10

    35. மதுரை- 61.92

    36. ஸ்ரீபெரும்புதூர்- 60.21

    37. சென்னை வடக்கு- 60.13

    38. சென்னை தெற்கு- 54.27

    39. சென்னை மத்தி- 53.91

    • சுரேஷ் என்பவர் தனக்கு திருமணமாகவில்லை என்று பொய் சொல்லி அனுஷா என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
    • ஜெ.பி.நகர் அருகில் உள்ள சராக்கி பூங்காவுக்கு நேற்று மாலை 4:15 மணிக்கு அனுஷாவும் சுரேசும் சந்தித்து பேசினர்

    பெங்களூரில் கோரகுண்டேபாலயா பகுதியை சேர்ந்த 45 வயதான சுரேஷ் என்பவரும் ஜேபி நகரைச் சேர்ந்த 24 வயதான அனுஷாவும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது சுரேஷ் தனக்கு திருமணமாகவில்லை என்று பொய் சொல்லி அனுஷாவுடன் பழகி வந்துள்ளார். ஆனால் சுரேசுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை அறிந்தபிறகு அனுஷா அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஜெ.பி.நகர் அருகில் உள்ள சராக்கி பூங்காவுக்கு நேற்று மாலை 4:15 மணிக்கு அனுஷாவும் சுரேசும் சந்தித்து பேசினர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சுரேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால், அனுஷாவை பலமுறை கத்தியால் குத்தியுள்ளார்.

    அந்த சமயத்தில் அனுஷாவை பின்தொடர்ந்து வந்த அவரது தாயார் கீதா, சுரேஷை தடுத்து நிறுத்த ஓடியிருக்கிறார். அப்போது அங்கிருந்த செங்கல்லை எடுத்து சுரேஷின் தலையில் அவர் அடித்தார். இதில், சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    அதன் பிறகு தனது மகளை கீதா மருத்துவமனைக்கு அழைத்துவந்த போது, அங்கே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • படம் வேளியாகி இந்தாண்டோடு 20 வருடங்கள் கடந்த நிலையில் படம் இன்று மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது.
    • சென்னை முழுவதும் உள்ள திரையரங்குகள் முழுவதும் கில்லி திரைப்படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

    தரணி இயக்கத்தில் ஸ்ரீ சூர்யா மூவீஸ் தயாரிப்பில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், மயில்சாமி, பாண்டு, போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இத்திரைப்படம் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'ஒக்கடு' திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

    விஜய் இந்த படத்தில் கபடி வீரராக நடித்து இருப்பார். மதுரையில் கபடி போட்டிக்கு செல்லும் போது திரிஷாவை பிரச்சனையில் இருந்து காப்பாற்றி சென்னைக்கு தன்னுடன் அழைத்து வருகிறார். பின் யாருக்கும் தெரியாமல் அவர் வீட்டிலே பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறார். அடுத்து என்ன நடந்தது? என்பதே கில்லி படத்தின் கதைக்களமாகும்.

    விஜயின் வெகுளித்தனமான கதாப்பாதிரமும், திரிஷாவின் அப்பாவித்தனமான முக பாவனையும் இப்படத்தின் கூடுதல் கவனத்தை பெற்றது. படத்தின் பாடல்களைப் பற்றி கூறியே ஆகவேண்டும் . வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ஹிட்டானது. இன்றும் காரில் பயணம் செய்யும் பொழுது அர்ஜூனர் வில்லு பாடல் கேட்காமல் பயணம் முடிவுக்கு வராது.

    படம் வேளியாகி இந்தாண்டோடு 20 வருடங்கள் கடந்த நிலையில் படம் இன்று மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. சென்னை முழுவதும் உள்ள திரையரங்குகள் முழுவதும் கில்லி திரைப்படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியேட்டருக்கு சென்று படத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அதிலும் பலப்பேர் கில்லி திரைப்படத்தை முதன் முதலில் தியேட்டருக்கு வந்து பார்க்கிறார்கள்.

    சமூக வலைத்தளங்களில் கில்லி படத்தின் காட்சிகளும், தியேட்டரின் ரெஸ்பான்ஸ்களையும், பாடலுக்கு நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். ரீ ரிலிஸ் செய்த படத்தில் கில்லி திரைப்படத்திற்கே அதிக அளவில் அட்வான்ஸ் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.

    இதைக்குறித்து திரிஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ததற்கு நன்றி. 20 வருடங்களுக்கு முன் எப்படி உணர்ந்தேனோ அதை மீண்டும் உணர்கிறேன்," என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சில நேரங்களில் சொந்த நலனை புறந்தள்ளிவிட்டு மிகப்பெரிய இலக்கை அடைவதற்கான மாறுபட்ட முடிவுகள் எடுக்கப்படுகிறது.
    • நாங்கள் தேசப்பற்று, காஷ்மீர் முன்னேற்றத்திற்கு, அமைதியை வலுப்படுத்துதல், சகோதரதத்துவம், சமூகத்திற்கு சேவை செய்ய ஆர்வமாக உள்ள கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம்.

    ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் ஐந்து மக்களவை தொகுதிகள் உள்ளன. உதம்பூர், ஜம்மு ஆகியவை ஜம்முவில் உள்ளன. காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்-ரஜோரி, ஸ்ரீநகர், பாரமுல்லா ஆகிய தொகுதிகளில் பா.ஜனதா போட்டியிடுவதில்லை.

    இந்த நிலையில் காஷ்மீரில் உள்ள தொகுதியில் ஏன் போட்டியிடவில்லை என்பதை பா.ஜனதா நியாயப்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக காஷ்மீர் மாநில பா.ஜனதா தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறுகையில் "காஷ்மீரில் உள்ள மூன்று தொகுதிகளிலும் எங்களுடைய சொந்த பலத்தில் போட்டியிட விரும்புகிறோம். ஆனால் சில நேரங்களில் சொந்த நலனை புறந்தள்ளிவிட்டு மிகப்பெரிய இலக்கை அடைவதற்கான மாறுபட்ட முடிவுகள் எடுக்கப்படுகிறது.

    நாங்கள் தேசப்பற்று, காஷ்மீர் முன்னேற்றத்திற்கு, அமைதியை வலுப்படுத்துதல், சகோதரதத்துவம், சமூகத்திற்கு சேவை செய்ய ஆர்வமாக உள்ள கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம்" என்றார்.

    மேலும், இந்த மூன்று தொகுதிகளில் மக்கள் காங்கிரஸ், தேசிய மாநாடு, பிடிபி ஆகிய கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். இங்கு யாரை ஆதரிப்பது என்பது குறித்து மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    • டெல்லி அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • ஐதராபாத் அணி நான்கு போட்டிகளில் வெற்றி.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டெல்லியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணி இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், மூன்று போட்டிகளில் வெற்றி, நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. ஐதராபாத் அணி ஆறு போட்டிகளில் நான்கு வெற்றி, இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

    இரு அணிகளும் தாங்கள் விளையாடிய கடைசி போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

    • இந்த ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி வருகிறார்
    • விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரோலுக்கு இந்திய அணியில் கடும் போட்டி நிலவி வருகிறது

    ஐ.சி.சி. நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். டி20 தொடர் முடிந்ததும் உலகக் கோப்பை தொடர் துவங்க உள்ளது.

    மே 1 ஆம் தேதிக்குள் 15 பேர் அடங்கிய அணி வீரர்கள் பட்டியலை வழங்க ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், "டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி பயணிக்கும் விமானத்தில் இடம்பிடிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். வாழ்க்கையின் தற்போதைய கட்டத்தில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    இந்த ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி வருகிறார். பெங்களூரு அணியில் கோலி (361) மற்றும் டூ பிளசிஸ்க்கு (232) அடுத்தபடியாக அதிக ரன்களை குவித்தவர் பட்டியலில் தினேஷ் கார்த்திக் (226) 3-ம் இடத்தில் உள்ளார்.

    இந்த சீசனில் சிறந்த பினிஷராக தினேஷ் கார்த்திக் உருவெடுத்துள்ளார். குறிப்பாக பெங்களூரு, ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய அவர், 35 பந்துகளில் 7 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 83 ரன்கள் எடுத்து அசத்தினார்.

    ஆனால் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரோலுக்கு இந்திய அணியில் கடும் போட்டி நிலவி வருகிறது. காயத்திலிருந்து மெதுனு பார்முக்கு திரும்பிய பண்ட், சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், கே.எல். ராகுல் ஆகியோர் அந்த போட்டியில் உள்ளனர்.

    பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா, தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கார் ஆகியோர் என்ன முடிவு எடுத்தாலும் நான் அதை மதித்து நடப்பேன். ஆனால் நான் 100% தயாராக உள்ளேன் என்பதை மட்டும் அவர்களுக்கு சொல்லி கொள்கிறேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். 

    • கவின், லால், கீதா கைலாசம், அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • . இந்த பாடலில் கவின் பெண் வேடத்தில் குத்தாட்டம் ஆடிருக்கிறார்.

    டாடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் அடுத்ததாக இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் . இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கவின், லால், கீதா கைலாசம், அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் பாடலான விண்டேஜ் லவ் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. யூடியூபில் இதுவரை 12 லட்ச பார்வைகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் அடுத்த பாடலான 'மெலடி' இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. இந்த பாடலில் கவின் பெண் வேடத்தில்  குத்தாட்டம் ஆடிருக்கிறார். காலேஜ் கல்சுரல்ஸ் நிகழ்ச்சியில் ஆடுவதுப் போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. பாடல் மிகவும் எனர்ஜெட்டிக்காகவும் பெப்பியாக அமைந்துள்ளது.

    படத்தின் மற்ற பாடல்களைப் போலவே இந்த பாடலும் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×