search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீட்டுக்கடன் தவணையில் கூடுதல் தொகை செலுத்துவது அவசியம்
    X
    வீட்டுக்கடன் தவணையில் கூடுதல் தொகை செலுத்துவது அவசியம்

    வீட்டுக்கடன் தவணையில் கூடுதல் தொகை செலுத்துவது அவசியம்

    சொந்தமாக வீடு கட்ட அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வாங்க திட்டமிடும் நிலையில், ஒருவரது மாத வருமானத்தின் அடிப்படையில் வங்கிகள் வீட்டுக்கடன் அளிக்கின்றன.
    சொந்தமாக வீடு கட்ட அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வாங்க திட்டமிடும் நிலையில், ஒருவரது மாத வருமானத்தின் அடிப்படையில் வங்கிகள் வீட்டுக்கடன் அளிக்கின்றன. தேசிய வங்கிகள் வீட்டின் சந்தை மதிப்பில் 80 சதவிகித அளவுக்கு கடன் தொகையாக அளிக்கின்றன. எப்படி இருந்தாலும் சொந்த வீடு வாங்குபவர்கள் கையில் குறிப்பிட்ட தொகையை வைத்துக்கொண்டுதான் காரியத்தில் இறங்க வேண்டியதாக இருக்கும். அதனால், வீட்டின் சந்தை மதிப்பில் 30 சதவிகிதம் வரை கைகளில் வைத்திருப்பதன் மூலம் பல சிக்கல்களை சமாளிக்க இயலும் என்று என்று நிதி முதலீட்டு மேலாண்மை வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    தவணைக்காலம்

    வங்கிகள் அளிக்கும் வீட்டுக் கடனுக்கான மாதாந்திர தவணை காலம் கிட்டத்தட்ட 20 முதல் 30 வருடங்கள் வரை இருக்கலாம். ஆனால், வீட்டு கடனை தொடர்ந்து 20 வருடங்கள் செலுத்திக்கொண்டிருக்காமல், அவ்வப்போது கிடைக்கும் தொகையை செலுத்தி கடனின் அளவை குறைத்துக்கொள்வது அவசியம்.

    கூடுதலான மாதாந்திர தவணை

    வீட்டு கடனுக்கான மாதாந்திர தவணையாக ரூ.20 ஆயிரம் செலுத்தப்படும் நிலையில், சுமார் ரூ. 15 ஆயிரம் வட்டி மற்றும் ரூ. 5 ஆயிரம் கடனுக்கான அசல் என்ற வகையில் கணக்கில் கொள்ளப்படும். மாதாந்திர தவணை செலுத்தி வரும் காலங்களில் கிடைக்கும் எதிர்பாராத பொருளாதார வரவை கடனுக்கான தவணையில் கூடுதலாக செலுத்துவதற்கு பயன்படுத்திக்கொள்வது அவசியம். அதனால், கடன் பெறும்போதே வங்கியிடம், வீட்டுக் கடனுக்கான மாதாந்திர தவணையில் குறிப்பிட்ட ஒரு தொகையை, அபராதம் ஏதுமில்லாமல் செலுத்த இயலுமா என்று கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

    குறையும் தவணைக் காலம்

    அவ்வாறு கிடைக்கும் தொகையை வீட்டுக் கடனுக்காக செலுத்தும் நிலையில், கடனுக்கான மாதாந்திர தவணையில் மாற்றம் இருக்காது. ஆனால், கடனை திருப்பி செலுத்தும் கால அளவு குறைந்து விடும். அதன் மூலம், கடனுக்கான வட்டியை அதிக காலத்துக்கு செலுத்திக்கொண்டிருக்காமல், குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே வீட்டு கடனை அடைத்து விடலாம். அதனால், வருடத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு வருடத்துக்கு ஒரு முறை என ஒரு தொகையை செலுத்தி வருவது அவசியம் என்றும் நிதி முதலீட்டு மேலாண்மை வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    திட்டமிட்ட உடனே வாங்குங்கள்

    சொந்தமாக வீடு வாங்குவது என்று திட்டமிடும் பட்சத்தில் அதை அந்த ஆண்டே செயல்படுத்தி விடுவது நல்லது. ஏனென்றால், அடுத்து வரும் வருடங்களில், கட்டுமான பொருட்கள் விலை, பணியாளர் ஊதியம் ஆகியவற்றின் அடிப்படையில் வீட்டு விலை உயர்ந்து விடும் வாய்ப்புகள் உள்ளன என்று ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×