search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கணவர்கள் விரும்பும் மனைவியின் காதலான தருணங்கள்
    X
    கணவர்கள் விரும்பும் மனைவியின் காதலான தருணங்கள்

    கணவர்கள் விரும்பும் மனைவியின் காதலான தருணங்கள்

    ஆண்கள் அதிகமாக காதலிப்பவர்கள், நிகோலஸ் ஸ்பார்க்ஸ் இதை ஒத்துக்கொள்வார். ஆண்களிடம் அவர்கள் விரும்பும் பெண்ணின் செயல்கள் பற்றி கேட்டறிந்தோம், அவர்களின் அழகிய பதில்கள் இதோ:
    ஆண்கள் அதிகமாக காதலிப்பவர்கள், நிகோலஸ் ஸ்பார்க்ஸ் இதை ஒத்துக்கொள்வார். ஆண்களிடம் அவர்கள் விரும்பும் பெண்ணின் செயல்கள் பற்றி கேட்டறிந்தோம், அவர்களின் அழகிய பதில்கள் இதோ:

    * பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் கட்டியணைப்பதை விரும்புகிறார்கள். சொல்லப்போனால் பெண்களைவிட ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அவளின் அணைப்பு அவள் மேல் உள்ள காதலை வெளிப்படுத்திவிடும், இது மிகவும் அழகான ஒன்று."

    * "ஒரு மனிதனின் இதயத்திற்கு செல்லும் வழி அவரது வயிறுதான்" சில சமயம் நான் அவளுக்காக உணவு சமைப்பேன் ஆனால் அவள் சமைக்கும் உணவுடன் ஒப்பிடும்போது நான் சமைக்கும் உணவு என் கல்லூரி உணவையே ஞாபகப்படுத்தும். அவள் என் மேல் வைத்துள்ள காதல் ஒவ்வொரு வாய் உணவிலும் நன்றாக தெரியும்."

    * அவள் மடியில் படுத்திருக்கும்போது அவள் விரல்கள் என் தலைமுடியை வருடுவதை நான் மிகவும் நேசிக்கிறேன். அதுமட்டுமின்றி, உடனடியாக தூங்கிவிடுவேன் எழும்போது தலையணையில் தலை வைத்திருப்பேன், இது நடக்கும்போதெல்லாம் என் முகத்தில் புன்னகை வருவதை தவிர்க்க இயலாது."

    *  இரவில் அவளுடன் நடப்பது அற்புதமானது. குளிர்காலமே மிகவும் சிறந்தது அவள் குளிராக உணரும்போது நான் பின்புறமாக இருந்து அவளை அணைத்துக்கொள்வது மிகவும் அருமையான தருணமாகும்.

    * ஒவ்வொரு முறையும் பார்ட்டிகளிலோ அல்லது சில சமயம் எங்கள் படுக்கையறையிலோ சில அழகான இசையை போட்டு மனைவின் இடுப்பை வளைத்து பிடித்துக்கொண்டு இசைக்கேற்றார் போல நடனம் ஆடுவது கணவருக்கு மிகவும் பிடித்தமானது.

    * பொது இடங்களில் என் கையை பிடிப்பதும், என் கன்னத்தை குழந்தை போல் கிள்ளுவதும் அற்புதமான உணர்வுகள், இதைவிட சிறந்த தருணம் எதுவும் இருக்க முடியாது. இது காதலை அதிகரிப்பதோடு அவளை மகிழ்ச்சியாய் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்பையும் உணர்த்தும்."

    * வேலை நேரத்தில் கணவனை புத்துணர்ச்சியாக்குவது மனைவியின் குறுஞ்செய்திதான். இது அதிக காதலை வெளிப்படுத்துவதாக தோன்றலாம் ஆனால் உண்மை அதுதான்." 
    Next Story
    ×