search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்கள், பெண் குழந்தைகளுக்கு வீட்டில் நடக்கும் வன்முறைகள்
    X
    பெண்கள், பெண் குழந்தைகளுக்கு வீட்டில் நடக்கும் வன்முறைகள்

    பெண்கள், பெண் குழந்தைகளுக்கு வீட்டில் நடக்கும் வன்முறைகள்

    பல பெண்களின், பெண் குழந்தைகளின் உடல் நல, மன நல பாதிப்பிற்கு காரணம் வீட்டில் அவர்களுக்கு நடக்கும் வன்முறைகளே என ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன.
    இந்த வார்த்தைகள் நம் நாட்டிற்கு புதிதுஅல்ல. இந்த பாதிப்பிற்கு ஆளாகுபவர்கள் அநேகமாக பெண்களும், பெண் குழந்தைகளுமே. பல பெண்களின், பெண் குழந்தைகளின் உடல் நல, மன நல பாதிப்பிற்கு காரணம் வீட்டில் அவர்களுக்கு நடக்கும் வன்முறைகளே என ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன. இவர்களை கவ்வும் பயம் தலை முதல் கால் வரை இவர்களின் உடல் நலத்தினை பாதித்து விடுகின்றது. ஆனால் அநேகர் இதனை வாய் திறவாத மவுனத்தோடும், பயத்தோடும் அனுபவித்தே வாழ்க்கையினை முடிக்கின்றனர். இவர்களை கண்டறிந்து மற்றவர்கள் இவர்களை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே இக்கட்டுரை எழுதப்படுகிறது.

    வீட்டில் வன்முறை கொடுமையினை அனுபவிப்பவர்கள் அவர்களை அறியாமலேயே வெளிப்படுத்தும் அறிகுறிகள்:

    • பாதிப்பு கொடுப்பவரைப் பற்றிய பயம் அவர்களுக்குள் கொட்டிக் கிடக்கும். அவர் வந்தாலே பாதிப்பு அடைந்தவர் நடுங்குவார். பெயரைச் சொன்னாலே பயப்படுவார்.
    • பள்ளிக்கோ, வேலைக்கோ சரியாக செல்ல மாட்டார்.
    • அவரது தோற்றம், நடைமுறைகளில் வித்தியாசமான, வினோதமான மாற்றங்கள் தெரியும்.
    • தன்னை பற்றிய தாழ்வு மனப்பான்மை அதிகம் இருக்கும்.
    • தூக்கமின்மை அதிகமாய் காணப்படும்.

    • தன்னை தாக்கு பவரிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற படபடப்பு எப் பொழுதும் இருக் கும்.
    பாதிப்பு கொடுப் பவர் அதாவது வன் முறை கொடுமையினை நிகழ்த்துபவர் தன்னை அறியாமல் வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்:
    • கொடுமைபடுத்துபவர் மீதே இவர் முழு கவனமும் இருக்கும்.
    • அந்த நபரை உறவினர்கள், நண் பர்கள், குடும்பத்தினர் சந்திக்க முடியாத அளவில் எதிர்ப்புகளை நிகழ்த்துவார்.

    • அந்த நபரை தன் வாழ்நாளின் அனைத்து பிரச்சினை களுக்கும் காரணம் என குற்றம் சாட்டுவார்.
    • அதிக கோபம், வன்முறை, சாமான்களை உடைத்தல், அடி, உதை, கொலை போன்ற தாங் கொண்ணா கொடுமை களை நிகழ்த்துவார்.
    • குடும்ப தலைவர் என்றால் வீட்டு செலவுக்கு காசே தர மாட்டார்.
    • கடும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்.
    • தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டுவார்.

    இத்தகைய தாக்குதல்களில் பாதிக்கப்படுபவர் அதிக அளவில் நோய்வாய்படும் வாய்ப்புகள் கூடுதலாக இருப்பதால் நம்மையும் காத்துக் கொண்டு பிறருக்கும் உதவ வேண்டும். வீட்டில் வன்முறை - கொடுமை என்பது உலகெங்கிலும் நடப்பதுதான். இந்தியாவில் மக்கள் குறிப்பாக பெண்கள் இதனை எதிர்க்க முன் வருவதில்லை. ஆயினும் இவ்வாறு ஒருவருக்கு ஏற்படுமாயின் அருகில் உள்ள காவல் நிலையம், மாதர் சங்க உதவி, அவசர போலீஸ் உதவி, வக்கீல்களின் உதவி என பல முறைகளில் தீர்வு பெற முடியும்.

    வன்முறை கொடுமைக்கு எதிர்ப்பாக, பாதிக்கப்படுபவருக்கு ஆதரவாக பல தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவற்றினை நாம் கணினி மூலமும், தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

    வன்முறை கொடுமை ஒருவரின் உடல் நலம், மன நலம், வாழ்க்கை இவை அனைத்தையுமே பாதித்து விடுவதால் உரிய வழிமுறையினை பின்பற்றி தீர்வு காண வேண்டும். இத்தகையோருக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு நம் சமுதாயத்தின் உதவிக் கரம் அவசியம் தேவை.
    Next Story
    ×