search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கர்ப்ப காலத்தில் தடுப்பூசிகளின் முக்கியத்துவம்
    X
    கர்ப்ப காலத்தில் தடுப்பூசிகளின் முக்கியத்துவம்

    கர்ப்ப காலத்தில் தடுப்பூசிகளின் முக்கியத்துவம்

    கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடுவது கருவிற்கு எந்த பாதிப்பும் வராமல் தடுக்க உதவும். கர்ப்ப காலத்தில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி வகைகள் பற்றி விவரமாக அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்ப கால தடுப்பூசிகளின் முக்கியத்துவம் குறித்து ரத்னா மருத்துவமனையின் டாக்டர் சாந்தி மகிழன் கூறியதாவது:-

    தடுப்பூசிகள் ஏன் பயன்படுத்துகிறோம் என்றால், தந்தையின் குரோமோசோம்களை பாதி பெற்றிருக்கும் குழந்தையை ஏற்று கொள்ளும் விதமாக தாய்க்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். இதனால் தாய், குழந்தை ஆகிய இருவருக்கும் நோய் தொற்று எளிதாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை தடுக்க தாய் மூலமாக எதிர்ப்பு சக்தி அளிப்பதற்காக தாய்க்கு தடுப்பூசி போடப்படுகிறது.

    கர்ப்ப காலத்தில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி வகைகள் விவரம் வருமாறு:-

    தொண்டை ஒவ்வாமை நோய், டெட்டனஸ், கக்குவான் இருமல் தடுப்பூசி, TT தடுப்பூசிக்கு பதிலாக 2018-ம் ஆண்டு முதல் TD (Tetenus. Diphtheria) தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 2. Influenza எனப்படும் ப்ளூ தடுப்பூசி. மற்ற பெண்களை விட கர்ப்பிணிகளை அதிகம் தாக்கும் எனவே அதற்கு ப்ளூ தடுப்பூசி போட வேண்டும்.

    தற்போது Quadrivalent Vaccine தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசியை கர்ப்பத்தின் எந்த காலத்திலும் போட்டு கொள்ளலாம். வைரஸ் கிருமிகளின் மாற்றத்துக்கு ஏற்ப அடிக்கடி புது வகை தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்படும். அந்தந்த காலத்திற்கு ஏற்ற புதுவகை தடுப்பூசிகளை போட்டு கொள்வது முக்கியம்.

    பிரத்யேக சூழல்களில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள்

    1. Hepatitis A Vaccine

    2. Hepatitis B Vaccine

    3. மூளைக்காய்ச்சல் தடுப்பூசி (Meningococcal Vaccine)

    மஞ்சள் காய்ச்சல் பரவலாக காணப்படும் பகுதிகளுக்கு அதாவது ஆப்ரிக்காவுக்கு பயணம் செய்யும் கர்ப்பிணிகள் டாக்டரின் ஆலோசனை மற்றும் கண்காணிப்பில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி (Yellow fever Vaccine) போட்டு கொள்ள வேண்டும். நாய்க்கடி ஏற்பட்ட கர்ப்பிணிகள் (Post Exposure Prophy Laxis Rabies Vaccine) நாய்க்கடி தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். நோய் வந்த பின் வருந்துவதை விட வருமுன் காத்து தாய்-சேய் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×