search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    ஐவிஎப் சிகிச்சை முறையும்... வயதின் அடிப்படையில் வெற்றி பெரும் விகிதமும்...
    X

    ஐவிஎப் சிகிச்சை முறையும்... வயதின் அடிப்படையில் வெற்றி பெரும் விகிதமும்...

    • இன்று ஐவிஎப் முறையால் பலர் குழந்தைப் பேறு பெற்றுப் பலனடைகிறார்கள்.
    • குழந்தைப் பேறு பெறுவதில் சிக்கல் இருக்கும் தம்பதியினருக்கு இது நல்ல வாய்ப்பாக உள்ளது.

    பல இந்திய தம்பதிகளுக்கு இடையே நாளுக்கு நாள் குழந்தையின்மை சிக்கல் அதிகரித்து வருகிறது. அவர்களுக்குக் குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்த இந்த IVF (ஐவிஎப்) முறை மிகச் சிறந்த வாய்ப்பாக உள்ளது. இன்று ஐவிஎப் முறையால் பலர் குழந்தைப் பேறு பெற்றுப் பலனடைகிறார்கள்! ஐவிஎப் என்பது உதவிகரமான இனப்பெருக்க தொழிற்நுட்பம் ஆகும். இது பெரும் அளவில் திருமணமானதாகிப் பல ஆண்டுகள் குழந்தைப் பேறு பெறுவதில் சிக்கல்கள் உள்ள தம்பதியினர்களுக்கு உதவியாக உள்ளது.

    ஐவிஎப் (IVF) சிகிச்சை முறை பலரைத் தாயாக ஆக்கி உள்ளது. இனியும் நம்மால் குழந்தைப் பெற முடியுமா என்று நம்பிக்கை இழந்த பெண்களுக்கும், நம்பிக்கை ஊட்டும் விதமாக இந்தச் சிகிச்சை முறை அமைந்துள்ளது. இந்தச் சிகிச்சை முறையில் மனைவியின் கரு முட்டை மற்றும் கணவனின் விந்தும் உபயோகிக்கப்படுகின்றன.

    ஐவிஎப் முறையின் நடைமுறைப்படி (IVF Procedure Step by Step) கரு முட்டை மற்றும் விந்தணு ஒரு ஆய்வக வட்டில் வைத்துக் கருத்தரிக்கப்படுகிறது. கரு குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்த பின் கருப்பைக்குள் வைக்கப்பட்டு முழு வளர்ச்சி அடைகிறது. கரு முட்டை மற்றும் விந்தணுவைக் கொண்டு ஆய்வகத்தில் கரு உற்பத்தி செய்யப்பட்ட பின் பெண்ணின் கருப்பைக்குள் வைத்து முழு வளர்ச்சி அடைவதால் இந்தச் சிகிச்சை முறை உறுதியான குழந்தைப் பேறு பெறுவதில் சிக்கல்கள் இருக்கும் தம்பதியினருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. எனினும் இந்தச் சிகிச்சை முறையின் வெற்றி விகிதம் அந்தப் பெண் மற்றும் ஆண் வயது, உடல் ஆரோக்கியம், கருப்பையின் ஆரோக்கியம் ஆகியவற்றைச் சார்ந்தே உள்ளது.

    இந்தச் சிகிச்சை முறையைச் செய்து கொள்ள மனம் மற்றும் உடல் பலம் தேவை. இது ஒரு உலகளவில் வெற்றி பெற்ற சிகிச்சை முறையாகும். இந்தச் சிகிச்சை முறை நடைபெற குறைந்தது 2 வாரக் காலங்கள் எடுத்துக் கொள்ளும். இதனால் சிகிச்சை பெரும் தம்பதியினர் அவ்வப்போது மருத்துவமனைக்கு வந்து செல்ல வேண்டிய தேவை இருக்கும். பொறுமையும் திடமான மனதும் இந்த சிகிச்சையில் வெற்றி பெற பெரிதும் அவசியம்.

    ஐவிஎப் சிகிச்சை முறையின் வெற்றி பெரும் விகிதம்

    அனைத்து வயது பெண்களும் இந்தச் சிகிச்சை முறையை முயலலாம் என்றாலும் அதன் வெற்றி பெரும் விகிதம் அவர்களது தற்போதைய வயது, உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தின் அளவைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. அதை நீங்கள் தெரிந்து கொள்ள இங்கே சில குறிப்புகள்:

    35 வயதிற்குள் இருக்கும் பெண்களின் வெற்றி விகிதம் 41% - 43%

    35 - 37 வயதிற்குள் இருக்கும் பெண்களின் வெற்றி விகிதம் 33% - 36%

    38 - 40 வயதிற்குள் இருக்கும் பெண்களின் வெற்றி விகிதம் 23% - 27%

    40 வயதிற்கு மேல் இருக்கும் பெண்களின் வெற்றி விகிதம் 13% -18%

    Next Story
    ×