என் மலர்
பெண்கள் உலகம்
- பெண்களின் வாழ்க்கையில் மாதவிடாய் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
- சிலர் மாதவிடாய் காலத்தில் எரிச்சல் போன்றவற்றை உணரலாம்.
பெண்களின் வாழ்க்கையில் மாதவிடாய் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சிலர் மாதவிடாய் காலத்தில் எரிச்சல் போன்றவற்றை உணரலாம், சிலருக்கு படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாத அளவிற்கு வலியும் ஏற்படலாம். அந்த காலங்களில் மாதவிடாய் ஆரோக்கியம் பற்றியும், சுகாதாரம் பற்றியும் விழிப்புணர்வு இல்லாததால் நிறைய பெண்கள் பல பிரச்சினைகளுக்கு ஆளானார். இன்றும் பல பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியம் பற்றி தெரிவதில்லை காரணம் சமூகத்தில் மாதவிடாய் பற்றி பேச நிறைய தடைகள் உள்ளன. எனவே, உங்களுக்காக மாதவிடாய் ஆரோக்கியம் பற்றியும் மாதவிடாய் காலத்தில் நம்மை எப்படி பராமரித்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நீண்ட நேரம் ஒரே நாப்கினை பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால் அரிப்பு மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஒருவர் மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கின்களை மாற்ற வேண்டும். ஒரு டேம்பானை 8 மணி நேரத்திற்கு மேல் வைத்திருக்கக் கூடாது.
தற்போது சந்தைக்கு புதிதாக வந்துள்ளது டிஸ்போசபிள் பிரீயட் பேண்டீஸ். இந்த வகை பெண்களுக்கு மிகவும் ஏற்றது. அவர்கள் பயணங்கள் மேற்கொள்ளும் போதும், இரவு நேர தூக்கத்தின் போது இந்த பேண்டீஸ் உங்களுக்கு ஏற்றது.
பீரியட் உள்ளாடை அல்லது பீரியட் பேண்டி குறிப்பாக மாதவிடாய் ஓட்டத்தை உறிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பிரத்யேக துணி மாதவிடாய் ரத்தத்தை உறிஞ்சி சருமத்தை ஈரப்பதம் இல்லாமல் வைத்திருக்கும். துணியில் உள்ள இழைகள் திரவத்தை பூட்டி, கசிவு மற்றும் துணிகளை கறைப்படுத்துவதைத் தடுக்கிறது. அவை துர்நாற்றத்தையும் தடுக்கின்றன.
சந்தையில் புதிதாக வெளியாகி உள்ள டிஸ்போசபிள் பீரியட் உள்ளாடை சௌகரியமாகவும் கவலையற்ற கால அனுபவத்தை அளிப்பதற்கும் உறுதி செய்கிறது. இந்த புதுமையான தயாரிப்புகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மட்டுமல்ல, வசதியானவையும் கூட. மற்றும் கசிவு இல்லாதவை. உங்கள் ஆன்ட் ஃப்ளோவின் வருகையை இனிமையாக்க சிறந்த காலுறைகளை நீங்கள் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.
- காலணிகளை கவனமுடன் கையாள வேண்டும்.
- காலணிகளை முடிந்தவரை உலர்வான இடத்தில் பத்திரப்படுத்த வேண்டும்.
மழைக்காலத்தில் வெளியில் செல்லும்போது தண்ணீர், சகதி ஆகியவை காலணிகளில் படுவதால் அவை விரைவாக சேதமடையும். குறிப்பாக ஷூக்கள் மழையில் நனைந்தால், அவற்றை மீண்டும் பயன்படுத்துவது சிரமமாகும். இதை தடுக்க மழைக்காலத்தில் நாம் அணியும் காலணிகளை கவனமுடன் கையாள வேண்டும். அதற்கான சில வழிகள்:
மழை நாட்களில் எல்லா இடங்களிலும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். காற்றில் இருக்கும் ஈரப்பதமும் காலணிகளை சேதமடைய செய்யும். இதனால் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு காலணிகளின் மேற்பரப்புகளில் சாம்பல் மற்றும் கருப்புநிற புள்ளிகள் தோன்றும். எனவே, காலணிகளை முடிந்தவரை உலர்வான இடத்தில் பத்திரப்படுத்த வேண்டும். காகிதங்கள் அல்லது டிஷ்யூ தாளைக் கொண்டு காலணிகளை பொதிந்து வைக்கலாம்.
சாலையில் தேங்கும் மழைநீரில் இருக்கும் மண்ணும், சகதியும் ஷூக்களை எளிதில் அசுத்தமாக்கும். இதுபோன்ற நேரங்களில் அவற்றை பற்பசை கொண்டு எளிதில் சுத்தம் செய்யலாம். வெள்ளை நிற பற்பசையை ஷூவில் உள்ள அழுக்கான இடத்தில் பூசி, டூத்பிரஷ் கொண்டு மெதுவாக தேய்க்க வேண்டும். பின்பு அந்த இடத்தை ஈரமான துணி அல்லது டிஷ்யூ தாள் மூலம் துடைத்து சுந்தம் செய்யலாம்.
ஷூவை சுத்தம் செய்ய பலரும் அதிக அளவு தண்ணீரை செலவழிப்பார்கள். ஆனால், இது அனைத்து வகையான ஷூவுக்கும் பொருந்தாது. லெதர் மற்றும் மெல்லிய தோல் கொண்டு தயாரிக்கப்பட்ட ஷூக்களை அதிகமான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யும்போது, அவை எளிதில் சேதமடையும். சிறிதளவு தண்ணீரில் சோப்பை கலந்து, அதில் துணியை நனைத்து, அதன் மூலம் ஷூக்களை சுத்தம் செய்யலாம்.
லெதர் ஷூக்களின் வெளிப்பகுதி மட்டுமில்லாமல், அவற்றின் உள்பகுதியையும் முழுவதுமாக உலர வைக்க வேண்டும். உள்பகுதியில் ஈரப்பதம் இருந்தால், அந்த ஷூக்களை அணியும்போது பாதங்களில் கிருமித்தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இதுதவிர வியர்வையால் ஏற்படும் பாக்டீரியா பெருக்கமும் ஈரப்பதத்தோடு சேர்ந்து ஷூக்களில் துர்நாற்றம் வீசச்செய்யும்.
ஷூக்களின் உள்பகுதியில் டிஷ்யூ தாளை பொதிந்து வைத்தால், அவை எளிதாக ஈரத்தை உறிஞ்சிக்கொள்ளும். அதன்பிறகு ஷூவின் உள்ளே சிறிது டால்கம் பவுடரை தூவி வைக்கலாம். வாரத்திற்கு 2 முதல் 3 முறை இவ்வாறு செய்யலாம். தினமும் ஷூவுக்கு பாலிஷ் போடுவது ஷூவை பளபளக்க செய்வதுடன், பூஞ்சை பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கும்.
ஷூக்களில் பூஞ்சைத்தொற்று ஏற்பட்டால், உலர்ந்த பழைய பிரஷ் கொண்டு அதை முழுவதும் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். ஷூவின் அனைத்து பகுதியையும் சுத்தம் செய்வது முக்கியமானது. அதன்பிறகு நேரடி வெயிலிலோ அல்லது மின்விசிறி காற்றிலோ ஷூவை உலர வைக்க வேண்டும்.
மழைக்காலத்தில் லெதர், கேன்வாஸ் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட ஷூக்களை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்கலாம். ரப்பர் அல்லது பி.வி.சி. பொருட்களால் தயாரிக்கப்பட்ட பிளிப் பிளாப்களை பயன்படுத்தலாம். கிராக்ஸ், பிளாஸ்டிக் ரக காலணிகளையும் பயன்படுத்தலாம். ஏனெனில், இவற்றை எளிதாக உலர வைக்க முடியும். மழைக்காலத்தில் ஹீல்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும். தட்டையான கீழ்ப்பகுதி கொண்ட காலணிகளை அணிவது நல்லது.
- தெய்வ சிலைகளை வாசலில் வைப்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
- வீட்டின் வாசலில் சூரிய வெளிச்சம் நன்றாக பட வேண்டும்.
வீட்டு வாசலை சுத்தமாகவும், அலங்கரித்தும் வைப்பதன் மூலம் நேர்மறை ஆற்றல் வீட்டுக்குள் நுழையும். இது அந்த வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கு நற்பலன்களையும், செல்வச்செழிப்பையும் கொடுக்கும். வாசல் கதவை மாவிலை தோரணங்கள், அலங்காரப்பொருட்கள் கொண்டு அலங்கரியுங்கள். தெய்வ சிலைகளை வீட்டு வாசலில் வைத்து அலங்கரிப்பது, நேர்மறை ஆற்றலை அதிகரித்து அதிர்ஷ்டத்தை அளிக்கும்.
வாசலின் அருகில் கண்ணாடி பவுலில் தண்ணீர் நிரப்பி அதில் மலர்களை மிதக்க விடுவதும், வாஸ்து சாஸ்திரத்தின்படி நன்மை தரும் விஷயமாகும். வீட்டின் வாசல் எப்போதும் நல்ல வெளிச்சத்தோடு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். காலை வேளையில் வீட்டின் வாசலில் சூரிய வெளிச்சம் நன்றாக பட வேண்டும்.
மாலை வேளையில் நுழைவு வாயிலில் நல்ல வெளிச்சம் இருக்குமாறு விளக்குகளை பொருத்துங்கள். மணி பிளான்ட் போன்ற அதிர்ஷ்டத்தை வரவழைப்பதாக நம்பப்படும் செடிகளை வீட்டின் முன்பக்க கதவுக்கு அருகில் வளர்க்கலாம். உடைந்த பொருட்கள், குப்பைக்கூடைகள், செருப்புகளை அடுக்கி வைக்கும் ரேக்குகள் ஆகியவற்றை வீட்டு வாசலுக்கு முன்பாக வைப்பதை தவிருங்கள்.
- தூங்க செல்வதற்கு முன்பு குளிப்பது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
- ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு உடலை சுத்தம் செய்ய வேண்டும்.
அலுவலக வேலைக்கு செல்பவர்கள் காலையில் குளித்துவிட்டு புத்துணர்ச்சியோடு வீட்டை விட்டு கிளம்புவார்கள். கடினமான உடல் உழைப்பு கொண்ட வேலைக்குச் செல்பவர்கள் நாள் முழுவதும் உடல் வியர்வை, உடல் சோர்வை போக்கும் விதமாக இரவில் குளிக்கும் வழக்கத்தை பின்பற்றுவார்கள்.
உடல் உழைப்பு சார்ந்த விஷயமாக பார்க்காமல் எந்த நேரத்தில் குளிப்பது சிறந்தது? என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பதுதான் அதிக பலன்களை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இரவில் ஏன் குளிக்க வேண்டும்?
சரும நிபுணர்களின் கருத்துப்படி, தூங்க செல்வதற்கு முன்பு குளிப்பது சரும ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது சருமத்தில் அழுக்கு, வியர்வை படிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சிலருக்கு ஒவ்வாமை பிரச்சினையும் ஏற்படும். இரவில் ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு உடலை சுத்தம் செய்ய வேண்டும். இரவுநேர குளியல் அந்த வேலையை செய்துவிடும்.
காலையில் குளிக்கலாமா?
காலையில் குளித்துவிட்டு அந்த நாளை தொடங்குவது உற்சாகத்தைக் கொடுக்கும். காலை குளியல் நம் உணர்வுகளை புத்துணர்ச்சியாக்கும் தன்மை கொண்டது.
பொதுவாக காலையில் எழுந்ததும் மேற்கொள்ளும் அன்றாட வேலைகளின் காரணமாக உடலில் சர்க்காடியன் ரிதத்தின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு உடல் வெப்பநிலை அதிகரிக்கும். அதிலும் ஜிம்முக்கு செல்பவராகவோ, தினமும் உடற்பயிற்சி செய்பவராகவோ இருந்தால் பயிற்சியை முடித்துவிட்டு கட்டாயம் குளிக்க வேண்டும். அப்போதுதான் உடல் வெப்பநிலை இயல்புக்கு திரும்பும்.
எப்போதும் காலை குளியல் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வையும், உத்வேகத்தையும் கொடுக்கும். அதேவேளையில் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பும் குளிக்க மறக்காதீர்கள்.
இரவு குளியல் தூக்கத்திற்கு இடையூறாக இருக்குமா?
தூங்குவதற்கு முன்பு குளிப்பது, சர்க்காடியன் ரிதத்தை கட்டுப்படுத்தி உடலின் உட்புற வெப்பநிலையை சீராக்கும். மேலும் இரவில் குளிக்கும்போது பகல் பொழுதில் உடலில் நிலவிய வெப்பநிலை படிப்படியாக குறையத் தொடங்கும். தூங்கும்போது உடலின் வெப்பநிலை குறைந்துவிடும்.
இரவில் குளிக்கும்போது சருமம் சூடாகும், அதனை உலர்த்தும்போது குளிர்ச்சியடைந்துவிடும். அத்தகைய குளிர்ச்சி தன்மை இனிமையான தூக்கத்தை தொடங்குவதற்கு உதவும். அதனால்தான் காலை குளியலை விட இரவு குளியல் அதிக பலனை கொடுப்பதாகச் சொல்கிறார்கள்.
எந்த குளியலில் பலன்கள் அதிகம் கிடைக்கும்?
இரு குளியலையும் ஒப்பிடுகையில் இரவு குளியலில்தான் அதிக பலன் கிடைக்கிறது. சருமம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடவும், நல்ல தூக்கத்தை பெறவும், அடுத்த நாளை களைப்பின்றி உற்சாகமாகத் தொடங்கவும் இரவு நேர குளியல் உதவும்.
மேலும் மன அழுத்தத்தை தூண்டும் கார்டிசோல் ஹார்மோன் அளவை சம நிலைப்படுத்தவும் இரவு குளியல் உதவுகிறது. இதன் மூலம் தோல் அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.
- உள் அறை தாவரங்கள் காற்றை சுத்திகரிக்கும் பணியை செய்கின்றன.
- அமைதியான மனநிலைக்கு இட்டு செல்லும் ஆற்றல் கொண்டது.
வீட்டின் அறைகளை அழகுபடுத்தும் அம்சங்களில் ஒன்றாக உள் அலங்காரச் செடிகளும் இடம் பிடித்திருக்கின்றன. அவை அழகியல் நோக்கங்களுக்காக வளர்க்கப்பட்டாலும் பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. சில உள் அறை தாவரங்கள் காற்றை சுத்திகரிக்கும் பணியைச் செய்கின்றன. அந்த வகையில் மன நிலையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை சில உள் அலங்காரச் செடிகளுக்கு இருக்கிறது. அமைதிக்கும், மகிழ்ச்சியான மன நிலைக்கும் வித்திடும் அம்சங்களை கொண்ட உள் அலங்காரச் செடிகள் உங்கள் பார்வைக்கு...
பீஸ் லில்லி
இதன் பெயருக்கேற்பவே அமைதியான மனநிலைக்கு இட்டு செல்லும் ஆற்றல் கொண்டது. இதில் மலரும் வெள்ளை நிற பூக்கள் மனதை வசீகரிக்கும். உணர்வுகளை சாந்தப்படுத்தும். காற்றின் தரத்தை மேம்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.
மணி பிளாண்ட்
`டெவில்ஸ் ஐவி' என்று அழைக்கப்படும் இதுஅதிர்ஷ்டத்துடன் தொடர்புடையது. இதனை எளிதாக பராமரிக்கலாம். குறைந்த வெளிச்சத்திலும் செழித்து வளரக்கூடியது.

ஸ்பைடர் பிளாண்ட்
காற்று மூலம் வீட்டுக்குள் சூழ்ந்திருக்கும் மாசுக்களை நீக்கும் தன்மை இந்தச் செடிக்கு உண்டு. இதனை சிறந்த காற்று சுத்திகரிப்பானாக கருதுகிறார்கள். இது வீட்டிற்கு அழகும் சேர்ப்பதோடு சுற்றுச்சூழலிலும், மன நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.
கோல்டன் பொத்தோஸ்
காற்றை சுத்தப்படுத்தும் தாவரங்களில் சிறந்ததாக கருதப்படும் இது, காற்றில் கலந்திருக்கும் கார்பன் மோனாக்ஸைடு வாயுவை உறிஞ்சி ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது. எத்தகைய கால நிலையிலும் செழித்து வளரும் திறனுடையது. இதனை வளர்த்தால் நேர்மறை ஆற்றலையும், செழிப்பையும் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
ஸ்நேக் பிளாண்ட்
இந்த செடி காற்று சுத்திகரிப்பு பண்புகளை கொண்டது. குறைந்த வெளிச்சத்திலும் செழித்து வளரும் திறன் கொண்டது. அதனால் இது சிறந்த உள் அலங்கார தாவரமாக அறியப்படுகிறது. இதனை வீட்டில் வளர்ப்பது அமைதி மற்றும் நேர்மறை உணர்வை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

கற்றாழை
பெரும்பாலான வீடுகளில் வீட்டின் வெளிப்பகுதியில் இவை வளர்க்கப்படுகிறது. இதுவும் உள் அலங்காரச் செடிகளுடன் இணைந்துவிட்டது. காற்றை சுத்தப்படுத்துவதோடு பல்வேறு சரும பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கக் கூடியது. மேலும் கற்றாழையை வீட்டிற்குள் வைத்திருப்பது நேர்மறை ஆற்றலையும், அதிர்ஷ்டத்தையும் தரும் என்று நம்பப்படுகிறது.
லாவெண்டர்
இது பாரம்பரிய வீட்டு தாவரமாக இல்லாவிட்டாலும் அலங்காரச் செடிகள் வரிசையில் இடம் பிடித்துவிட்டது. மற்ற உள் அலங்காரச் செடிகளை போலவே வீட்டிற்குள் செழித்து வளரும். அதன் பூக்கள் வெளியிடும் அமைதியான வாசனை மன அழுத்தத்தைக் குறைக்கும். மனதை தளர்வடையச் செய்து இதமான உணர்வை ஏற்படுத்தும்.
- பெண்களின் உடல் எடை அதிகரிப்பது இயல்பான ஒன்றுதான்.
- நல்ல தூக்கமும், உடற்பயிற்சியும் அவசியம்.
ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க ஆசைப்பட்டால், ஆரோக்கிய உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள். அதுவே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும்
`பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடல் எடை அதிகரிப்பது இயல்பான ஒன்றுதான். சுலபமாகவே குறைத்து விடலாம். கார்போஹைட்ரேட் எனப்படும் சாதத்தை குறைத்துக்கொண்டு, நார்ச்சத்து, புரதம் அதிகமாக இருக்கும் காய்கறி, பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள். உணவுகளுடன், கேரட், வெள்ளரி சாலட்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
சிறுதானியங்களையும், பயிர் வகைகளையும் உணவோடு சேர்த்துக்கொண்டால், 3 மாதங்களிலேயே 10 கிலோ வரை உடல் எடையை குறைத்துவிடலாம். இதுவே ஆரோக்கியமான உணவு முறை. இதுவே பல இளம் தாய்மார்களுக்கு உடல் எடையை குறைக்க உதவும் வழிகாட்டி.
சோறு குறைவாகவும், காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், தானியங்கள், பயிர் வகைகள் அதிகமாகவும் இருக்கும் பட்சத்தில், உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்கும்.
உடலும் ஆரோக்கியமாக இருக்கும். நல்ல தூக்கமும், உடற்பயிற்சியும் அவசியம். இது பெண்களுக்கு மட்டுமல்ல, உடல் எடையை குறைக்க ஆசைப்படும் எல்லோருக்குமே பொருந்தும். சமச்சீரான உணவு முறையில் உடல் எடையை குறைப்பதுதான், ஆரோக்கியமானது.
சப்ளிமெண்ட் பவுடரை கலந்து குடித்தால் உடல் எடை குறையும், குறைவாக சாப்பிட்டால் உடல் எடை குறையும், பழங்களை மட்டும் சாப்பிட்டால் உடல் எடை குறையும்... என்பது போன்ற தகவல்களில் உண்மையும் இல்லை, ஆரோக்கியமும் இல்லை. ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க ஆசைப்பட்டால், ஆரோக்கிய உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள். அதுவே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.
வீட்டில் சமைக்கப்படாமல் கடைகளில் வாங்கி சுவைக்கப்படும் பாக்கெட் மற்றும் பாட்டில் உணவு பொருட்களைதான் ஜங்க் புட் என்கிறோம். ஏன்..! சாக்லெட்டும் ஜங்க் உணவுதான். இதில் கெட்ட கொழுப்பு, அளவிற்கு அதிகமான சர்க்கரை மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாமோலின் ஆயில் நிறைந்திருக்கிறது.
இவை வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிக் சிண்ட்ரம்), அதிக உடல் பருமன் (ஒபேசிட்டி) மற்றும் சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. முடிந்தவரை பாக்கெட் உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதற்கு மாற்றாக, ராகி பிஸ்கட், வேர்க்கடலை உருண்டை, சோளம், பாப்கார்ன், ராகி அரிசி புட்டு போன்றவற்றை வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம்.
குழந்தைகள் பழம், காய்கறிகளை உண்ண மறுத்தால், அதை வேறுவிதமாக சமைத்து கொடுக்கலாம். பழங்களை சாப்பிடாத குழந்தைக்கு புரூட் சாலட் கொடுக்கலாம். காய்கறிகளை சூப் ஆக சமைத்துக் கொடுக்கலாம். இல்லை என்றால், ஜூஸ் ஆக மாற்றி பருக கொடுக்கலாம். இப்போது காய்கறிகளை கொண்டு சட்னி வகைகளும் தயாரிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு வண்ணமயமான உணவு பிடிக்கும் என்பதால், பலதரப்பட்ட வண்ணங்களில் உணவு சமைக்கலாம்.
எல்லா வயது பெண்களும் தங்கள் உணவோடு, நிச்சயம் கால்சியம் (பால், தயிர், மோர்), புரோட்டீன் (முட்டை, சிக்கன், சீஸ், மீன், உடைந்த கடலை, பீன்ஸ், பருப்பு வகைகள்) சேர்த்துக்கொள்ள வேண்டும். 40 வயதை தாண்டிய பெண்கள், தினமும் 2 பேரீச்சை பழங்களை சாப்பிட வேண்டும்.
முடிந்தவரை, ஆரோக்கியமானதை சாப்பிட வேண்டும். தங்களுக்கு என நேரம் ஒதுக்கி, தங்களை உடல் அளவிலும் மனதளவிலும் பக்குவப்படுத்திக் கொள்வது அவசியம். கட்டாயம், ஏதாவது ஒரு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
மனிதனின் வாழ்க்கை காலம், 100 வயதில் இருந்து 80 வயதாக குறைந்தது. பின்பு, 60 வயதாக சுருங்கியது. இப்போது 40 வயதிலேயே, மாரடைப்பு போன்ற பிரச்சினைகளால் வாழ்நாள் குறைந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்திற்கு, உணவுகள்தான் முக்கிய காரணம்.
நாம் உண்ணும் உணவுகளும், நம்முடைய உணவு பழக்கவழக்கமும் தான் நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதால், உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
முடிந்தவரை, நன்றாக சாப்பிடுங்கள். நல்லதையே சாப்பிடுங்கள். ஜங்க் உணவுகளை தவிர்த்து சமச்சீரான உணவு பழக்கத்திற்கு மாறுங்கள்.
- ஹேமமாலினி, டாக்டர், அழகுக்கலை நிபுணர்.
- மிசஸ் யுனிவர்செல் தெற்கு ஆசியா பட்டம் வென்ற அழகியும் கூட.
அழகுகலை நிபுணர், டாக்டர். ஹேமமாலினியுடன் ஒரு சிறப்பு பார்வை
டாக்டர். ஹேமமாலினி ஒரு அழகுக்கலை நிபுணர், டாக்டர் அதுமட்டுமல்ல அவர் ஒரு மிசஸ் யுனிவர்செல் தெற்கு ஆசியா பட்டம் வென்ற அழகியும் கூட. அவர் கடந்து வந்த பாதை மற்றும் அவருடைய வெற்றிப்பயணம் பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
நான் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை அதிகமாக சந்தித்துள்ளேன். நான் கிராமத்தில் இருந்து தான் நகர்ப்புற வாழ்க்கைக்கு வந்தேன். முதலில் வரும்போது நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க வேண்டி இருந்தது. இதற்கு முக்கிய காரணம் கலாச்சார வேறுபாடு.
ஏனென்றால் கிராமப்புற பகுதிகளில் வளரும் முறைக்கும், நகரங்களில் உள்ள வாழ்க்கை முறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. அதிலும் முதலில் நம்முடைய தோற்றத்தை தான் கேலி செய்வார்கள். அதாவது நகரங்களில் நாம் அணியும் உடைகளுக்கும், கிராமங்களில் உள்ள உடைகளுக்கும் வித்தியாசம் அதிகம். அந்தந்த இடத்திற்கு ஏற்றவாறு நம்மை நாம் மாற்றிக்கொண்டு தான் ஆக வேண்டும். அது தவறு கிடையாது. நாம் வசிக்கும் இடங்களுக்கு தக்கவாறு வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால் அந்த மாற்றத்தில் பல சிக்கல்கள் உருவாகும். அதாவது கம்யூனிகேசன். ஆங்கிலம் தெரியாமல் சிரமப்பட வேண்டி இருந்தது. நான் நடுத்தரமான குடும்பத்தில் இருந்து தான் வந்தேன். நான் தமிழ் வழியில் தான் படித்தேன். ஆனால் நகரப்பகுதிக்கு வரும்போது தான் இந்த ஆங்கில மொழி சிக்கல் அதிகம் இருந்தது.
நான் கடந்து வந்த பாதை எனக்கு மிகவும் சிக்கலாக தான் இருந்தது. டீன்ஏஜ் வயதில் நிறைய நண்பர்கள் இருப்பார்கள். சில நேரங்களில் அவர்களால் நிறைய மனக்கசப்புகளும் நமக்கு ஏற்படும். நம்மை விமர்சிப்பவர்களும் பலர். அதனால் நான் பல மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தேன்.
ஆனால் அப்படி இருந்த நான் ஒருநாள் முடிவெடுத்தேன். இவர்களது முன்னால் நாம் வாழ்ந்து காட்ட வேண்டும். நம்மை விமர்சித்தவர்களிடம் முன்னேறி காட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அப்போது அதிகம் இருந்தது. அப்போது ஒரு ஆசிரியர் தான் என்னை உத்வேகப்படுத்தினார். நம்பிக்கையூட்டினார். என்னுடைய பிரச்சினையை அவரிடம் விரிவாக எடுத்துக்கூறினேன்.
அவர் என்னிடம், உன்னை விமர்சித்தவர்களுக்கு நல்ல பரிசாக உன்னுடைய படிப்பை, அதாவது உன்னுடைய அடையாளத்தை பரிசாக கொடுக்க வேண்டும். நீ யார்? என்பதற்கான அடையாளம் அது. அதன் பின்னர் உன்னுடைய படிகளை ஒவ்வொன்றாக எடுத்து வைக்கலாம் என்று விளக்கி கூறி அதில் இருந்து வெளியே வருவததற்கு வழிகாட்டியாக இருந்தார்.
அதனாலேயே நான் பல்மருத்துவம் படித்தேன். அதன்பிறகு என்னை அழகு விஷயத்தில் யார் அவமானப்படுத்தினார்களோ அவர்களது முன்னால் நான் ஜெயிச்சு காண்பிக்க வேண்டும் என்று அழகுக்கலை பற்றி படிக்க ஆரம்பித்தேன். அப்போது அழகுக்கலை பற்றி படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்தது. எனவே அதில் முழுகவனத்தை செலுத்த ஆரம்பித்தேன். அழகுக்கலை பற்றி நிறைய தேடித்தேடி படித்தேன்.
இப்போது வளர்ந்து வரும் இளம்தலைமுறைகளுக்கு நான் சொல்வது என்னவென்றால் கண்டிப்பாக எல்லா மனிதர்களுக்கும் குறை என்பது இருக்கும். அதேநேரத்தில் நமக்குள் இருக்கும் நிறைகள் நமக்கு தெரிவதில்லை. குறிப்பாக நம்முடைய முகம் நமக்கு மிகவும் பிடிக்கும். கண்ணாடியில் முகத்தை பார்க்கும் போது முகம் அழகாக தெரியும் அது வெறும் வெளித்தோற்றம் மட்டுமே. நம்முடைய குணத்தை அது வெளிப்படுத்தாது.
நம்முடைய வெளித்தோற்றம் என்றுமே நம்மை பற்றி சொல்லாது. நமக்குள் இருக்கும் திறமை தான் நம்மை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச்செல்லும். தன்னம்பிக்கை என்ற ஒன்று இருந்தால் போதும் அது நம்மை முன்னேற பாதைக்கு அழைத்துச்செல்லும்.
இப்போது பெண்களுக்கு நாம் அழகாக இல்லை, கலராக இல்லை என்று தோன்றுகிறது. ஆனால் இப்போது உள்ள காலக்கட்டத்தில் நிறைய சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. எனவே தைரியமாக தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.
நான் தற்போது ஒரு என்.ஜி.ஒ.வுடன் இணைந்து மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறேன். எப்படி இது ஆரம்பித்தது என்றால் நான் ஏற்கனவே ஒரு அழகுகலை நிபுணர், நான் டாக்டர் ஆனால் கேன்சர் ஸ்பெஷலிஸ்ட் ஆக வேண்டும் என்பது எனது சின்ன வயது ஆசை. ஆனால் நான் பல்மருத்துவம் தான் படித்தேன்.
அதன்பிறகு அழகுக்கலை மேல் ஆர்வம் அதிகம் இருந்தது. அதன்பிறகு தான் கேன்சர் பற்றி விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்தது. கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்து என்னுடைய பணியை செய்ய ஆரம்பித்தேன்.
அப்போதுதான் கேன்சரால் பாதிக்கப்பட்டு ஹீமோதெரப்பி எடுப்பவர்களுக்கு முடிகொட்டுதல், சரும வறட்சி போன்றவற்றால் பாதிக்கப்படுவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தேன். எனது அழகுக்கலை நிறுவனத்தின் மூலம் கேன்சர் நோயாளிகளுக்கு செயற்கை புருவங்கள் வரைவது, முடிகளை கொடுப்பது போன்ற உதவிகளை செய்து வருகிறேன்.
நானும் உருவ கேலிக்கு ஆளாகி இருந்ததால் அதன் வலி எனக்கு தெரியும். எனவே அவர்களுடைய வலியை புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறேன். இது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.
நாம் நமக்கான அடையாளத்தை உருவாக்கும் போது நம்மை பார்த்து கேலி செய்த விமர்சனங்கள் விலகி போய்விடும் என்பதற்கு டாக்டர்.ஹேமமாலினி ஒரு உதாரணம்.
- லெகங்கா இளம் பெண்களின் விருப்பமான திருமண உடையாக மாறி இருக்கிறது.
- தற்போது பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வருகிறது.
வட இந்திய திருமணங்களில் மட்டுமே கவனம் ஈர்த்த லெகங்கா தற்போது தமிழ்நாட்டு இளம் பெண்களின் விருப்பமான திருமண உடையாக மாறி இருக்கிறது. திருமண வரவேற்பின் போது மணப்பெண்கள் பலரும் லெகங்கா அணிவது அதிகரித்து வருகிறது. நீண்ட பாவாடை, வேலைப்பாடுகள் நிறைந்த ரவிக்கை, அதற்கேற்ற துப்பட்டா என இருந்த லெகங்காவில் தற்போது பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வருகிறது. மணமகளின் அழகுக்கு அழகு சேர்க்கும் லெகங்கா வகைகள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

படேல் லெகங்கா:
பேஷன் துறையில் அதிகமாக பெண்களை கவரும் ரகங்களில் படேல் லெகங்காவும் ஒன்று. மெஹந்தி, சங்கீத் போன்ற பகல்நேர திருமண நிகழ்வுகளில் மணமகளை ஜொலிக்கச் செய்யும் இந்த உடைகள். வெளிர் நிறங்களில் தான் பெரும்பாலும் கிடைக்கின்றன. எடை குறைவாக இருப்பது இவற்றின் சிறப்பாகும். ஆர்கன்சா முதல் வெல்வெட் வரை பல்வேறு துணி ரகங்களை பயன்படுத்தி படேல் லெகங்கள் தயாரிக்கப்படுகிறது.

மெட்டாலிக் லெகங்கா:
மாலைநேர நிகழ்வுகளில் தனித்து தெரிய விரும்பும் பெண்களுக்கு ஏற்ற ரகம் இதுவாகும். பட்டு, புரோக்கேட் மற்றும் ஜார்ஜெட் போன்ற துணி ரகங்களை கொண்டு இவ்வகை லெகங்கா தயாரிக்கப்படுகிறது. தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோக நிறங்களில் தயாரிக்கப்படுவது இதன் சிறப்பாகும். மெட்டாலிக் லெகங்கா அணியும்போது. அதிக ஆடம்பரமில்லாத எளிமையான நகைகளும், 'ஹை ஹில்ஸ்' காலணியும் அணியலாம்.

அடுக்கு லெகங்கா:
இடுப்பு முதல் கால் வரை பல்வேறு அடுக்குகளாக தயாரிக்கப்படும் அடுக்கு லெகங்கா, அணிபவரின் அழகுக்கு அழகு சேர்க்கும். டல்லே முதல் ஆர்கன்சா வரை பல்வேறு துணி ரகங்களை பயன்படுத்தி குறைந்த எடையுடன் இது தயாரிக்கப்படுகிறது.
எந்த நிறத்தை தேர்வு செய்யலாம்?
சிவப்புடன் தங்கநிறம் கலந்துள்ள வண்ணத்தை திருமண விழாவுக்கு அணிந்தால் ஆடம்பரமான தோற்றத்தை தரும். ஆரஞ்சு, சிவப்பு போன்ற வண்ணங்கள் மேலும் இளமையாகக் காட்டும். மஞ்சள் மற்றும் பச்சை இரண்டும் இணைந்த நிறம் கொண்ட லெகங்கா அணிந்தால் உங்கள் தோற்றம் மிடுக்காக மாறும்.

கேப் லெகங்கா:
சமீப காலமாக பிரபலமாகி வரும் கேப் லெகங்கா திருமணத்தின் முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றது. மிருதுவான ஷிப்பான் முதல் வெல்வெட் வரை பல்வேறு துணி ரகங்களில் தயாரிக்கப்படுகிறது. ஆடம்பரமான எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்படும் கேப் லெகங்கா அணிபவரின் தோற்றத்தை மிடுக்காகக் காட்டும்.
பிரிஞ்ச் லெகங்கா:
பாவாடை, ரவிக்கை, துப்பட்டாவுடன் கூடிய பிரிஞ்ச லெகங்கா பார்ப்பதற்கும். அணிவதற்கும் மிடுக்காக இருக்கும், இதன் வடிவமைப்பில் தற்போது 'போ ஹேமியன்" எனும் புது பாணி சேர்க்கப்பட்டுள்ளது.

ஜாக்கெட் லெகங்கா:
மேலே ஓவர் கோர்ட் போன்ற மாடலில் தயாரிக்கப்படும் இது குளிர்காலங்களில், அணியும்போது கதகதப்பாகவும். ஸ்டைலாகவும் இருக்கும். வெல்வெட் மற்றும் புரோகேட் போன்ற கனமான துணியால் ஜாக்கெட் லெகங்கா தயாரிக்கப்படுகிறது.
- உங்களுடைய முதலீட்டுக்கான பணத்தை தெளிவாக திட்டமிட வேண்டும்.
- நிதியை பெருக்கும் வழிகளில் பங்குச்சந்தைக்கு பெரும்பங்கு உண்டு.
தனிநபர் முதல் நிறுவனங்கள் வரை அவசியமாக பின்பற்ற வேண்டிய பொருளாதார நிலைகளில் சிக்கனமும், சேமிப்பும் முக்கியமானவை. அதிலும் சிறுதொழில் செய்யும் பெண்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில நிதி சார்ந்த ஆலோசனைகள் இங்கே...
சிறு தொகையைக்கூட வீணாக்காமல் சேமித்து வைப்பது, எதிர்காலத்தில் உண்டாகும் அவசர தேவைகளுக்கு சிறந்த உதவியாக இருக்கும். ஆகையால் பெரிய அளவு சேமிப்பை உருவாக்க உதவும். ஒரு முறையான முதலீட்டுத் திட்டத்தை பெண் தொழில்முனைவோர் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமாகும்.
அடிக்கடி நிதி நெருக்கடியை சந்திக்கும் பட்சத்தில், முதலில் உங்களுடைய முதலீட்டுக்கான பணத்தை தெளிவாக திட்டமிட வேண்டும். உங்களுடைய வருமானத்தில் அடுத்தக்கட்ட முதலீட்டுக்கு தேவையான பணத்தை தவிர, மீதி இருக்கும் தொகையை சேமிப்பில் செலுத்துவது நிதி நெருக்கடியை சிரமம் இல்லாமல் கையாள உதவும்.
தொழில் தொடங்கிய ஆரம்ப காலத்தில், உங்களுக்கான வரைமுறைகளை திட்டமிட்டு அதன்படி செயல்படுவது முக்கியமானது. உங்களுடைய லாபம் பெருகாமல் இருக்கும்போது, முதலீட்டின் அளவை எந்த காரணத்துக்காகவும் அதிகரிக்கக் கூடாது. இது பணம் விரயமாவதை தடுப்பதோடு, எதிர்காலத்தில் ஏற்படும் நிதி நெருக்கடியை தவிர்ப்பதற்கும் உதவும்.
நிதியை பெருக்கும் வழிகளில் பங்குச்சந்தைக்கு பெரும்பங்கு உண்டு, பங்குச்சந்தை பற்றிய முழு தகவலையும் தெரிந்து கொண்டு அதில் முதலீடு செய்யலாம். அதற்கான வல்லுனரின் ஆலோசனையின்படி முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்ததாகும். வங்கி, பங்குச்சந்தை என எதை தேர்ந்தெடுத்து முதலீடு செய்தாலும், நீண்டகால முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. இது எதிர்காலத்தில் நிதி பற்றாக்குறை இல்லாமல் பயணிக்க உதவும்.
பணத்தை சேமிப்பது மட்டுமில்லாமல், அதை பெருக்குவதும் முக்கியமானது. அதிக தொகை கொண்ட சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய முடியாதவர்கள், உங்களுடன் சேர்ந்து வளர்ந்து வரும் நம்பிக்கையானவர்களின் தொழிலுக்கு முதலீடு செய்யும் பங்குதாரராக செயல்படலாம். இது உங்களுக்கு மற்றொரு முறையில் வருமானம் ஈட்டுவதற்கு வழிவகுப்பதோடு, உங்கள் தொழிலில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்கும் உதவும்.
சேமிப்பை போலவே சிக்கனமும் பொருளாதார உயர்வுக்கு வழிவகுக்கும். தொழில் சார்ந்த கடன்கள் அதிகரிக்க நேர்ந்தால், முடிந்தவரை குறைந்த வட்டி விகிதம் இருக்கும் கடன் திட்டங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. இது கடனை அடைப்பதற்காக சேமிப்பு பணத்தை எடுத்து செலவு செய்வதை தவிர்க்க உதவும். நீங்கள் செய்யும் தொழிலில் எப்போது வேண்டுமானாலும் ஏற்ற இறக்கங்களை சந்திக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெறுவதை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு பணத்தை எடுத்து சமாளிப்பது. உங்களுடைய எதிர்கால திட்டங்களை பாதிப்பதோடு. தொழிலில் நஷ்டத்தையும் ஏற்படுத்தலாம்.
- பல பெண்கள் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள்.
- பெண்கள் தங்களுடைய உடல்நலனில் கவனம் செலுத்துவது இல்லை.
குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் பெண்கள் பலரும், தங்களுடைய உடல்நலனில் கவனம் செலுத்துவது இல்லை. இதனால் குறிப்பிட்ட வயதிற்கு பின்பு பல பெண்கள் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். இவற்றை தடுக்க பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.
மனநலம்:
உளவியல் ரீதியாக ஆண்களை விட பெண்கள், மனச்சோர்வு மற்றும் பதற்றத்தால் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனச்சோர்வு, பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினையாக மாறி வருகிறது. கர்ப்ப காலத்திலும், அதற்கு பிறகும் இந்த விஷயத்தில் பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆனால், பலரும் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர்.
அடிக்கடி மனச்சோர்வு, பதற்றம் ஏற்பட்டால் ஆரம்ப நிலையிலேயே உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை அலட்சியப்படுத்தினால் நாளடைவில் குடும்ப வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே 2 வாரங்களுக்கு மேல் மனச்சோர்வு சார்ந்த பிரச்சினைகள் இருப்பதை உணர்ந்தால், அதை புறக்கணிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
இதய நோய்கள்:
சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில், வாழ்க்கை முறை மாற்றத்தால் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. சிறு சிறு அறிகுறிகளை கவனிக்காமல் பெண்கள் அலட்சியம் காட்டுவதுதான் இதற்கு முக்கிய காரணமாகும். மாரடைப்பு ஏற்படும்போது ஆண்களைப்போல இல்லாமல், பெண்களுக்கு வேறுவிதமான அறிகுறிகள் தென்படும்.
நெஞ்சுவலி. மூச்சுத் திணறல், குமட்டல், வாந்தி, முதுகு, கழுத்து அல்லது தாடை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமானது.
தூக்கமின்மை:
உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது தூக்கமின்மை. இதயநோய், உடல் பருமன் மற்றும் மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன. பெரியவர்களுக்கு இரவில் 7 முதல் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியமானது. தியானம், யோகா, மிதமான உடற்பயிற்சிகள் செய்வது. வெந்நீரில் குளிப்பது, நடைப்பயிற்சி மேற்கொள்வது போன்றவை தூக்கத்தை மேம்படுத்துவதற்கான எளிய வழிகளாகும்.
மருத்துவ பரிசோதனைகள்:
பெண்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும். வயதை பொறுத்தும் சில பரிசோதனைகளை பெண்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயை கண்டறிவதற்கான பேப் ஸ்மியர் சோதனைகள், மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்கும் மேமோகிராம் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனைகள், எலும்பு தேய்மானத்தை கண்டறிய உதவும் பரிசோதனைகள், கால்சியம் குறைபாடு, பாலியல் சார்ந்த தொற்றுகளை கண்டறிய உதவும் எஸ்.டி.டி. ஸ்கிரீனிங், குடல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளை கண்டறிய உதவும் கொலோனோஸ் கோபி போன்ற பரிசோதனைகளை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மேற்கொள்வது நல்லது.
- புற்றுநோய் பெண்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.
- ரத்தப் பரிசோதனை மூலம் கொழுப்பின் அளவை கண்டறியலாம்.
குடும்ப நலன் நாடும் பெண்கள் தங்கள் நலனில் போதிய அக்கறை கொள்ளாததால் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒருசில பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் பெரிய அளவிலான ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். அதற்கு செய்ய வேண்டிய சில பரிசோதனைகள் குறித்து பார்ப்போம்..
புற்றுநோய்
உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் புற்றுநோய் பெண்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. அதிலும் பல பெண்கள் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இளம் வயது பெண்கள் கூட இந்த புற்றுநோயால் அவதிக்குள்ளாகிறார்கள். அதனால் 20 வயதை கடந்த பெண்கள் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
மார்பக புற்றுநோயும் வயது வித்தியாசமின்றி பாதிப்பை ஏற்படுத்துவதால் அதற்குரிய பரிசோதனையையும் அவசியம் மேற்கொள்ள வேண்டும். 40 வயதை கடந்த பெண்கள் மார்பக புற்றுநோய்க்கான மேமோகிராம் சோதனையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்து கொள்வது நல்லது.
கொழுப்பு பரிசோதனை
ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகம் சேர்ந்தால், பல்வேறு வகையான பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் குறிப்பிட்ட காலகட்டத்தில் கொழுப்பு அளவை கண்டறிய வேண்டியது அவசியமானது. சாதாரண ரத்தப் பரிசோதனை மூலமே கொழுப்பின் அளவை கண்டறிந்துவிடலாம். அதனால் 5 ஆண்டு களுக்கு ஒருமுறையாவது கொழுப்பு பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. 20 வயதை கடந்த பெண்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.
தைராய்டு பரிசோதனை
கழுத்து பகுதியில் அமைந்திருக்கும் தைராய்டு சுரப்பியின் முக்கியமான பணி, தைராக்சின் என்ற ஹார்மோனை சுரப்பதுதான். இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமானால் ஹைப்பர் தைராய்டிசம், குறைந்தால் ஹைப்போ தைராய்டிசம் என்ற பாதிப்பு உண்டாகும். ஆரம்ப நிலையிலேயே தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றத்தை கண்டறிந்தால் மருந்துகளின் மூலம் குணப்படுத்திவிட முடியும்.
கழுத்தில் வீக்கம் அல்லது கட்டி இருந்தால் அது பெரும்பாலும் தைராய்டு கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்வதன் மூலமே கண்டறிய முடியும். ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்துவிட்டால் நோய் பாதிப்பின் வீரியத்தை கட்டுப்படுத்திவிடலாம்.
கண்பார்வை பரிசோதனை
பெண்கள் பலரும் கண் பார்வை பரிசோதனை மேற்கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. அதன் அவசியத்தை புரிந்து கொள்வதுமில்லை. கண் பார்வையில் சிறு குறைபாடு தென்படும்போதே கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்திவிடுகிறார்கள்.
நாளடைவில் கண் பார்வை குறைபாடு பிரச்சினை அதிகரிக்க தொடங்கிவிடுகிறது. ஆண்டுக்கு ஒருமுறையாவது கண் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. கண்ணாடி அணியுமாறு மருத்துவர் பரிந்துரைத்த நபர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
எலும்பு அடர்த்தி சோதனை
எலும்புகள் பலவீனம் அடைந்தால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். எலும்புகளின் அடர்த்தியில் மாறுபாடு ஏற்படும்போது கடுமையான விளைவுகளை அனுபவிக்க நேரிடும். எலும்பின் அடர்த்தியை முன்கூட்டியே பரிசோதனை செய்து அறிந்து கொண்டால் இந்த நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
பெண்கள் 5 வருடங்களுக்கு ஒருமுறை இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. அதிலும் 65 வயதை கடந்த பெண்கள் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாதவிடாய் நிற்கும் காலகட்டமான மெனோபாஸ் சமயத்தில் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.
- சிசேரியன் செய்த பெண்கள் தொப்பை பாதிப்பால் அவதிப்படுகிறார்கள்.
- பிரசவத்திற்கு பின் கொழுப்பு சேர்வதாலும் தொப்பை ஏற்படுகிறது.
பிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சினைக்கு ஆளாகுகிறார்கள். அதிலும் சிசேரியன் செய்த பெண்கள் தொப்பை பாதிப்பால் அவதிப்படுகிறார்கள். சிசேரியன் செய்த பிறகு உடல் இயக்கமின்றி அதிக நேரம் படுக்கையில் இருப்பது தொப்பை உண்டாக காரணமாகிவிடுகிறது.
மேலும் வயிற்றில் இருந்த குழந்தையின் வெற்றிடத்தில் காற்று நிரம்புவதாலும், வயிற்றில் கொழுப்பு சேருவதாலும் தொப்பை ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடும். பிரசவத்திற்கு பின் வயிற்றில் கொழுப்பு சேர்வதாலும் தொப்பை ஏற்படுகிறது.

அந்த காலத்தில் பிரசவத்திற்கு பின்பு பெண்களின் வயிற்றில் இறுக்கமாக, துண்டை கட்டி வைப்பார்கள். கால்களையும் சேர்த்து அமரச்சொல்வார்கள். இதன் மூலம், தளர்வான பிறப்புறுப்பின் வழியே காற்று உட்செல்வது தடுக்கப்பட்டு, எத்தனை குழந்தைகள் பெற்றெடுத்தாலும் வயிறு ஒட்டிய நிலையில் அக்கால தாய்மார்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள்.
கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் தவிர்த்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் தொப்பை, உடல் பருமன் பாதிப்புக்கு வழிவகுத்துவிடும். பிரசவத்திற்கு பிறகு ஏற்பட்ட உடல் சோர்வும், அதனால் ஏற்படும் பசியும் உண்ணும் உணவின் அளவை அதிகப்படுத்திவிடும்.
தாய்ப்பால் கொடுப்பதற்காக சத்தான உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிட வேண்டியிருக்கும். அந்த உணவுகளாலும் உடல் எடை கூடும். குழந்தை பிறந்து ஒரு ஆண்டை கடந்த பிறகோ, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகோ உடல் பருமனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட தொடங்கிவிட வேண்டும்.
சரியான உணவுப்பழக்க வழக்கங்களையும், உடற்பயிற்சியையும் கடைப்பிடிக்க வேண்டும். பிரசவத்திற்கு பிறகு அவசியம் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளும், யோகாசனங்களும் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் உடல் தகுதிக்கு ஏற்ற பயிற்சிகளை தேர்ந்தெடுத்து செய்துவர வேண்டும். அதில் அலட்சியம் காண்பிக்கக்கூடாது.
ஏனெனில் குழந்தை ஒரு வயதை தாண்டிய பின்னரும் எடை குறைப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தால் தோற்றப் பொலிவில் மாறுதல் உண்டாகிவிடும். பின்னர் பழைய தோற்றத்திற்கு திரும்புவது கடினமான விஷயமாகிவிடும்.
இப்போது வயது வித்தியாசமின்றி பலரும் தொப்பை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். எண்ணெய் அதிகம் சேர்ந்திருக்கும் உணவுப்பொருட்களை சாப்பிடுவதும் தொப்பைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
இனிப்பு வகைகள், பதப்படுத்தப்பட்ட இனிப்பு பலகாரங்கள் அதிகம் சாப்பிடுவதும் தொப்பைக்கு வித்திடும். கார்போஹைட்ரேட் அதிகம் கலந்த உணவுகள், புரதம், நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் சாப்பிடுவதாலும் தொப்பை ஏற்படக்கூடும். பெண்களுக்கு தொப்பை அதிகம் இருந்தால் மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வரக்கூடும். தொப்பை உருவாகுவதற்கு முதன்மை காரணம் கொழுப்புதான். தண்ணீருக்கு பதிலாக அவ்வப்போது வெந்நீர் பருகுவது தொப்பையை கரைக்க உதவும்.






