என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • வெள்ளைப்போக்கு, வெட்டை என்றும் சொல்வார்கள்.
    • பெண்கள் கவனிக்காமலும், வெளியில் சொல்ல வெட்கப்பட்டும் விடுவதுண்டு.

    பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். இதை வெள்ளைப்போக்கு, வெட்டை என்றும் சொல்வார்கள். இதை பல பெண்கள் கவனிக்காமலும், வெளியில் சொல்ல வெட்கப்பட்டும் விடுவதுண்டு.

    இதை கவனிக்காமல் விட்டு விட்டால் இனவிருத்தி உறுப்புகளின் ஒரு பகுதியையோ அல்லது பல பகுதியையோ பாதித்து தீவிரமான நோய்களுக்கு அடிப்படையாக மாறிவிடும். கர்ப்பப்பையை எடுக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.

    இந்த வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் வருகிறது. குறிப்பாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு தான் அதிகமாக வருகிறது. இது வெள்ளை நிறமின்றி பல நிறங்களிலும் வெளியாகிறது. சாதாரணமாக வெளியாகும் வெள்ளைப்படுதல் மூக்கிலிருந்து நீர் வருவது போல் இருக்கும். வியாதியின் குணம் நாள்பட, நாள்பட நிறமும் மாறுபடும். எனவே வெள்ளைப்படுதல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி நோயின் தன்மையை அறிந்து கொள்வது நல்லது.

    45 வயதைக் தொடும் பெண்கள் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய வைட்டமின்கள்:

    பொதுவாக வயது அதிகமாக அதிகமாக உடலில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இதற்கு காரணம் உடலில் உள்ள சத்துக்களின் எண்ணிக்கை குறைவது தான். குறிப்பாக பெண்கள் வயது அதிகரிக்கும் போது ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் இறுதி மாதவிடாய் நெருங்க நெருங்க உடலின் செயல்பாடுகள் குறைவதோடு ஊட்டச்சத்துக்களும் குறைய ஆரம்பித்து, மூட்டுவலி, கால்வலி, மற்றும் உடல்நல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

    45 வயதை தொடும் பெண்களுக்கு வைட்டமின் பி 12 மிகவும் இன்றியமையாத வைட்டமின்களில் ஒன்றாகும்.

    அதிலும் சர்ஜரி நடந்திருந்த அல்லது இதயத்தில் பிரச்சனை உள்ள பெண்களுக்கு, இச்சத்து மிகவும் முக்கியமானது. ஆகவே வைட்டமின் பி12 அதிகம் உள்ள கானாங்கெளுத்தி மற்றும் முட்டைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் பி மற்றொரு அவசியமான வைட்டமின் ஆகும். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, ஏனெனில் இவை தான் ஒரு நாளைக்கு வேண்டிய எனர்ஜியைக் கொடுக்கிறது. எனவே பசலைக்கீரை, சால்மன், உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகளை தவறாமல் எடுத்துக் கொண்டால் இச்சத்துக்களை பெறலாம்.

    தினமும் காலையில் சூரிய ஒளி உடலில் படுமாறு இருந்தால், அது உடலில் ஏற்படும் சோர்வை நீக்கிவிடும். அதுமட்டுமல்லாமல், சால்மன் அல்லது பாலை அதிகம் குடித்தால், அது உடலில் வைட்டமின் டி-யின் அளவை அதிகரிக்கும். வைட்டமின் Q 10, 45 வயதான பெண்கள் அவசியமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இத்தகைய வைட்டமின் ஆனது மீன், கல்லீரல், நவதானியங்கள் போன்றவற்றில் அதிகம் இருக்கும். இறுதி மாதவிடாயினால் பெண்கள் அதிகப்படியான இரும்புச்சத்துக்களை இழக்க நேரிடும். இதனால் பல பெண்கள் ரத்தசோகைக்கு உள்ளாவார்கள். இந்நிலையை தவிர்க்க கீரைகளையும், ப்ராக்கோலியையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    வைட்டமின் ஏ, நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இத்தகைய வைட்டமின் ஏ சத்தானது சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட், போன்றவற்றில் அதிகம் இருக்கும் வாழைப்பழத்தில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துள்ள உணவுகளை உட்கொண்டால் நரம்பு மண்டலமானது ஆரோக்கியமாக இருக்கும்.

    • கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது.
    • எடை அதிகமுள்ள பொருட்களை தூக்குவதால் இடுப்பெலும்பு தசை பலமிழக்கும்.

    கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. பிரசவத்தின் போது தசைகள் தளர்ந்து போயிருக்கும் போதுமான அளவு ஒய்வெடுக்காமல், வேலை செய்வது, எடை அதிகமுள்ள பொருட்களைத் தூக்குவது போன்றவற்றால் இடுப்பெலும்புத் தசைப் பகுதிகள் பலமிழக்கும். பெரும்பாலும் மெனோபாஸ் வயதில் தான் இது தன் வேலையைக் காட்டத் தொடங்கும் அந்தரங்க உறுப்பின் வழியே சதைப்பகுதி வெளியே வருகிற உணர்வு இருக்கும். அடிக்கடி முதுகு வலியும் இருக்கும்.

    கர்ப்பப்பை இறக்கத்தில் 3 நிலைகள் உள்ளன. முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில், இறங்கிய கர்ப்பப்பை பகுதியை லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் இழுத்து வைத்து, டேப் மாதிரியான ஒன்றைப் பொருத்தி சரி செய்து விடலாம். அது அதே நிலையிலேயே அடுத்த சில வருடங்களுக்கு இருக்கும்.

    3-வது நிலை இறக்கம் சற்றே சிக்கலானது. இந்தநிலையில் கர்ப்பப்பையானது வெளியே தொங்க ஆரம்பித்து விடும். சிறுநீர்பையும் மலப்பையும் சேர்ந்து அழுத்தப்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வு, சிறுநீர் கழித்த பிறகும் மிச்சமிருக்கிற உணர்வு, தேங்கிப் போகிற சிறுநீரின் மூலம் இன்ஃபெக்ஷன் உண்டாகி சிறுநீரகங்களே பழுதடைவது போன்றவையும், மலச்சிக்கலும், மலம் கழித்த பிறகும் அதிருப்தியான உணர்வு போன்றவையும் சேர்ந்து கொள்ளும். ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகுவது நல்லது.

    முதல் நிலை பாதிப்பாக இருப்பின் ஸ்லிங் எனப்படுகிற அறுவை சிகிச்சையின் மூலம் தீர்வு காண்பது, எடை தூக்குவது, கடினமான வேலைகளைச் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்பது, இவையெல்லாம் பிரச்சினை தீவிரமாகாமல் தடுக்கும் வழிகள்.

    • மாதவிடாயின்போது அதிகமான ரத்தப்போக்கு ஏற்படும்.
    • அதிகமான ரத்தப்போக்கு பிரச்னைக்கு மெனரேஜியா என்று பெயர்.

    பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாயின்போது அதிகமான ரத்தப்போக்கு ஏற்படும். ஆனால், பூப்படைந்ததிலிருந்தே அதிகமான ரத்தப்போக்கு ஏற்படும் பெண்கள் அல்லது சில காலமாகவே அதிக ரத்தப்போக்கு ஏற்படும் பெண்கள் 'இது இயல்பானதுதான்' என நினைத்துக்கொள்கின்றனர். ஆனால், மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது பல்வேறு உடல்நல பிரச்னைகளின் அறிகுறியாக இருக்கலாம் எனவும், மெனோபாஸ் நிலையை அடைந்தவர்களுக்கு இவ்வாறு ஏற்பட்டால் அது கர்ப்பப்பை புற்றுநோயின் முந்தைய நிலையாக இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    அதிகமான ரத்தப்போக்கு பிரச்னைக்கு மெனரேஜியா என்று பெயர். இவ்வளவு ரத்தம் வெளியேறுவது இயல்பானது அல்லது அதனை தாண்டினால் அதீத ரத்தப்போக்கு என்பதற்கு வரையறை கிடையாது. ரத்தம் கட்டி கட்டியாக வெளியேறுவது, ஒருநாளைக்கு 2-3 நாப்கின்கள் முழுவதும் நனைந்து வெளியேற்றுவது இவற்றைத்தான் அதீத ரத்தப்போக்கு என்கிறோம். சிலர் நாப்கின்கள் சிறிது நனைந்தாலும் மாற்றிவிடுவார்கள், அதுவல்ல அதீத ரத்தப்போக்கு. ரத்தம் கட்டி கட்டியாக வெளியேறுவது நிச்சயமாக அதீத ரத்தப்போக்கின் அறிகுறிதான்.

    சிலருக்கு கர்ப்பப்பையில் ஃபைப்ராய்டு கட்டிகள் இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். இந்த கட்டிகள் கர்ப்பப்பையின் உள்பகுதிக்குள் இருந்தால் அதன் சவ்வு பெரிதாகி அதிகமான ரத்தப்போக்கு ஏற்படும். தொடர்ச்சியாக ஒருவருக்கு அதீத ரத்தப்போக்கு ஏற்படுகிறதென்றால், அதனால் அவர்களுக்கு ரத்தச்சோகை ஏற்படும். ஏனெனில், அவர்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடும். உடல் சோர்வு, பணிகளை சரிவர செய்ய முடியாதது உள்ளிட்டவை ஏற்படும்.

    பிசிஓடி உள்ளிட்ட ஹார்மோன் பிரச்னைகளுக்கு உணவின் மூலம் உடல் எடையை சரியான அளவில் வைப்பதன் மூலம் சரிசெய்ய முடியும். அப்போது, இந்த அதீத ரத்தப்போக்கு பிரச்னையும் சரியாகும். இரும்புச்சத்து அதிகமாக உள்ள பழங்கள், காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ராஜ்மா உள்ளிட்ட பீன்ஸ் வகைகள், நட்ஸ் வகைகள், மீன் உள்ளிட்ட புரதம் நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும். ஆனால், கர்ப்பப்பையில் ஏற்படும் ஃபைப்ராய்டு கட்டிகளை உணவின் மூலம் சரிசெய்ய முடியாது.

    • வெள்ளைப்படுதலில் பல வகைகள் உள்ளன.
    • மாதவிடாய்க்கு பிறகு பெண்களுக்கு வெள்ளைப்படுதல் தண்ணீர் போல இருக்கும்.

    பொதுவாக பெரும்பாலான பெண்களுக்கு தினமும் 4 மில்லி மீட்டர் அல்லது ஒரு ஸ்பூன் அளவுக்கு வெள்ளைப்படுதல் என்பது நிகழ்கிறது. இத்தகைய வெள்ளைப்படுதல் நம்முடைய உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் திரவம் இரண்டு சேர்ந்து ஒன்றாக வெளியே செல்கிறது.

    பெண்களின் உடலில் உள்ள புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் அதிகமாக சுரக்கும் போதுதான் மாதவிடாய் பிரச்சினைக்கு முன்பும், பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போதும் அதிகமாக வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது. மேலும் இதுபோன்ற நேரத்தில் வெள்ளைப்படுதல் கட்டியாக வருகிறது.

    மேலும் மாதவிடாய்க்கு பிறகு பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது தண்ணீர் போல இருக்கும். ஏனென்றால் மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் இதற்கு காரணம் ஆகும்.

    வெள்ளைப்படுதலில் பல வகைகள் உள்ளன. இதில் இளஞ்சிவப்பு நிற வெள்ளைப்படுதல், சாம்பல் நிற வெள்ளைப்படுதல், பழுப்பு அல்லது சிவப்பு நிற வெள்ளைப்படுதல், மஞ்சள் அல்லது பச்சை நிற வெள்ளைப்படுதல், அடர்நிறத்தில் வெள்ளைப்படுதல் மேலும் இதுபோன்ற வெள்ளைப்படுதல் இருந்தாலும் அல்லது அதனுடன் வேறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தாலும் உடனே டாக்டரை அணுகுவது மிகவும் நல்லது.

    • மெனோபஸ் முன்கூட்டியே வருவதற்கு 9 சதவீதம் அதிகம் வாய்ப்பு.
    • கருமுட்டை உற்பத்தி நின்றுவிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

    இரவு பணிக்கு செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலம் முன்கூட்டியே முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அத்துடன் இதயம் சார்ந்த நோய்கள், நினைவாற்றல் திறன் குறைபாடு, எலும்புகள் பலவீனமடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    20 மாதங்கள் தொடந்து இரவு நேர ஷிப்டுகளில் பணி புரியும் பெண்களிடம் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து அதன் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அப்படி 20 மாதங்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் இரவு நேரத்தில் பணி புரியும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் இறுதி நிலையான மெனோபஸ் முன்கூட்டியே வருவதற்கு 9 சதவீதம் அதிகம் வாய்ப்பிருக்கிறது.

    அதுவே 20 ஆண்டுகளாக தொடர்ந்து இரவு பணியை மேற்கொள்பவர்களாக இருந்தால் 73 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

    `45 வயதுக்கு முன்பாகவே மாதவிடாய் சுழற்சி முடிவடைந்த பெண்களாக இருந்தால் அவர்கள் ஷிப்ட் அடிப்படையில் பார்க்கும் வேலையை முக்கியமானதாக கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. வேலைக்காக தொடர்ந்து சுழற்சி முறையில் உடல் இயக்கம் நடைபெற்று கொண்டிருப்பது, மன அழுத்தம் போன்றவை அதற்கு காரணமாக இருக்கிறது. இதுபற்றி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்வது அவசியம்'' என்கிறார்,

    ஆய்வை மேற்கொண்ட கனடாவில் உள்ள டல்கவுசி பல்கலைக்கழக பேராசிரியர், டேவிட் ஸ்டாக். இரவு நேரத்தில் வேலை செய்யும்போது ஏற்படும் மன அழுத்தம் ஈஸ்ரோஜெனின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தி அதனால் முன்கூட்டியே மாதவிடாய் காலம் முடிவடைவதற்கு வழிவகுத்துவிடுகிறது.

    மேலும் கருமுட்டை உற்பத்தி நின்றுவிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு 22 ஆண்டுகளாக இரவு நேர பணியில் ஈடுபட்டிருக்கும் 80 ஆயிரம் நர்சுகள் உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

    • சிறந்த அறிவாற்றல் செயல்பாட்டிற்கும் தூக்கம் அவசியமானது.
    • போதுமான தூக்கம் வரவில்லை என்றால் மூளை சரியாக செயல்படாது

    அடிக்கடி ஞாபக மறதியால் அவதிப்படுகிறீர்களா? சின்ன விஷயம் கூட சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறதா? மற்ற வேலைகளுக்கு மத்தியில் திட்டமிட்ட விஷயம் தாமதமாக நினைவுக்கு வருகிறதா? இல்லை மறந்து விடுகிறீர்களா? இதுபோன்ற பிரச்சினைகள் எட்டிப்பார்த்தால் மூளையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது. சில வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மூளையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அவை மூளையின் செயல்பாடுகளை பாதிப்புக்குள்ளாகி நினைவாற்றல் இழப்புக்கு வழிவகுத்துவிடும்.

    தூக்கமின்மை:

    மூளையின் ஆரோக்கியத்திற்கும், சிறந்த அறிவாற்றல் செயல்பாட்டிற்கும் தூக்கம் அவசியமானது. போதுமான தூக்கம் வரவில்லை என்றால் மூளை சரியாக செயல்படாது. அதனால் நினைவாற்றல் இழப்பு சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனை தவிர்க்க இரவு 7 முதல் 8 மணி நேரம் தூங்குங்கள்.

    உணவுக்கட்டுப்பாடு:

    பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை கலந்த பானங்கள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் கொண்ட உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்வது மூளையை சேதப்படுத்தும். நினைவாற்றல் திறனை சீர்குலைக்கும். அதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதம் நிறைந்த ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.

    புகைப்பழக்கம்:

    மூளை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மோசமான விஷயங்களில் ஒன்று, புகைப்பழக்கம். புகைப்பிடிக்கும் பழக்கத்தை தொடர்வது ரத்த நாளங்களை சேதப்படுத்தும். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை குறைக்கும். இது நினைவாற்றல் இழப்பு மற்றும் பிற அறிவாற்றல் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    மது அருந்துதல்:

    அதிக அளவில் மது அருந்துவது மூளை செல்களை சேதப்படுத்தி நினைவாற்றலை பாதிக்கும். ஆல்கஹால் தூக்கத்தில் குறுக்கீடு செய்து, நினைவக கட்டமைப்பை பலவீனப்படுத்திவிடும்.

    மன அழுத்தம்:

    நாள்பட்ட மன அழுத்தம் மூளையின் நினைவகத்திற்கு முக்கிய பொறுப்பு வகிக்கும் ஹிப்போகாம்பஸை சேதப்படுத்தும். கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். நினைவாற்றலையும் பாதிக்கும். அதனால் மனஅழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் மனதை ரிலாக்ஸாக வைத்திருங்கள்.

    தனிமை:

    மற்றவர்களுடன் தொடர்பில் இல்லாமல் தனிமை வாழ்க்கை வாழ்வதும் மூளை ஆரோக்கியத்திற்கு பாதிப்பை உண்டாக்கும். மனச்சோர்வை அதிகரிக்கச்செய்து நினைவாற்றல் திறனை குறைத்துவிடும். மூளை ஆரோக்கியமாக செயல்படுவதற்கு தேவையான தூண்டுதலையும் இழக்க நேரிடும். அதனால் தனிமை வாழ்க்கை முறையை தவிர்த்திடுங்கள்.

    சோம்பேறி வாழ்க்கை முறை:

    நீண்ட காலமாக உடற்பயிற்சியிலோ அல்லது வேறு எந்த உடல் செயல்பாடுகளிலோ ஈடுபடாமல் இருந்தால் டிமென்ஷியா, அல்சைமர் போன்ற நினைவாற்றல் சார்ந்த பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். ஏனெனில் உடல் செயல் இழந்தால், மூளையையும் பலவீனமாக்கிவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் சிறு சிறு உடற்பயிற்சிகளையாவது மேற்கொள்ளுங்கள்.

    • சமீபகாலமாகவே, நாம் பாரம்பரிய உணவு முறைக்கு மாறிக்கொண்டிருக்கிறோம்.
    • நம்மால் பாரம்பரிய சமையல் பாத்திரங்களுக்கு மாற முடியவில்லை.

    நம்முடைய வாழ்க்கை முறை ரொம்பவே மாறிவிட்டது. பரபரப்பான வாழ்க்கை முறைக்குள் சிக்கிக்கொண்டிருப்பதால், எல்லாமே `ரெடிமேட்' ஆகிவிட்டது. சமீபகாலமாகவே, நாம் பாரம்பரிய உணவு முறைக்கு மாறிக்கொண்டிருக்கிறோம்.

    அப்படி இருந்தும், நம்மால் பாரம்பரிய சமையல் பாத்திரங்களுக்கு மாற முடியவில்லை. நாம் பயன்படுத்தும் நிறைய பாத்திரங்கள், நவீன கிச்சன்களுக்கு ஏற்ப கெமிக்கல் கோட்டிங் நிறைந்தவையாகவே இருக்கிறது. நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய கல் சட்டிகள், இரும்பு பாத்திரங்களும் ஒருசிலரின் கிச்சன்களை மட்டுமே அலங்கரிக்கின்றன.

    பாரம்பரிய சமையல் பாத்திரங்கள்?

    குழி பணியார சட்டி பார்த்திருக்கிறீர்களா..? நன்கு கனமாக காட்சியளிக்கும். முழுமையாக, இரும்பிலேயே தயாராகி இருக்கும். அதேபோல, நல்ல தடிமனான இரும்பு தோசைக்கல் பார்த்திருப்பீர்கள். அதேபோல, கருப்பு நிறத்தில், தடித்திருக்கும் ஆப்பச் சட்டியை பார்த்திருப்போம். இப்படி, தூய்மையான இரும்பில், எந்தவித கெமிக்கல் கோட்டிங்கும் இல்லாமல் தயாராகும் இரும்பு சட்டியில்தான், நம்முடைய முன்னோர்கள் சமைத்து சாப்பிட்டனர். 90 முதல் 100 வயது வரை ஆரோக்கியமாக உயிர் வாழ்ந்தனர்.

    ஆனால், இத்தகைய பாரம்பரிய சமையல் பாத்திரங்களின் பயன்பாடு, இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. இந்த இரும்பு சட்டிகளை பயன்படுத்துவதும், பராமரிப்பதும் கடினம் என தப்புக்கணக்கு போட்டு, வாங்குவதை நிறுத்திவிட்டனர்.

    உண்மையில், இரும்பு-கல் பாத்திரங்களை பயன்படுத்துவது சிரமமா?

    இல்லவே இல்லை. தற்போது வரும் இரும்பு பாத்திரங்கள், பழக்கப்படுத்தியே (Pre-seasoned) வருகின்றன. அதை வாங்கி, ஒருமுறை வெங்காயம் வதக்கி பயன்படுத்த ஆரம்பிக்கலாம். பயன்படுத்தி முடித்தவுடன், தண்ணீர் இல்லாமல் எண்ணெய் பூசி விட்டால், இரும்பு-கல் பாத்திரங்கள் வெகுவருடங்களுக்கு நீடிக்கும்.

    புதிய இரும்பு பாத்திரங்களை பழக்கப்படுத்த சிலர் தயக்கம் காட்டுவதால், இப்போது பாத்திர தயாரிப்பு நிறுவனங்களே, அந்த வேலைகளை (பிரீ-சீசனிங்) செய்து கொடுத்துவிடுகின்றன. உண்மையில், இது சுலபமான மற்றும் ஆரோக்கியமான முறை.

    நவீன பாத்திரங்களுக்கும், பாரம்பரிய இரும்பு பாத்திரங்களுக்கும் என்ன வித்தியாசம்?

    பான், கடாய்... இப்படி நவீனமாக தயாராகும் எல்லா பாத்திரங்களிலும், கெமிக்கல் கோட்டிங் கொடுக்கிறார்கள். உணவு அடிபிடிக்காமல் சமைக்கலாம் (நான்-ஸ்டிக் கடாய்), கல்லில் தோசை ஒட்டாமல் எடுக்க முடியும் (நான்-ஸ்டிக் பான்)... என சமையல் பணிகளை சுலபமாக்குவதாக எண்ணி, கெமிக்கல் கோட்டிங் நிறைந்த பாத்திரங்களையே நாம் பயன்படுத்துகிறோம். பி.ஏ.எஸ்., பி.ஓ.எஸ்., டெப்லான்... என நீளும் கெமிக்கல் கோட்டிங், நம் உணவுடன் கலக்கும்பட்சத்தில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல நோய்களை உண்டாக்க கூடும் என கண்டறிந்திருக்கிறார்கள்.

    ஆனால், நம் தாத்தா-பாட்டி பயன்படுத்திய இரும்பு பாத்திரங்கள், உணவோடு சேர்த்து இரும்புச் சத்தையும் கொடுக்கின்றன. இரும்புச்சத்து, அன்றாட உணவுடன் நம் உடலில் சேரும்போது அனிமியா, ஹீமோகுளோபின், இரும்புச்சத்து குறைபாடுகள் நீங்கி, ஆரோக்கியம் அதிகரிக்கும். அதுதான், தமிழர் பாரம்பரிய சமையல் பாத்திரங்களின் மகிமை.

    • உடைந்த கடிகாரங்களை வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல.
    • உடைந்த பாத்திரங்களை பயன்படுத்துவதும் கூடாது.

    பண்டிகை காலங்களில் வீட்டை சுத்தம் செய்து அலங்கரித்து அழகுபடுத்துவதற்கு பலரும் ஆர்வம் காட்டுவார்கள். இந்த சமயத்தில் வீட்டில் இருந்து ஒரு சில பொருட்களை அகற்ற வேண்டியது அவசியமானது. அத்தகைய எதிர்மறை பொருட்கள் வீட்டிற்குள் லட்சுமி தேவியின் வருகையைத் தடுக்கலாம். நிதி சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது. அப்படி அகற்ற வேண்டிய பொருட்களின் பட்டியல் இது.

    செயல் இழந்த கடிகாரம்:

    வாஸ்து சாஸ்திரத்தின் படி, செயலிழந்த அல்லது உடைந்த கடிகாரங்களை வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல. ஏனென்றால், கடிகாரங்கள் மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் சின்னங்களாக கருதப்படுகின்றன. அதனால் வீட்டில் ஓடாத, சேதமடைந்த கடிகாரங்கள் இருந்தால் அவற்றை அகற்றுவது நல்லது.

    காலணிகள்:

    பயன்பாட்டில் இல்லாத, சேதமடைந்த, தேய்ந்து போன காலணிகளை வீட்டில் வைக்கக் கூடாது. அவை எதிர்மறை ஆற்றல் மற்றும் துரதிருஷ்டத்தை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.

    உடைந்த கண்ணாடி:

    வாஸ்து சாஸ்திரத்தின்படி உடைந்த கண்ணாடி அல்லது கண்ணாடிப் பொருட்களை வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல. இவை வீட்டின் ஆற்றலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. அதேபோல் ஜன்னல்கள், கதவுகளில் கண்ணாடிகள் உடைந்திருந்தால் அதனை சரி செய்துவிட வேண்டும். கண்ணாடி பாத்திரங்கள் ஏதேனும் உடைந்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்திவிட வேண்டும்.

    உடைந்த பாத்திரங்கள்:

    உடைந்த பாத்திரங்களை பயன்படுத்துவதும் கூடாது. இத்தகைய பொருட்கள் குடும்பத்தில் வறுமை மற்றும் கஷ்டத்திற்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. அவற்றை சீரமைத்து பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் அப்புறப்படுத்திவிடுவதே சிறந்தது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, இதுபோன்ற பொருட்களை வைத்திருப்பது வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரிக்கும்.

    • பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வீம்பு முக்கிய காரணமாக இருக்கும்.
    • ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க மனமில்லாமல் கடுமையாக பேசுவார்கள்.

    தம்பதியரிடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வீம்பு முக்கிய காரணமாக இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க மனமில்லாமல் கடுமையாக பேசுவார்கள். சில சமயங்களில் வாக்குவாதம் முடிந்த பிறகு பேசாமலே இருப்பதற்கு முயற்சிப்பார்கள். ஆனால் மனமோ பேச வேண்டும் என்று துடிக்கும். அதற்கு வடிகாலாக குழந்தைகளை பயன்படுத்திக் கொள்வார்கள்.

    ஒருவருக்கொருவர் பேச வேண்டிய விஷயங்களை குழந்தைகள் முன்னிலையில் கொட்டித்தீர்ப்பார்கள். அந்த சமயத்தில் குழந்தைகள் தூதுவராக மாறவேண்டி இருக்கும். நடுவராக இருந்து நடுநிலை வகிக்க வேண்டி இருக்கும். ஆனால் தங்கள் பெற்றோர் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் சில குழந்தைகள் தவித்துப்போவார்கள்.

    இதற்கு காரணமாக இருக்கும் வீம்பு தேவையற்ற பிரச்சினைகளை கிளறிவிடும். யாருக்கு பதில் சொல்வது என்று தெரியாமல் குழந்தைகள் தடுமாறிப்போவார்கள். அவர்களின் நிம்மதியும் சீர்குலைந்துவிடும். ஒருசிலர் வீம்பின் காரணமாக பிரிந்தும் விடுவார்கள்.

    அது குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும். சில சமயங்களில் சகோதர-சகோதரிகளுக்கு இடையே தோன்றும் பிரச்சினைகளுக்கு வீம்பு காரணமாகிவிடும். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமலேயே நீண்ட காலம் இருக்க வைத்துவிடும்.

    யார் முதலில் பேசுவது என்ற ஈகோவே வீம்புக்கு பக்கபலமாக அமைந்து விடும். அத்தகைய வீம்பை விட்டுவிட்டு யாராவது ஒருவர் முதலில் பேசிப் பாருங்கள். மற்றொருவர் நிச்சயம் எதிர்பார்த்ததை விட நன்றாக பேசத் தொடங்கி விடுவார். அவரும் இந்த சந்தர்ப்பத்திற்காகத்தான் காத்திருந்திருப்பார். இதுநாள் வரை மனதில் புதைத்து வைத்திருந்த பாசத்தை கொட்டி திக்குமுக்காட செய்துவிடுவார்.

    • பெண்கள் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    • அதிகம் உறிஞ்சக்கூடிய தன்மை பீரியட் டைம் பேண்டீகளில் இருக்கிறது.

    ஸ்கூல், காலேஜ் போகும் குழந்தைகளுக்கும், அலுவலகம் செல்லும் பெண்களுக்கும் என எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் பீரியட் ஹேக்ஸ் பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். பீரியர் நாட்களை நினைத்தாலே மிகவும் கஷ்டமாக இருக்கும் என நினைப்பவர்களுக்கு இந்த ஹேக்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஹேக்ஸ்களை நீங்கள் எடுத்துக்கொண்டால் நீங்கள் அந்த நாட்களை எளிதாக கடந்துவிடலாம்.

    பள்ளி மற்றும் காலேஜ் செல்லும் பெண்கள், அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் பெண்கள் என அனைவரும் ஒரு பீரியட் கிட்டை எப்போதும் கையில் வைத்துக்கொள்வது நல்லது. இந்த பீரியர் கிட்டை ஸ்லிங் பேக் எடுத்துச்செல்வது நல்லது. ஏனெனில் ஸ்லிங் பேக்காக இருந்தால் பொது இடங்களில் ரெஸ்ட் ரூம் செல்லும்போது தோள்பட்டைகளில் மாட்டுக்கொள்வதற்கு எளிதாக இருக்கும்.

    பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பெண்களுக்கும் இந்த பீரியட் கிட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பீரியட் கிட்டில் 2 சானிட்டரி நாப்கின், 2 பேண்டி லைனர், நியூஸ் பேப்பர், ஒரு எக்ஸ்ட்ரா பேண்டி, அதை உருளை வரிவில் உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதுகூடவே ஒரு வாஸ்லின் மற்றும் சேஃப்டி பின், மாஸ்கிங் டேப், கடைசியாக ஒரு பிளாஸ்டிக் கவர் அவ்வளவுதான் பீரியட் கிட் ரெடி. இதனை நாம் எடுத்துபோகும் எந்த பேக்குகளிலும்  வைத்துக்கொள்ளலாம்.

    பீரியட் கிட்டில் உள்ள மாஸ்கிங் டேப் எதற்கு பயன்படுகிறது என்றால் பீரியட் நேரத்தில் பேண்டிகளில் நாப்கின்களை ஒட்டும்போது அதில் உள்ள விங்ஸ் விலகி வரும். மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடும்போதோ அல்லது பயணம் செய்யும் போதோ, தூங்கும்போதோ இந்த மாஸ்கிங் டேப் கொண்டு நாப்கின் விங்ஸ்களை பேண்டியில் ஒட்டிவிட்டால் விங்ஸ்கள் விலகாமல் இருக்கும்.

    சரி பீரியட் கிட்டில் சேஃப்டி பின் எதற்கு என்றால் பள்ளி செல்லும் பெண்குழந்தைகள் ஒயிட் கலர் யூனிபார்ம் அணிந்து செல்வர். பீரியட் நேரத்தில் லீக்கேஜ் ஆகிவிட்டால் அவர்களுக்கு பதட்டம் ஏற்படும். நிலைமையை எப்படி கையாள்வது என்று தெரியாது. எனவே சேஃப்டி பின்னை லீக்கேஜ் இருக்கும் ஸ்கட்டை மடித்து சேஃப்டி பின் மாட்டிக்கொள்ளலாம்.

    பீரியட் நேரத்தில் உடலுக்கு ஓய்வு மிகவும் அவசியம். ஆனால் ஓவர் லீக்கேஜ் என்ற பயத்தினால் நிறைய பேர் தூங்காமல் விழித்து இருக்க நேரிடும். எனவே அவர்கள் பீரியட் டைம் பேண்டீஸ் பயன்படுத்தலாம். இப்போது தரமான பீரியட் டைம் பேண்டீஸ் கிடைக்கிறது. 5 நாப்கின்களில் உறிஞ்சக்கூடிய தன்மை இந்த பீரியட் டைம் பேண்டீகளில் இருக்கிறது. இதனை ஓவர் லீக்கேஜ் நாட்களிலும், பயணத்தின்போதும் பயன்படுத்தலாம்.

    அதேபோல் பீரியட் நேரத்தில் நிறைய பெண்களுக்கு அதிக வயிற்றுவலி இருக்கும். எனவே அவர்கள் மாத்திரைகளை எடுத்துக்கொள்வர். அதனால் கிட்னி பாதிக்கப்படும். அவ்வாறு செய்யாமல் வயிறு வலிக்கும் நேரங்களி அவர்கள் ஹீட் பேக் தற்பொது சந்தைகளில் கிடைக்கிறது. அவர்கள் இந்த ஹீட் பேக் கொண்டு முதுகுத்தண்டுவடம் மற்றும் அடிவயிறு பகுதிகளில் ஒத்தடம் கொடுக்கலாம். அல்லது சூடான நீரில் குளிக்கலாம்.

    அவ்வாறு குளிக்கும்போது தசைகள் தளர்வடைந்து வயிறு வலி குறையும். பீரியட் நேரங்களில் இரவே வெந்தயத்தை ஊறவைத்து அந்த நீருடன் சேர்த்து வெந்தயத்தையும் சேர்த்து சாப்பிட வேண்டும். ஊறவைத்து சாப்பிட்டால் கசப்பு தெரியாது.

    பீரியட் வருவதற்கு 3 நாட்களுக்கு முன்பு இருந்தே ஒயிட் டிஸ்சார்ஜ் அதிகமாக இருக்கும். பீரியட் வந்துவிட்டதா? என்று அடிக்கடி சென்று பார்ப்பதுபோல் இருக்கும். அப்போது பேண்டி லைனர்ஸ் பயன்படுத்தலாம். இது நாப்கின்போலவே சிறிய அளவில் இருக்கும். எனவே இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    முடிந்தவரை பீரியட் நேரங்களில் அலுவலகங்களுக்கு லீவ் போடுவதை தவிர்ப்பது நல்லது. வீட்டில் இருந்தால் பீரியட் பற்றிய நினைவுகளும், சோர்வும் அதிகமாக இருக்கும். நீங்கள் வேலைக்கு செல்லும் போது கவனம் திசைதிரும்புவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    பீரியட் நேரங்களில் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும், கூல்டிரிங்ஸ் குடிக்க வேண்டும், சாக்லேட் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் அதனை முழுமையாக தவிர்த்துவிடுவது நல்லது. ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ் சாப்பிடுவதால் வயிற்றுவலி அதிகமாகும். பீரியட் நேரங்களில் நிறைய தண்ணீர் பருக வேண்டும். நம் உடலை ஹைடேட்டடாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

    பீரியட் வருவதற்கு 3 நாட்களுக்கு முன்னால் இருந்தே (பி.எம்.எஸ்.) ஃப்ரீ மென்சுரல் சிண்ட்ரோம் ஆரம்பித்துவிடும். இந்த நேரங்களில் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் மனதிலும் உடல் அளவிலும் பல மாற்றங்கள் இருக்கும். அதாவது அதிகமாக கோபப்படுவது, எரிச்சல் அடைவது, சோகமாக இருப்பது போன்று காணப்படுவர். இந்த நேரங்களை மனதை மென்மையாக வைத்துக்கொள்சது மிகவும் அவசியம்.

    பீரியட் நேரங்களி பெண்கள் அவர்கள் பயன்படுத்தும் நாப்கின்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். நியூஸ் பேப்பர்களை பயன்படுத்தி நன்றாக மூடி டிஸ்போஸ் செய்ய வேண்டும். வீடுகளில் பயன்படுத்திய நாப்கின்களை குப்பை கவரில் போடாமல் தனியாக ஒரு பிளாஸ்டிக் கவரில் சேர்த்து போட வேண்டும். அவ்வாறு செய்தால் குப்பை எடுப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குப்பை எடுப்பவர்களும் மனிதர்கள் தான். எனவே அவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    • இல்லத்தரசிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
    • இதுவரை யாரும் அறியாத ரொம்பவே பயனுள்ள குறிப்பு.

    பெண்களுள் வீடு மற்றும் சமையலறை தான் அதிகம் செலவிடும் நேரமாக இருக்கிறது. இன்று இருக்கும் அவசர உலகில் பெண்களும் வேலை பார்த்து சம்பாதித்துக் கொண்டே தான் வீட்டையும் கவனித்து கொள்கிறார்கள். இந்த எளிய குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால் இல்லத்தரசிகளுக்கு மிக உபயோகமாக இருக்கும். அந்த வகையில் இதுவரை யாரும் அறியாத ரொம்பவே பயனுள்ள குறிப்புகளை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

    * புடவை கட்டும் போது சேஃப்டி பின் பயன்படுத்துவோம். அவ்வாறு பயன்படுத்தும்போது பின் புடவையில் மாட்டிக்கொண்டு புடவையை கிழித்துவிடும். இதனால் விலை உயர்ந்த புடவைகள் கூட கிழிந்துவிட அதிக வாய்ப்புகள் இருக்கும். எனவே அதற்கு மாற்றாக சேஃப்டி பின்னில் ஒரு உருண்டை பாசியை போட்டு வைத்துக்கொண்டால் புடவை அல்லது ஆடைகளில் பின்களை மாட்டும் போது ஆடைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே பின்களில் ஒரு உருண்டை பாசியை எப்போதும் க்ளூ கொண்டு ஒட்டி வைத்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    * பட்டுப்புடவை அல்லது விலை உயர்ந்த டிஷைனர் புடவைகள் போன்றவற்றை நாம் எப்போதாவது மட்டுமே அணிவது வழக்கம். அதாவது கல்யாணம், கோவில், ஏதாவது பாட்ர்ட்டி போன்ற இடங்களுக்கு செல்லும்போது மட்டுமே அணிந்து செல்வோம். இந்த புடவைகளை நாம் எப்போதாவது தான் சுத்தம் செய்வோம். இதனால் புடவைகளில் உள்ள ஜாக்கெட்களில் வியர்வை நாற்றம் இருக்கும் எனவே அதனை போக்குவதற்காக நாம் வெளியே செல்லும் போது ஜாக்கெட்டுகளில் ஸ்வெட் பேட்ஸ் கடைகளில் கிடைக்கிறது. எனவே அதனை வாங்கி பயன்படுத்தி வந்தால் ஜாக்கெட்டில் வியர்வை படாமல் பாதுகாக்க முடியும்.

    * சில சமயம் நாம் சுடிதார் அணியும் போது பேண்ட்டில் உள்ள நாடா உள்ளே சென்று நம்ம எரிச்சல் அடையச்செய்யும். அப்போது எளிதாக பேண்ட் நாடாவை வெளியே எடுக்க ஒரு கத்தரிக்கோல் கொண்டு எடுத்துவிடலாம். பேண்ட்டில் உள்ளே இருக்கும் நாடாவை அதன் வழியாக சிறிய கத்தரிக்கோல் முனையைக்கொண்டு வெளியே எடுத்துவிட முடியும்.

    * இப்போது நிறைய பெண்கள் லெகிங்ஸ் தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். எனவே அதனை வாங்கும்போது உங்களது அளவை விட சற்று பெரியதாக தேர்வு செய்ய வேண்டும். அதாவது எம் என்றால் எல் எடுக்க வேண்டும். எல் என்றால் எக்ஸ்.எல் எடுக்க வேண்டும். அப்போது நிறைய நாட்கள் பயன்படுத்த முடியும். மற்றும் லெகிங்ஸ் வாங்கும் போது முடிந்த வரை நாடாவுடன் கூடிய லெகிங் வாங்கிவது நல்லது.

    * அலுவலகம் செல்லும் பெண்கள் தற்போது ரெடிமேட் டாப்களை தான் அதிகம் தேர்வு செய்து வாங்குகின்றனர். அவ்வாறு வாங்கும்போது நிறைய டாப்களில் நெக் அளவு பெரியதாகவும், இறங்கியும் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே நாம் அதனை அதிகம் பயன்படுத்தாமல் இருப்போம். இதனை தவிர்க்க இப்போது சந்தையில் கேமி ஸ்லிப் என்று ரெடிமேட் ஸ்லிப் கிடைக்கிறது. இது கைக்குட்டையை விட சிறிய அளவில் இருக்கும். இது மிகவும் பாதுகாப்பானது. இரண்டு பக்கமும் லேஸ் வைக்கப்பட்டிருக்கும். இதனை நாம் பயன்படுத்தும் பிராவின் ஸ்டாப் பகுதியில் மாட்டிவிட்டு பயன்படுத்த வேண்டும். இப்போது நெக் இறங்கி இருக்கும் சுடிதாரை அணிவதற்கு எளிதாக இருக்கும். இந்த கேமி ஸ்லிப்கள் ஒயிட், பிளாக், ஸ்கின் கலர் ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

    * சில சமயம் நாம் வாங்கக்கூடிய பிராக்களில் கப் சைஸ் சரியாகவும், ஸ்டாப் சைஸ் அதாவது சுற்றளவு சிறியதாக இருக்கும். இதனால் நாம் பயன்படுத்தும்போது இறுக்கமாக இருக்கும். கொஞ்சம் உடல் எடை அதிகரித்தாலும் இறுக்கமாக இருக்கும். இதனை தடுக்க இப்போது கடைகளில் பிரா எக்ஸ்டண்டர் கிடைக்கிறது. இந்த எக்ஸ்டண்டரை பிரா கொக்கிகளில் மாட்டிக்கொண்டு பயன்படுத்தலாம். இந்த பிரா எக்ஸ்டாண்டர் ஒயிட், பிளாக், ஸ்கின் கலரில் கிடைக்கிறது. இது எல்லா பெண்களிடமும் இருக்க வேண்டிய ஒன்று.

    * அடுத்து நிறைய பெண்களுக்கு பிராக்களை பயன்படுத்தும் போது தோள்பட்டையில் வலி மற்றும் வீக்கம், காயம் ஏற்படுவதுண்டு இதனை தடுப்பதற்காக இப்போது சந்தைகளில் சிலிக்கான் ஸ்டாப் குஷன் என்று புதிதாக வந்துள்ளது. இதனை நாம் பயன்படுத்தும் பிராவின் பட்டைகளில் எளிதாக மாட்டிக் கொள்ளலாம். இவ்வாறு பயன்படுத்தும் போது தோள்பட்டையில் ஏற்படும் வலி மற்றும் காயங்களில் இருந்து விடை கிடைக்கும்.

    * நாம் கடைகளில் வாங்கு சுடிதாரில் பட்டன் வைத்திருக்கும் இந்த பட்டன்கள் நாளடைவில் உதிர்ந்துவிட வாய்ப்புண்டு. எனவே இதனை தடுக்க சுடிதாரில் உள்ள பட்டன்கள் மற்றும் கற்கள் பதித்த உடைகளாக இருந்தால் அதில் கிளியர் நெயில்பாலிஷ் எடுத்து அதன் மேல் தடவி வைத்தால் கற்கள், பட்டன்கள் உதிர்ந்து விழாமல் இருக்கும். இந்த டிரிக்கை நீங்கள் பயன்படுத்தும் கற்கள் பதித்த பொட்டு மற்றும் கற்கள் பதித்த கிளிப்களிலும் இந்த கிளியர் நெயில் பாலிஷை பயன்படுத்தலாம்.

    * சிலசமயம் நாம் ஆசைப்பட்டு சுடிதார் வாங்கி இருப்போம் ஆனால் அதை போட்டு பார்க்கும்போதுதான் அது டிரான்ஸ்பரண்டாக (கண்ணாடி மாதிரி) இருக்கும். இதனை தடுப்பதற்காக லைனிங் குர்தி என்று இப்போது கடைகளில் விற்கப்படுகிறது. இந்த லைனிங் குர்தியும் பல்வேறு கலரில் கிடைக்கிறது. இதனை வாங்கி பயன்படுத்தும்போது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

     

    • ஸ்லிப் ஆன் பிராக்களை தேர்வு செய்யுங்கள்.
    • ஆடைக்கேற்ப தேர்வு செய்வது நல்லது.

    பொதுவாக வெளிப்புறத் தோற்றத்தில் செலுத்தும் கவனத்தைப் பலரும், உள்ளாடைகள் வாங்குவதில் செலுத்துவதில்லை. உள்ளாடை எந்த அளவுக்கு தரமானதாகவும், கச்சிதமான அளவிலும் இருக்கிறதோ, அதைப் பொருத்துதான் நம் மேலாடையின் அழகும் வெளிப்படும். கடைகளுக்கு சென்று நமக்குப் பொருத்தமான உள்ளாடையைக் கேட்டு வாங்குவதில் எந்தத் தயக்கமும் காட்டத்தேவையில்லை.

    ஆடைக்கேற்ப தேர்வு செய்வது நல்லது

    பிரா அணியும்போது எந்த ஆடையை அணியப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். புடவை, சுடிதார், வெஸ்டர்ன் ஆடைகள், டி-ஷர்ட் என ஆடை தேர்வுக்கு ஏற்ப பிரவையும் செலெக்ட் செய்யவது நல்லது. நிறைய பெண்களுக்கு பிராக்கள் அணியும் போது அதன் ஸ்டாப் அழுத்துவதினால் தோள்பட்டைகளில் சிவப்பு தழும்புகள் அல்லது கடுமையான வலி மற்றும் காயங்கள் ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

    அதைவிடுத்து நீங்கள் எளிதாக அல்லது மென்மையான பிராக்களை அணிய விரும்பினால் நீங்கள் ஸ்லிப் ஆன் பிராக்களை தேர்வு செய்யலாம். இந்த ஸ்லிப் ஆன் பிராக்களில் தோலினை அழுத்தக்கூடிய எந்த ஒரு ஸ்டாப்களும் கிடையாது. அதற்கு மாற்றாக துணியினால் ஆன பட்டைகள் தான் இருக்கும். இருந்தாலும் இது பிராக்கள் மாதிரி அணிவதற்கும் மிகவும் எளிது.

    ஒருவேளை நீங்கள் டீசர்ட் அல்லது குர்தி போன்ற இறுக்கமான ஆடைகளை அணிகிறீர்கள் என்றால் இந்த ஸ்லிப் ஆன் பிராக்களில் உள்ளே கப் வைத்து புதிய டிசைனிலும் ஸ்லிப் ஆன் பிராக்கள் கிடைக்கிறது.

    ஸ்லிப் ஆன் பிராக்கள் வாங்கும் போது கவனிக்கவேண்டியது வட்டவடிவமான கழுத்துகொண்ட பிராக்களை வாங்க வேண்டும். அதுதான் எல்லாவிதமான ஆடைகளுக்கும் பொருத்தமானதாக இருக்கும். இதே ஸ்லிப் ஆன் பிராக்களில் ஸ்போட்ஸ் பிராக்களும் மற்றும் மாடர்ன் ஆடைகளுக்கு அணிந்துகொள்வதற்கு எளிதாக புதுமாதிரியான ஸ்லிப் ஆன் பிராக்களும் தற்போது சந்தைகளில் கிடைக்கிறது.

    ×