
திடீரென்று இன்று இரவு ஏதாவது பார்ட்டிக்கு செல்ல வேண்டும். மறுநாள் காலை விசேஷங்களுக்கு செல்லவேண்டும் பியூட்டி பார்லர் செல்வதற்கு நேரம் இல்லை என்றால் இந்த டிப்ஸ் உங்களுக்கு மிகமிக உபயோகமானதாக இருக்கும். நிறைய நேரம் வெயிலில் இருந்துவிட்டு முகம் கருமையாக மாறி இருந்தால் அந்த கருநிறம் உடனே மாறும். உங்களுடைய கை பகுதி, கழுத்துப் பகுதி முதுகில் கழுத்து பக்கம் வெயில் படும் இடம் இருக்கும் அல்லவா? அந்த இடம் இப்படியாக வெயில் பட்டு கருமையான இடங்களில் இதை ஒருமுறை போட்டாலும் உடனடியாக சன் டோன் நீங்கிவிடும். வெயில் காலத்திற்கு இந்த குறிப்பு உங்களுக்கு அடிக்கடி தேவைப்படும்.
இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் போடுவதற்கு முன்பு முகத்தில் இருக்கும் மேக்கப்பை மட்டும் சுத்தமாக நீக்கிவிடுங்கள். முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி துடைத்து விட்டு அதன் பின்பு இந்த ஃபேரன் லவ்லி ஃபேஸ் பேக்கை அப்ளை செய்து பாருங்கள். எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. எல்லா வகையான சருமத்திற்கும் இது ஏதுவாக அமையும்.