search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அழகு மட்டுமல்ல ஆரோக்கியமும் தரும் மெனிக்யூர்
    X
    அழகு மட்டுமல்ல ஆரோக்கியமும் தரும் மெனிக்யூர்

    அழகு மட்டுமல்ல ஆரோக்கியமும் தரும் மெனிக்யூர்

    மெனிக்யூர் என்பது கை, விரல், நகம் ஒப்பனைக் கலையாகும். முகத்திற்கு அடுத்தபடியாக மற்றவர்களை கவரும் பாகம் என்னவென்றால் அது கைகள் தான். ஏனெனில் முகத்திற்கு அடுத்தபடியாக மற்றவர்களின் பார்வைக்கு வெளிப்புறம் சட்டென தெரிவது கைகளும், விரல் நகங்களாகும்.
    மெனிக்யூர் (manicure) என்பது அழகுபடுத்துவது மட்டுமல்ல, நமது கைகளையும், கைவிரல்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக விரல்களில் இருக்கும் நகங்களைச் சுத்தப்படுத்தி நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்களை நீக்கி, விரல்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் ஒரு சிறந்த சிகிச்சையாகும்.

    இதனை அழகு நிலையங்களுக்கு சென்று அதிக பணம் செலவழித்து தான் செய்யவேண்டும் என்பது அல்ல, வீட்டில் இருந்தபடியே எளிதாக நாம் செய்யாலாம். எப்படி செய்வது என்பது குறித்து இங்கு விரிவாக காண்போம்.

    முதலில் கைவிரல் நகங்களில் நெயில் பாலிஷ் இருந்தால் அதை நல்ல தரமான நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு நீக்கிவிடுங்கள்.

    தங்களுடைய விருப்பத்துக்கு ஏற்ப நகங்களை சேவ் செய்து வடிவமைத்து கொள்ளவும். நீளமான நகங்களை நீங்கள் வைக்க நினைத்தால் அது எளிதில் உடைய வாய்ப்புள்ளதால் மீடியமான வடிவத்தில் நகத்தை வெட்டிக் கொள்ளுங்கள்.

    பின்னர் கைவிரல் நகங்களில் உள்ள க்யூட்டிக்கல்ஸில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதினால் கைவிரல் நகங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

    ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்ளவும், அவற்றில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு ஸ்பூன் ஷாம்பு மற்றும் ஒரு கைப்பிடியளவு ரோஜா இதழ்கள் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

    இந்த கலவையில் உங்கள் இரண்டு கைகளையும் நனைத்து 10 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். ஊறிய பிறகு கைவிரல் நகங்களை ஒரு டூத் பிரஷை கொண்டு சிறிது நேரம் தேய்த்து சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்வதினால் கைவிரல் நகங்களில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்கள் நீங்கி விடும்.

    ஒரு சுத்தமான கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் காபி தூள், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால் மற்றும் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    இந்த கலவையை உங்கள் இரண்டு கைகளிலும் நன்றாக தடவி ஸ்க்ரப் செய்து கைகளை சுத்தமாக கழுவி விடவும்.  

    ஒரு கையளவு பன்னீர் ரோஜா இதழ்கள், சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேஸ்டை கைகள் முழுவதும் நன்றாக அப்ளை செய்து குறைந்தது 10 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்து மசாஜ் செய்து கைகளை கழுவி விடவும்.

    பின்னர் உங்கள் மாய்ஸ்சரைசர் க்ரீமை (manicure) அப்ளே செய்து உலர விடவும். இது உங்கள் கைகளுக்கு போதுமான ஈரப்பதத்தை வழங்கும்.  

    இதனை தொடர்ந்து உங்கள் நகங்களில் கண்ணாடி மாதிரி இருக்கும் நெயில் பேஸ் கோட்டிங்கை அப்ளை செய்ய வேண்டும். அப்பொழுது தான் நெயில் பாலிஷ் நீண்ட நேரம் நிலைத்திருக்கும். இந்த கோட்டிங் உலர்ந்தவுடன் உங்களுக்கு விருப்பமான நெயில் பாலிஷை போட்டு கொள்ளலாம்.

    தற்போது பல்வேறு வகையிலான நெயில் கலரிங், நெயில் ஆர்ட் பொருட்கள் கிடைக்கின்றன. அடர்ந்த நிறங்கள், கண்ணாடி மாதிரியான நிறங்கள் போன்றவற்றில் உங்கள் விருப்பமான நிறத்தை தேர்ந்தெடுத்து கலரிங் செய்து கொள்ளுங்கள். அழகான நகப் பராமரிப்பு முறை கிடைத்து விடும்.  

    வாரம் ஒரு முறை மேற்கூறியவாறு வீட்டில் இருந்தபடியே மெனிக்யூர் (manicure) செய்து வந்தால் அழகான நக அழகை நீங்களும் பெறலாம்.
    Next Story
    ×