search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்
    X
    முகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்

    முகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்

    முகத்தில் எண்ணெய் வழிவதை குறைத்து, நாள் முழுக்க பளபளப்பாக தோன்ற இந்த விசயங்களைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    எத்தகைய சருமமாக இருந்தாலும் சரி, அதை காலை முதல் மாலை வரை, புத்துணர்ச்சியுடன், பளிச்சென பராமரிக்கும் ஆர்வம் உங்களுக்கு இருந்தால் போதும். உங்கள் முகத்தை அழகாக மாற்றுவது எளிது. எண்ணெய் வழியும் பிரச்சனையை தவிர்க்க, இதோ உங்களுக்கு சில அழகு குறிப்புகள். இவை உங்களுக்கு நிச்சயமாக நல்ல பயன் தரும்:

    உங்களது முகத்தில் ரொம்ப எண்ணெய் வழிந்தால், மை ஒற்றும் காகிதம் பயன்படுத்தி, அதை ஒற்றி எடுத்துவிடுங்கள். இந்த மை ஒற்றும் காகிதம் எப்போதும் கையில் வைத்திருப்பது நல்லது. அனைத்து அழகுப் பொருட்கள் விற்கும் கடைகளிலும் இது கிடைக்கும்.

    முகத்தை நன்கு சுத்தம் செய்ய மறந்துவிடாதீர்கள். உங்கள் முகத்தில் எண்ணெய் வழிவதால், எந்நேரமும் அதனை பேப்பர் வைத்து துடைத்துக் கொண்டே இருக்கனும் என்பது அவசியமில்லை. அதற்குப் பதிலாக, முகத்தை சுத்தம் செய்ய உதவும் பொருட்கள் நிறைய மார்க்கெட்டில் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். முகத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்வதால், முகத்தின் இறுக்கம் மறைந்து, தளர்வு ஏற்படும். இதுதவிர, முகத்தில் உள்ள எண்ணெய்பசை, அழுக்குகள் அகன்றுவிடும். இந்த வைத்திய முறையை மிக மெதுவாகச் செய்ய வேண்டும். கடுமையாகச் செய்தால், ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    முகத்தில் எண்ணெய் வழிவதை கட்டுப்படுத்த, இலகுவான, எண்ணெய் பசையற்ற மாஸ்ச்சுரைஸரை தடவுங்கள். இதை மறந்துவிடவேண்டாம்.

    பிரைமர் தடவுவதால், முகத்தின் எண்ணெய்பசை உடனடியாக உறிஞ்சப்படுகிறது. உங்களுக்கு மென்மையான, வெல்வெட் போன்ற முகம் கிடைக்க, இது உதவும். லேக்மி ஆலி டே கிரீம், அக்வா ஜெல்லை பிரைமராக பயன்படுத்தி, கன்ன கதுப்புகள், நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் தடவுங்கள். இது நாள் முழுக்க முகம் பளபளப்புடன் இருக்க உதவும். இதுதவிர, முகத்தில் உள்ள ஓட்டைகள், பள்ளங்கள், தழும்புகள் போன்றவற்றை, இது மறைத்து, மேக்அப்பை எடுத்துக் காட்ட உதவும்.

    படுக்கை நேரத்திலும், மேக்அப் விசயத்தில் சற்று கவனம் செலுத்துவது நலம் என்றே சொல்வேன். அதாவது, நீங்கள் தினமும் கிரீம் பயன்படுத்திவந்தால், லோஷன் வகையான பொருட்களை, படுக்கும் முன்பு, தடவிக் கொள்ளுங்கள். நீங்கள் லோஷன் விரும்பி எனில், ஹைட்ரேட்டிங் சீரம் பயன்படுத்தி பாருங்கள். அதேபோல, லோஷன் தடவும் முன்பு, எங்கே தடவுகிறோம் என்பதில் கவனம் தேவை. மறந்தும்கூட மூக்கின் மீது தடவ வேண்டாம். அங்குதான் நிறைய எண்ணெய் சுரப்பிகள் உள்ளன. 
    Next Story
    ×