search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பட்டுச்சேலையை பல ஆண்டுகள் பளபளப்பாக பராமரிக்க வழிகள்
    X
    பட்டுச்சேலையை பல ஆண்டுகள் பளபளப்பாக பராமரிக்க வழிகள்

    பட்டுச்சேலையை பல ஆண்டுகள் பளபளப்பாக பராமரிக்க வழிகள்

    பட்டு சேலையை சரியான முறையில் பராமரித்து வந்தால் பல ஆண்டுகள் வரை அதன் பளபளப்பும், மென்மையும் போகாது.
    கடையில் இருந்து பட்டுச்சேலையை எடுத்து வந்ததும், இது அசல் பட்டு சேலைதானா? என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டு விடும். அதை எளிதான முறையில் கண்டுபிடிக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதாவது சேலையின் ஓரத்தில் தொங்கும் நூலை வெட்டி அதில் தீ வைத்தால், அது நின்று எரியும். அதுதான் அசல் பட்டு.

    ஆனால் கலவையான பட்டு சேலையின் நூலை வெட்டி அதில் தீ வைக்கும்போது, அதன் நூல், தலை முடி எரிவதைபோன்று சுருங்கிக்கொண்டே செல்லும். பொதுவாக சிலர் பட்டு சேலை என்றாலே அதிக எடை கொண்டதாக இருக்கும் என்று எண்ணுகிறார்கள். தற்போது நவீன விசைத்தறிகள் மூலம் சேலை நெய்யப்படுவதால், அதன் எடை குறைவு. அத்துடன் டிசைன்கள் அதிகம். அசல் பட்டு சேலையின் ஆயுட்காலம் 100 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருக்கும்.

    பட்டு சேலையை மற்ற துணிகள் போல துவைத்துவிடக்கூடாது. பட்டு சேலையில் அழுக்கு மற்றும் கரையை எடுக்கக் கூடிய திரவங்கள் கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தலாம். சிலர் தெரியாமல் பட்டு சேலையை கையாளுவதால் அதன் பளபளப்பு குறைந்துவிடும்.

    அத்துடன் குறைந்தது 6 மாதத்துக்கு ஒருமுறை வெயிலில் ஒருமணி நேரம் காய வைக்க வேண்டும். மாதத்துக்கு ஒருமுறை சேலையின் மடிப்பை மாற்றி மடிக்க வேண்டும். சிலர் பட்டு சேலையை உடுத்தி விட்டு கழற்றியதும், அதை மடித்து வைத்து விடுவார்கள். அவ்வாறு செய்யக்கூடாது.

    உடலில் உள்ள வியர்வை அதன் மீது பட்டு இருக்கும். அதை காயவைத்துவிட்டு வைக்கும்போது எந்த பாதிப்பும் வராது. குறிப்பாக பட்டு சேலையை சரியான முறையில் பராமரித்து வந்தால் பல ஆண்டுகள் வரை அதன் பளபளப்பும், மென்மையும் போகாது. 
    Next Story
    ×