search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முளைகட்டிய பச்சைப் பயறு உலர் பழவகை சாலட்
    X
    முளைகட்டிய பச்சைப் பயறு உலர் பழவகை சாலட்

    முளைகட்டிய பச்சைப் பயறு உலர் பழவகை சாலட்

    முளைகட்டிய பச்சைப் பயறு, டிரை ஃப்ரூட்ஸ் சேர்த்து சாலட் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சாலட் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    தேவையான பொருட்கள் :

    முளைகட்டிய பச்சைப் பயறு - 1 கப்
    பாதாம் -10 (துருவவும்)
    பிஸ்தா - 10 (துருவவும்)
    முந்திரி - 10 (துருவவும்)
    பேரீட்சை பழம் - 10 (நறுக்கவும்)
    உலர் திராட்சை - ஒரு டீஸ்பூன்
    தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி அளவு
    உப்பு - தேவையான அளவு

    முளைகட்டிய பச்சைப் பயறு உலர் பழவகை சாலட்

    செய்முறை:

    முளைகட்டிய பயறுடன் சிறிதளவு உப்பு கலந்து இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ளவும்.

    அதனுடன் பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீட்சை, உலர் திராட்சை ஆகியவற்றை கொட்டி கிளறவும்.

    பின்னர் தேங்காய் துருவல் தூவி சுவைக்கலாம்.

    அருமையான முளைகட்டிய பச்சைப் பயறு உலர் பழவகை சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×