search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நகங்களின் அழகை, ஆரோக்கியத்தை பாதுகாக்க செய்ய வேண்டிவை
    X
    நகங்களின் அழகை, ஆரோக்கியத்தை பாதுகாக்க செய்ய வேண்டிவை

    நகங்களின் அழகை, ஆரோக்கியத்தை பாதுகாக்க செய்ய வேண்டியவை

    பொதுவாக சிலருக்கு நகங்கள் எளிதில் உடைந்துவிடும் தன்மையோடு காணப்படும். இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும்.
    பொதுவாக சிலருக்கு நகங்கள் எளிதில் உடைந்துவிடும் தன்மையோடு காணப்படும். இதற்கு காரணம், சரியான ஊட்டம் இல்லாததுதான். அதுமட்டுமின்றி ஈரப்பதம் குறைபாடு காரணமாக நகங்கள் அடிக்கடி பலவீனமடைகின்றன.

    அதிக நாட்கள் நகபூச்சு உபயோகித்தல், நகங்களை அடிக்கடி தண்ணீரில் நனைத்தல், முதுமை, ஹைபர் அல்லது தைராய்டு பிரச்சினை, தோல் சம்பத்தப்பட்ட நோய்கள், நுரையீரல் பாதிப்பு, தோலழற்சி, இரத்த சோகை, பூஞ்சை தொற்று போன்றவையும் நகங்கள் உடைய காரணமாக அமைகின்றது.

    இதனை போக்க பியூட்டி பாலர்களுக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். தற்போது அவை என்னென் என்பதை பார்ப்போம்.

    * இரவில் விரல் மற்றும் நகத்தில் சிறிது வெண்ணெய் தடவவும். விரல் நகங்கள் உறுதியாக இருப்பதற்கு வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றை விட்டு, கைகளை அமிழ்த்துங்கள். வாரம் இருமுறை செய்து பாருங்கள். நகங்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.

    * நகம் வெட்டவேண்டுமென்றால் தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினால் எளிதாக வெட்டலாம். ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.

    * தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி சிறிது உப்புக் கலந்து அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால் விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். நகங்கள் அடிக்கடி உடைந்து போகாமல், கோணலாக வளைந்து வளராமல் நேராக வளர கால்சியம் சத்துள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும்.

    * பப்பாளிப்பழம் எடுத்து அதில் சிறிதளவை மசித்து கூழாக்கி அதனோடு கஸ்தூரி மஞ்சள் சிறிதளவு கலந்து பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவினால் நாளடைவில் தோல் நல்ல மிருதுவாகவும் பளபளப்பாகவும் வரும்.

    * நகங்கள் ஆரோக்கியமாக வளரும். தூங்குவதற்கு முன் கை கால்களுக்கு வேஸ்லின், பெட்ரோலியம் ஜெல்லி, ஆலிவ் எண்ணெய் என்று பூசினால் நகங்கள் பலம்பெறும்.
    Next Story
    ×