என் மலர்

  ஆரோக்கியம்

  கைகள், கால்களின் வறட்சியை போக்கும் அசத்தலான டிப்ஸ்
  X
  கைகள், கால்களின் வறட்சியை போக்கும் அசத்தலான டிப்ஸ்

  கைகள், கால்களின் வறட்சியை போக்கும் அசத்தலான டிப்ஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெயில்காலத்தை விட குளிர்காலத்தில் கை, கால் வறட்சியடைந்து காணப்படுவதுண்டு. இதற்கு கிரீம்களை விட இயற்கை முறையின் தீர்வு காண முடியும்.
  நம்மில் சிலருக்கு வெயில்காலத்தை விட குளிர்காலத்தில் கை, கால் வறட்சியடைந்து காணப்படுவதுண்டு. இதற்கு மிகவும் குளிர்ச்சியான காற்று தான் காரணம். அதிகப்படியான குளிர்ச்சியான காற்று பட்டு, அதனால் கைகளில் உள்ள இயற்கை எண்ணெய்கள் வறட்சியடைந்து, கைகள் சொறிப் பிடித்தது போன்று காணப்படும். இதற்கு கிரீம்களை விட இயற்கை முறையின் மூலம் எளிதில் நீக்க முடியும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

  * குளிர்காலத்தில் ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் போது கை, கால்களுக்கு தடவி வந்தால், சருமத்திற்கு வேண்டிய ஈரப்பசை கிடைத்து, கை, கால்களில் உள்ள வறட்சி நீங்கும்.

  * மில்க் கிரீம் ஓர் சிறந்த மாய்ஸ்சுரைசர். மில்க் கிரீம் கொண்டு தினமும் மசாஜ் செய்து வாருங்கள். ஏனெனில் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செல்கள் உருவாக வழிவகுக்கும்.

  * தேனை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து, அதோடு சிறிது சர்க்கரை கலந்து சருமத்தை ஸ்கரப் செய்து வர, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறி, சருமத்தின் ஈரப்பசை அதிகரித்து, சருமமும் பொலிவோடு இருக்கும்.

  * குளிர்காலத்தில் தயிரை தினமும் கை, கால்களுக்கு தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, சருமத்தின் ஈரப்பசை தக்க வைக்கப்படும்.

  * தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை கை, கால்களுக்கு தடவி வந்தால், கைகளில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கலாம்.

  * தினமும் பாலை கை மற்றும் கால்களுக்கு தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரில் நனைத்த காட்டன் கொண்டு துடைத்து எடுத்தால், கைகளுக்கு ஈரப்பசை கிடைத்தவாறும் இருக்கும், கைகளில் உள்ள இறந்த செல்களும் வெளியேறிவிடும்.

  * ஓட்ஸ் பொடி செய்து, பால் சேர்த்து கலந்து, அதனை கைகளில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், கைகளில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதோடு, ஈரப்பசையும் தக்க வைக்கப்படும்.
  Next Story
  ×