search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இளம் வயதில் ஏற்படும் இளநரை
    X
    இளம் வயதில் ஏற்படும் இளநரை

    இளம் வயதில் ஏற்படும் இளநரை- தடுக்கும் வழிமுறையும், உணவும்

    இளநரைக்கு பாரம்பரியம் மற்றும் ஹார்மோன்கள்தான் காரணம் என்றாலும் சரியான உணவு முறைகளைக் கடைப்பிடிக்காமல் போவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது.
    வயதானவுடன் தலை நரைத்துப் போவது என்பது இயற்கையானது. ஆனால் பத்து பதினைந்து வயதிலேயே சிலருக்கு இளநரை தோன்ற ஆரம்பித்து விடும். இதற்குப் பாரம்பரியம் மற்றும் ஹார்மோன்கள்தான் காரணம் என்றாலும் ரசாயன குணமுள்ள ஷாம்பூ மற்றும் சோப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், சரியான உணவு முறைகளைக் கடைப்பிடிக்காமல் போவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது. இளம் வயதில் நரை ஏற்பட்டால் அதனைத் தவிர்த்து சரி பண்ண முடியும்.

    குறைபாட்டை நீக்கும் முறைகள்:

    1. சீயக்காய், நெல்லிக்காய், கடுக்காய், பயற்ற மாவு போன்ற பொருள்களைத் தலைக்குப் பயன்படுத்தலாம்.

    உணவு:

    இரும்புச் சத்துள்ள உணவுகளான கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, மீன் போன்றவற்றைச் சரிவிகிதமாக சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டு வந்தால் நரைமுடியை 10 சதவீதம் தவிர்க்க முடியும். பி காம்ப்ளக்ஸ், கால்சியம், இரும்புச்சத்து, புரதச் சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    கூந்தலுக்கு எப்பொழுதும் எண்ணெய்ப்ப்பசையும், நீர்ச்சத்தும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஹென்னா பயன்படுத்தி நரைமுடி தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம். ஹென்னா பயன்படுத்தும்பொழுது முறையான பயிற்சி வேண்டும். சரியான முறையில் ஹென்னாவைச் சேர்த்துப் போட வேண்டும். ஷாம்பூ அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தும்பொழுது ஒரு கோப்பை தண்ணீரில் ஷாம்பூவைக் கலந்து பின்பு பயன்படுத்த வேண்டும். அப்பொழுது ஒரே இடத்தில் ஷாம்பூ இல்லாமல் பரவலாக இருக்கும்
    Next Story
    ×