search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கொய்யாப்பழ தோல்
    X
    சருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கொய்யாப்பழ தோல்

    சருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கொய்யாப்பழ தோல்

    கொய்யாய் பழத்தின் தோலை பயன்படுத்தி நம் வீட்டிலேயே பேஸ் பேக் தயார் செய்து, சருமத்தில் பூசி கொள்வதினால், சருமத்திற்கு புது பொலிவு கிடைக்கும். மேலும் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படும்.
    கொய்யாய் ஒரு மருத்துவம் குணம் வாய்ந்த பழமாகும். ஆனால் கொய்யாய் அழகை அதிகரிக்கவும், சருமத்தை பளபளப்பாகவும் மாற்றக்கூடிய திறன் கொண்டது. கொய்யாய் பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, பி மற்றும் சி நம் உடலில் கொல்லேஜன் என்ற புரதத்தின் உற்பத்தியை அதிகரிக்கின்றன. இதனால், சூரியனின் கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கின்றது. ஒளிரும் சருமம் கொய்யாவின் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளன. இது உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும். சருமத்தை தளர்த்தி மென்மையாக்கும். கொய்யாய் பழம் தோலை பயன்படுத்தி சருமத்தை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள படி ஃபேஸ்பேக் தயாரித்து வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தெரியும்.

    தேவையானவை:

    தேன் - 1 தேக்கரண்டி
    கொய்யா பழத்தின் தோல் - தேவையான அளவு

    செய்முறை

    முதலில் கொய்யாப்பழத்தின் தோலை சீவிக்கொள்ள வேண்டும். சீவப்பட்ட தோலை மிக்ஸியில் பசை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பசையுடன் 1 தேக்கரண்டி அளவு தேனை சேர்த்து நன்கு கலக்கவேண்டும். இதை முகத்தில் பூசி 20 நிமிடம் அப்படியே விடவேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகம் கழுவவேண்டும். கொய்யாவிலுள்ள நீர்ச்சத்து உங்கள் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை அளிப்பதோடு, தோலுக்கு மிருதுவான, ஆரோக்கியமான தோற்றத்தையும் அளிக்கிறது.

    கீழே தரப்பட்டுள்ள முறைப்படி ஃபேஸ்பேக் செய்து, வாரம் இருமுறை பயன்படுத்தி வந்தால் சருமத்தின் வறட்சி நீங்கி, புதுப்பொலிவு கிடைக்கும்.

    தேவையான பொருட்கள்:

    ஓட்ஸ் - 1 மேசைக்கரண்டி
    முட்டை மஞ்சள் கரு - 1
    தேன் - 1 மேசைக்கரண்டி
    கொய்யா - ½ பழம்

    செய்முறை:

    முதலில் கொய்யாவை சீவிக்கொள்ள வேண்டும். 1 மேசைக்கரண்டி ஓட்ஸ் எடுத்து பொடியாக்கிக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் பொடி எடுத்து, அதனுடன் 1 மேசைக்கரண்டி தேன், சீவப்பட்ட கொய்யா மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். இதை முகத்தில் பூசிக்கொள்ளவும்.

    20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி, முகத்தை மெதுவாக ஒத்தி உலர விடவும்.கொய்யாவிலுள்ள வைட்டமின்கள் உங்கள் சருமத்திற்கு புத்துணர்வு அளித்து பளபளப்பான தோற்றத்தை அளிக்கும். சோகையான தோற்றத்தை மாற்றி, பொலிவான தோற்றத்தை அளிக்கும்.
    Next Story
    ×