என் மலர்

  ஆரோக்கியம்

  கண்டந்திப்பிலி பருப்பு ரசம்
  X
  கண்டந்திப்பிலி பருப்பு ரசம்

  கண்டந்திப்பிலி பருப்பு ரசம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குளிர் காலத்தில் உண்டாகும் ஆஸ்துமா, மூக்கடைப்பு, நீரேற்றத்தால் உண்டாகும் தலைவலிக்கு கண்டந்திப்பிலி சிறந்த மருந்தாகும். இன்று கண்டந்திப்பிலியில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள்

  புளி தண்ணீர் - 2 கப்,
  தக்காளி - 1,
  துவரம்பருப்பு - 1 கப் (வேகவைத்தது),
  மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
  உப்பு - தேவையான அளவு,
  கொத்தமல்லி இலை - சிறிது.

  வறுத்து அரைக்க…

  கண்டந்திப்பிலி - 5 துண்டு,
  சிவப்பு மிளகாய் - 2,
  மிளகு - 1/2 டீஸ்பூன்,
  பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,
  தேங்காய்த் துருவல் - 1/2 டீஸ்பூன்.

  தாளிக்க…

  நெய் - 1/2 டீஸ்பூன்,
  கடுகு - 1/2 டீஸ்பூன்.

  கண்டந்திப்பிலி பருப்பு ரசம்

  செய்முறை

  தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நெய்யில் வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

  புளி தண்ணீர், தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

  புளி பச்சை வாசனை போன பின் அரைத்த மசாலா மற்றும் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து நுரை வந்தவுடன் இறக்கவும்.

  பின்பு நெய்யில் கடுகு தாளித்து ரசத்தில் கொட்டவும்.

  கடைசியாக மேலே கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.

  சூப்பரான கண்டந்திப்பிலி பருப்பு ரசம் ரெடி.

  இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  Next Story
  ×