search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கூந்தல் உதிர்வு, பொடுகு தொல்லையா? இதோ இயற்கை முறையில் அற்புதமான தீர்வுகள்
    X

    கூந்தல் உதிர்வு, பொடுகு தொல்லையா? இதோ இயற்கை முறையில் அற்புதமான தீர்வுகள்

    தலைமுடி உதிர்வு, வழுக்கைப் பிரச்சனை, இளநரைமுடி, போன்ற அனைத்து வகையான கூந்தல் பிரச்சனைகளுக்கு இயற்கையில் சில அற்புதமான தீர்வுகள் உள்ளன.
    தலைமுடி உதிர்வு, வழுக்கைப் பிரச்சனை, இளநரைமுடி, போன்ற அனைத்து வகையான கூந்தல் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு இயற்கையில் சில அற்புதமான தீர்வுகள் இதோ!

    வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து, அந்த நீரில் தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

    கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

    வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

    வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.



    இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

    ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ ஆகியவற்றை இடித்து தூள் செய்து, தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி, ஊறவைத்து தலைக்கு தேய்த்து வந்தால், முடி கருப்பாக வளரும்.

    காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால், முடி கருமையாகும்.

    முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது தலைமுடியின் வளர்ச்சியை தூண்டி, அடர்த்தியாக வளர உதவுகிறது.

    முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி அதை தினமும் தலையில் தேய்த்து குளித்து வரலாம்.

    கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

    சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவி வந்தால், முடி நன்றாக வளரும்.
    Next Story
    ×